தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கடலூர் – இந்த கோவில் பொது சாலையில் இருந்து ஊருக்கு உள்ளே ஆனால் சற்று ஒதுக்குபுறமாக அமைந்து உள்ளது. இருசக்கர வாகனம் என்பதால் மிக எளிதாக ஒற்றையடி பாதையிலும் செல்கிறது. கிராமம் என்ற சொல்லுக்கு ஏற்றார் போல் அமைந்துள்ளது. கோவில் முன் பக்கம் அழகாய் உள்ளது.
மழை மலையரசனின் (ஈசன்) மாளிகையை தன் கரங்களால் கழுவி உள்ளது. நிலவணிச்சடையன் (ஈசன்) ஆலயம் நிதி அற்று தள்ளாடுகிறது. எந்த ஆலயம் தொட்டாலும், ஈசன் மௌனமாய் நிற்கின்றான். கருவறை அருகே யாரும் இல்லை, எனவே வாய் விட்டு ஈசன் புகழ் சொல்லும் பெயர் சொல்லி என் சிவனே என் சிவனே என தரிசிக்க முடிகிறது. அள்ள அள்ள குறையாத அட்சிய பாத்திரமாய் ஆண்டவன் அருகே நிற்க , தள்ளி நில் என்ற சொல்ல எவரும் இல்லா, தனியே ஓர் பரவசமூட்டும் தரிசனம்.
விவசாயிடம் விளையாட்டு காட்ட, ஈசனே விவசாயி என வந்த இடம். கோவிலில் இருந்த பெரியவர் ஈசன் உணவருந்திய மரத்தை காட்டினார். எவர் உலகில் உள்ள உயிர்களுக்கு எல்லாம் உணவிடுகின்றானோ ,அவன் உணவு அருந்திய இடம். "இங்கே தான் உணவருந்தினாய என் ஈசனே" என்று உள்ளம் உருக, மரத்தை தடவி கொடுத்து சிறிது நேரம் அதன் அருகே அமர்ந்து இருந்தேன்.
சுற்றி சுற்றி வந்த புத்தி இந்த இடத்தில அமர்ந்தவுடன் சமாதி ஆகிறது. குழந்தை வந்து காலை தொட்ட பின்பு தான் சுய நினைவு வருகிறது. சுற்றி பார்க்கையில் சுவர் எல்லாம் பட்டு போய் இருக்கிறது. சில இடங்களில் உடைந்தே போய் இருக்கிறது. உள்ளம் குமறிக் கொண்டு வந்ததது.
அரசாங்கம் அலட்சியமாய் இருக்கிறது , ஹிந்துக்களின் கோவில்களை அழிப்பதற்கு என்றே ஹிந்து அறநிலையத்துறை. கோவில் அருகே முறிந்து கொண்டு இருக்கும் ஆஞ்சுனேயர் கோவில். முடிந்த அளவு பணத்தை அன்பளிப்பாக கோவிலுக்கு கொடுத்து, சிதம்பரம் நடராஜர் கோவில் நோக்கி நகர்ந்தேன்.
சிதம்பரம் சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், அதி பிரமாண்டமாக மண்ணில் பதிந்து உள்ளது. இதன் சிறப்பு பற்றி யாவரும் அறிந்ததே. ஆனால் நடராஜர் சந்நிதியும், திவ்ய தேசங்களில் ஒன்றான பெருமாள் சந்நிதியும் மட்டுமே சிறப்பாய் உள்ளது. படைத்தவனை வைத்து கொண்டு , பணத்தை மட்டுமே குறிகோளாக கொண்டு அலைகிறார்கள். ஆனால் நடராஜர் எந்த நிபந்தனை இன்றி நம்மை நோக்கி நல் வழி சொல்கிறார். பார்த்தது போதும், தாயை போய் பார் என்ற சொல்வது போல் இருக்க, அம்மையை தேடி போனால், மல்லிகை உடை அணிந்து நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறாள். ஒரு முப்பது வயது உடைய பெண்மணி கருவறைக்குள் உயிரோடு நிறைந்து இருக்கிறாள் என்ற உணர்வை தருகிறாள்.
அர்ச்சகர் பணம் தந்தால் சிறிது தொலைவு நின்று பார்ர்க்கலாம் என்று சொல்கிறார். ஒரு அர்ச்சகர் குடும்பம் மிக அலட்டலாய வந்து, , எல்லாரையும் தாண்டி உள்ளே போய் நின்று கொண்டது. என் அருகே நின்று கொண்டு இருந்து இன்னோர் அர்ச்சகர் குடும்பம் , அவர்கள் செய்வது தவறு என்ற வருத்தபட்டர்கள். தீபம் ஆராதனை போது, தாயின் முகம் தெளிவாக தெரிய உருதி எங்கும் உறைந்து போனது. அப்பன் அழகா, அம்மை அழகா என்று.
பெண்ணாகியபெருமான் , எப்பால் காட்டினாலும் அழகு தான். கோவில் சுற்றி வர, வேற்று மத நபர்கள் படிக்கும் இடம் ஆக கொண்டு உள்ளனர் என்று புரிகிறது . நல்ல நிதி வரும் கோவில் ஆனால் வரும் ஹிந்துகளின் மனதை நிர்முலம் ஆக்கும் எண்ணத்துடன் கோவிலில் உள்ளவர்கள் உள்ளனர். சமூகத்தில் கீழ தட்டில் வாழும் மக்கள் , இந்த கோவில் நோக்கி வரும்போது ,கண்டிப்பாக வேறு திசை நோக்கி தள்ளப்படுவர்கள் என்ற கவலையுடன் திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில், சென்று அடைந்தேன்.
ஈசன் அர்ஜுனனுக்கு பாசுபத ஆயுதம் வழங்கிய இடம் திருவேட்களம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் அமைந்து உள்ளதால், சிறப்பாய் உள்ளது. கல்லுரி மாணவர்கள், மாணவிகள் அதிக அளவில் வருகின்றனர். முத்துமேனியுடையவன் (ஈசன்) மீது முறிந்த வில்லால் அர்ஜுனன் அடித்த வடு காட்டுகிறார் அர்ச்சகர். வார்த்தைகள் கரைந்து போய் , விழி வழியாக வழிகிறது. பக்தனுக்கு அருள, தன்னையே தீங்குக்கு உள்ளாகும் தெய்வம் கண்டது உண்டா.
நீ அடி வாங்கி தான் அருள வேண்டுமா என் ஐயனே என்ற கேள்வியுடன் , ஆலயம் சுற்றி வர, சுடர்ச்சடையன் (ஈசன்) இருப்பிடம் சுடர்ஒளியாய் இருப்பது புரிகிறது. ஹிந்து நண்பர்கள் குழு என்ற பலகை ஆலயத்திற்கான உழவார பணி செய்கிறது எனபதை சொல்ல மிக்க மகிழ்வாய் சிவபுரி உச்சிநாதர் திருக்கோயில் செல்ல எண்ணம் கொண்டு பயணத்தை தொடர்ந்தேன்.
No comments:
Post a Comment