Sunday, August 23, 2015

சேலத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழி!!

சேலத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழி மிகுந்த வலியை கொடுக்கிறது. திருநள்ளாரில் இருந்து திருவண்ணாமலை செல்ல எத்தனித்த என்னை, திருநள்ளார் கோவிலில் முடித்த உடன் வீடு தான் செல்ல வேண்டும் என்று கோவிலில் இருந்தவர்கள் சொல்லி விட , தந்தையும் அவ்வாறே செய் என்று சொல்லிவிட , சேலம் வீட்டிற்கு வந்து விட்டு , அன்று இரவே திருவண்ணாமலை நோக்கி கிளம்பினேன்.

வாகனத்தில் செல்ல தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால், பேருந்தில் பயணித்தேன். ஊத்தங்கரை வரை சாலைகள் சரியாக தான் உள்ளன. அதற்கு பிறகு அது சாலைகள் இல்லை, சவக்குழிகள். எப்படி தான் மக்கள் இந்த வழியில் பயணத்தை மேற் கொள்கிறார்கள் என்று கவலையாக இருந்தது.
உடம்பும் மொத்தமும் வலி. பெரியவர்கள் தடுமாறி போனார்கள். குழந்தைகள் பேருந்தின் ஒவ்வார் அதிர்விற்கும் அதிர்ந்து அழுதது.

எந்த தனியார் பேருந்தும் அந்த சாலையில் வருவதில்லை. சாலைகள் போடாத அரசாங்கத்தை திட்டுவதா அல்லது எப்படியும் அரசாங்க பேருந்து இந்த வழியில் வரும் என இந்த சாலைகள் ஓரத்தில் காத்து கொண்டு இருக்கும் மக்களின் நம்பிக்கையை பொய் என்று ஆக்கமால், மிகவும் சிரமத்திற்கு இடையில் பேருந்தை இயக்கம் ஓட்டுனரை பாராட்டுவதா என்று புரிய வில்லை.

தட்டு தடுமாறி தவழந்த பேருந்து ,.செங்கத்திற்கு சற்று முன்பாக தொடர முடியாமல் நின்று போனது இரண்டு பனிரெண்டு மணியளவில். நடத்துனர் பின்னாடி வந்த இன்னோர் பேருந்தின் நடத்துனருடன் பேசி எங்களை அதில் ஏற்றி விட்டார்.

அவருக்கு நன்றி சொல்லி விட்டு, கொட்டும் மழை, வயல்காடு மாதிரி இடத்தில பேருந்தில் வெளிச்சம் இல்லாமல், நின்று போன பேருந்துடன் என்ன பண்ண போகிறார்கள் என்ற புரியாமல் திருவண்ணாமலை பயணித்தேன்.

இரவு 1.30 மணி அளவில் கோவில் அருகே இறக்கி விட பட்டோம்.
கிரிவலம் முடிந்து இரண்டு நாட்கள் கழிந்த பிறகும், இரவில் கிரிவலம் அதுவும் மழையில் போய் கொண்டு இருக்கிறார்கள். நெஞ்சத்தை கிள்ளியவனின் கோவில் வாசலில் நெடுண்சாடையாக விழுந்து எழுந்தேன்.

விடுதி எடுத்து உறங்கினேன். அடி முடி காண முடியாதவன் எனக்கு அனுப்பிய பரிசிற்கு என் முடியை காணிக்கையாக கொடுத்து வந்தேன்.

திருவண்ணாமலையில் இருந்து சென்னை பயணமும் மோசமாக உள்ளது. திண்டிவனம் வருவதற்குள் நாம் திண்டாடி போகின்றோம்.

ஒருமுறை நமது முதலமைச்சர் இந்த வழியில் பயணித்தால் , நமது மக்கள் எவ்வளவு பொறுமைசாலிகள் என்று புரிந்து கொள்வர்.

 பின்பு அவர் மாநிலத்தை நடத்துவதில் திறமைசாலியா என மக்கள் புரிந்து கொள்வார்கள்.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...