Thursday, October 9, 2014

சென்னையில் உள்ள சில சிவன் கோவில்கள்- பயண திட்டம்

நேற்றைய எனது சென்னையில் உள்ள சிவாலய பதிவுகளை கண்டு , சில நண்பர்கள் தொடர்பு கொண்டு, சில தகவல்களை தருமாறும், முடிந்தால் அடுத்த எனது பயணத்தில் இணைந்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
அழைத்து செல்ல எனக்கு தயக்கம் இல்லை. ஆனால் முதல் விசயம் ஆலயம் செல்ல விரும்பினால் தனியாக செல்லவும். இறைக்கும் உங்களுக்கும் மட்டுமே அங்கு உரையாடல். உள்ளே அறியும் ஆவல் தனியாக போனால் மட்டுமே ஓரளவு சாத்தியம். நமக்கு விரும்பிய நேரம் மட்டும் தரிசிக்கலாம். பிறகு மெல்ல நகர்ந்து விடலாம். நமக்கு போதும் போதும் என்ற வகையில் இறைசாந்தத்தில் மூழ்கி போகலாம். அலைபேசியை அணைத்து விடுங்கள்.
முடிந்த வரை இருசக்கர வாகனத்தில் செல்லுங்கள். பல தலங்களை சுலபமாக தரிசிக்கலாம்.முக்கியமாக ஞாயிற்றுக்கிழமை, தவிர்த்து விடுங்கள், எல்லாருக்கும் விடுமுறை என்பதால் கூட்டம் அதிகம் இருக்கும். இன்று ஆலயம் என்பது கூட பொழுதுபோக்கு அட்டவணையில் சேர்க்கப்பட்டு விட்டது என்பதை நினைவில் கொள்க!
நான் என்னை நல்லவனாக உணரும் தருணம் இறைவனின் திரு சந்நிதியில் முன் நிற்கும்போது மட்டுமே. அந்த சில தருணத்தையும் தாரை வார்க்கும் அளவிற்கு நான் தயாளன் இல்லை.
முதலில் நீங்கள் மட்டும் போங்கள், பிறகு உறவுகளை கூட்டி கொண்டு போங்கள். சில கோவில்கள் சிறப்பாக இருக்கும் இடங்களில் காணிக்கையை குறைத்து கொள்ளுங்கள். சில கோவில்களில் இறைஎச்சம் இறைந்து கிடந்தாலும், திருக்கோவில் சிதிலமாகி நிற்கும். அங்கே முடிந்த அளவு காணிக்கையை அதிகமாக போடுங்கள்
.
இங்கே சென்னையில் உள்ள முக்கியமான பழைமையான சிவாலயங்களை பற்றிய படத்தை இணைத்து உள்ளேன். நான் சான்றாதாரமாக கொண்ட புத்தகத்தின் பெயர் “ சென்னை சிவாலயங்கள்” பொன்னம்மாள் என்ற மாதரசி இதை ஒவ்வரு ஆலயத்தின் தல வரலாறுடன் தொகுத்து உள்ளார்.
தேடுங்கள் , தரிசயுங்கள்!! இறைவன் அருள் புரியட்டும்!!

1 comment:

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...