Saturday, August 27, 2016

இன்று கோகுல கண்ணனின் பிறந்த நாள்

இறை மனிதருள் மானிடராக மலர்ந்த நாள். கண் இருந்தும் குருடராக இருளில் திரிந்த மனித கூட்டத்திற்கு கதிரவனாய் வந்தவன் எங்கள் கண்ணன். வாழ்விற்கும் சாவிற்கும் இடைப்பட்ட போர்க்களத்தில் நின்று ஆடி கொண்டு இருக்கும் ஆத்மாவிற்கு அருளிய பரம ஆத்மா .

எப்போதும் எதிர்மறை எண்ண அம்புகளால் துளைக்கப்பட்டு துன்பப்படும் மனது , இறையை துணைக்கு அழைத்தால் , இறை வந்து நிற்கும், பாதகமாய் யோசிக்க வைக்கும் பாணங்களை பதறடித்து , நம் மனதை பாதுகாக்கும் என்று கருத்தை கருத்தரிக்க வைக்கவே கண்ணன் களம் கண்டான் நம் புண்ணிய பாரதத்தில். 

பேதையாக கலைந்து கிடைக்கும் சிந்தனையில் , கீதையாக கண்ணன் உள் இறங்க, கள்ளுண்ட கள்வனாக கவனம் எல்லாம் கண்ணன் மேலே குவிகிறது. எங்கள் கண்ணன் வரலாறு சொல்லாமல் , பாரதத்தின் வரலாறு சொல்ல படுவதில்லை. கண்ணனை மறுத்து இங்கே வேறு கதைகள் இல்லை.

ஊசலாடும் உள்ளத்திற்கு அவன் சொன்ன உபதேசத்தை தவிர்த்து வேறு வார்த்தை உலகில் இல்லை. எங்கே எல்லாம் துர் சிந்தனையும் , நற் சிந்தனையும் நேர் கோட்டில் நிற்கிறதோ அங்கே கீதை வரும் அதன் உடன் எங்கள் கண்ணன் வருவான் மற்றும் ஒரு களம் காண " கல்கியாக"

கல்கியின் அவதார திரு நாளை ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கும் அனைவருக்கும் கண்ணன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்


No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...