சாதி மற்றும் ஒருமுறை தனது சதுரங்க விளையாட்டை நடத்தி இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரத்தில் நடந்த நிகழ்வை நியாயபடுத்தி
சிலரின் பதிவுகளை காண்கின்றேன். இதில் உச்சபட்சம் மாற்று மதத்தவரையும்
குற்றம் சொல்லி பதிவுகள் வருகின்றன. அவர்கள் தான் தூண்டி விட்டார்கள்
என்று. என்ன அபத்தம் இது. இந்த விசயத்தில் நம்மிடம் குறை உள்ளது. அதை
விடுத்து மற்றவர் மேல் பழி சொல்வது தகாது.
எங்கே இருந்து வந்தது சாதி. சாமிக்கும் சாதி உண்டோ?.
காலம் காலமாய் தங்களுக்கு ஏவல் செய்து கொண்டு இருந்த கூட்டம், இன்று கால் மேல் போட்டு அமர்ந்தால் இவர்களுக்கு ஏன் வலிக்கிறது. என் வீட்டில் வேலை செய்தவன் தானே இன்று எப்படி போகின்றான் பார் என்று இன்றும் பேசி கொண்டு உள்ள கூட்டம் இன்னும் இருக்கிறது.
என்னை கீழ்சாதி என்று மட்டும் தட்டி என் வம்சத்தை ஆளுமை செய்தாய் அல்லவா, உன் பெண்ணை காதல் செய்து, என் வம்சத்தை உன் பெண் மூலம் ஆளுமை செய்ய வைக்கின்றேன் என்று பேசி திரியும் கூட்டம் ஒருபுறம்.
யார் ஆதிக்க சாதிகள்?
வன்னியர்கள் , தேவர்கள் , முத்தரையர்கள், கவுண்டர்கள், நாயக்கர்கள் இன்னும் சொல்லி கொண்டே போகலாம் இவர்கள் எதன் அடிப்படையில் ஆதிக்க சாதிகள். யார் பட்டயம் எழுதிக் கொடுத்தது?
ஆதிக்க சாதிகள் என்பதாலே இவர்கள் எல்லாரும் குற்றம் புரிந்தவர்கள், கெட்டவர்கள் என்று சொல்ல முடியாது.
கீழ் சாதி என்பதாலே எல்லாரும் நல்லவர்கள் என்று சொல்ல முடியாது.
எல்லா சாதியிலும் நல்லவர்களும் உள்ளனர், கெட்டவர்களும் உள்ளனர்.
இரண்டு பக்கமும் உண்மையும் , குற்றமும், வெறுப்பும் அன்புமும் சேர்ந்தே இருக்கிறது.
சாதி இந்த தேசத்தை பிடித்த சாபக்கேடு. எந்த மதத்தில் இருந்து எந்த மதம் நோக்கி பாய்ந்தாலும் சாதி இன்னும் சாக்கடையாகவே ஓடி மக்களை துரத்தி கொண்டு உள்ளது.
சக மனிதனை சாதி எனும் கள் குடித்து, சவக்குழியில் சரித்து விட்டதை, தங்களது வீர தீர சரித்தரமாக பேசிக் கொண்டு திரியும் தரித்தரங்களுக்கு , சில சாதி தலைவர்கள் தந்திரங்களை சொல்லி கொடுத்து திரிகின்றனர்.
63 நாயன்மார்கள், ஆழ்வார்கள் கதைகளும் இறைக்கு சாதி இல்லை என்று அறிவிக்கிறது. பின்பு சாதியை உலகிற்கு யார் அனுப்பியது.
நாத்திகர்கள் மனு நீதி புத்தகம் என்று சொல்கிறார்கள். எந்த ஆதிக்க சாதியின் வீட்டில் மனு நீதி வைத்து படித்து கொண்டு உள்ளார்கள். அது மிகைபடுத்தப்பட்ட உளறல். ஆனால் அதை உதாசீனம் செய்ய முடியாது.
சாதியை ஹிந்து மதம் அறிவிக்க வில்லை. ஹிந்து மதத்திற்கு சாதி அறிவிக்க பட்டது அன்று ஆளுமை செய்தவர்களின் ஆட்சி அதிகாரத்திற்காக. பின்பு வந்த தலைமுறை அதை தளைக்க வைத்தது.
எப்போதே புதைக்கப்பட்டு இருக்க வேண்டிய சாதிக்கு, இன்று சாதி தலைவர்கள், தனி சங்கம் அமைத்து கொடுக்க, சாதி இன்று சர்வ வல்லமை உடைய சர்வாதிகாரியாய் சளைக்காமல் எல்லா காலத்திலும் கால் ஊன்றி நிற்கிறது.
சாதி பல பேரை நாதி அற்றவர் ஆக்கி இருக்கிறது. முப்பது வருடங்கள் உழைத்து கொஞ்சம் கொஞ்சமாக கட்டி சேர்த்த வீட்டை ,ஒரு மணி நேரத்தில் எரித்து உடைத்து போட்டார்கள் என்று மூதாட்டி சொல்லி அழும் போது, மனம் எல்லாம் வலிக்கிறது, பற்றி எரிகிறது.
ஒவ்வொரு முறையும் சாதியை பற்றி பதிவிடும் போது, ஒரு ஹிந்துவாக என் மனம் நாணம் கொள்கிறது.
மாற்று மதத்தவருடன் எந்த விவாத்திலும் சளைக்காமல் பேசிக் கொண்டு இருக்கும்போது, சாதியை பற்றிய குறிப்புக்கள் சொல்லப்படும் போது, ஒரு நொடி மனம் சோர்வடைந்து போகிறது.
இனபேதமும், நிற பேதமும் அடிப்படையாக கொண்ட அந்த மதங்கள் நம்மை சொல்ல அருகதை அற்றவர்கள் என்றாலும் , நாம் வெட்கி தலை குனிய வேண்டும்.
நியாயமான குற்ற சாட்டை யார் சொன்னாலும் , நாம் நாணி கொள்ள தான் வேண்டும்.
ஹிந்து மத தலைவர்கள் அங்கே தலையிட்டு , இவர்களை சரி செய்ய வேண்டும். சரியான இழப்பிடு பெற்று தர வேண்டும். மற்றும் ஒரு முறை நடக்காமல் இருக்க ஆவண செய்ய வேண்டும்.
எப்போதும் பேதம் அற்ற இறைவனுடனான போரில், சாத்தான் வெவ்வேறு முகம் காட்டும், பின்பு தோற்றோடி போகும்.
இன்று சாதி என்னும் சாத்தனின் உடனான யுத்தத்தில், எல்லாருக்கும் பொதுவான இறை தோற்கடிக்கப்பட்டு , எரிக்கப்பட்டு இருக்கிறது.
மீண்டும் அந்த குற்றமற்ற, எந்த பேதம் அற்ற இறை யுத்தத்தில் இறங்கும்!!
அன்று நாம் சாதி எனும் சாத்தனின் பக்கம் நின்று வாள் வீச போகிறோமா , இல்லை இறையின் பக்கம் நிற்க போகிறோமா?
http://www.bbc.com/tamil/india/2015/08/150816_templecar_burnt

No comments:
Post a Comment