Thursday, October 9, 2014

ஒரு இஸ்லாமிய நண்பர் உடனான விவாதம்.

ஒரு இஸ்லாமிய நண்பர் என்னிடம் நான் இஸ்லாத்திற்கு எதிராக தவறான புரிதல் கொண்டு உள்ளேன் என்று வருத்தப்பட்டார். சிறிது நேரம் விவாதம் செய்தோம். பேச்சு பாலஸ்தீன்ம் வரை சென்று அக்பர் வரை திரும்பியது.
உண்மையில் சொல்லப் போனால் இஸ்லாம் என்ற வார்த்தை அறிமுகபடுத்தியது என் சிறுவயது பள்ளி பாட புத்தகங்கள். கஜினியையும், முஹம்மது கோரியை பற்றி அறிந்த போது இஸ்லாம் எனக்கு அறிமுகம் ஆனது. இந்திய அராசங்கம் இப்படிதான் இந்த நாட்டு மக்களுக்கு அறிமுகபடுத்தியது, கோவில்களை கொள்ளை அடித்து சென்றவர்கள் என்று.
நானும் மதச்சார்பற்ற என்ற கொள்கையை உடையவன் என்பதில் பெரு நம்பிக்கை கொண்டு விளங்கியவன். பாபர் மசூதி இடிப்பின் போது கரசேவகர்கள் மீது பெரும் வெறுப்பு ஏற்பட்டது. பின்னாளில் அந்த மசூதியை நீதிமன்றம் மூலம் பேசி அகற்றி, ராமர் கோவிலை கட்ட முயற்சி செய்து இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன். 
அகற்றி இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் பெரும்பான்மை கூட்டமாக சென்று இடித்தால் சிறுபான்மை மக்களுக்கு பயம் வர தான் செய்யும். அந்த செயலை தவிர்த்து நீதிமன்றம் மூலமாக,செய்து இருக்க வேண்டும் என்று இன்று வரை நம்புகின்றேன்.
குஜராத் கலவரத்தின் போது, முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டதாக சொன்ன போது, எனக்கு நான் சார்ந்து இருந்த ஹிந்து மத மக்கள் மீது கோவம் வந்ததது. ஆனால் கலவரத்தில் 700க்கு அதிகமான ஹிந்து மக்களும் கொல்லப்பட்டதை உச்ச நீதிமன்றம் அறிக்கை சொன்ன பிறகும், குஜராத்தில் முஸ்லிம்கள் மட்டும் கொல்ல பட்டதாக, இஸ்லாமிய அமைப்புகள் திரும்ப திரும்ப சொல்லிய போது, எரிச்சல் வந்ததது. 
ஒரு உயிரின் மதிப்பு கூட அதன் சார்ந்த மதத்தின் மீது வைத்து மதிப்பீடு செய்யபடுவதாக தோன்றியது? முதன் முதலில் என்னுள் தோன்றிய விசயம் இங்கு சிறுபான்மை மக்களின் உயிர் மட்டும் மதிப்பு பெற்றதா ?
ஹிந்துவாகிய நான், முஸ்லிம்கள் தாக்க படுவதை கண்டிக்கும் போது, ஏன் அந்த அமைப்புகள் என் மக்கள் கொல்லப்பட்டதை கண்டிக்க மறுத்தனர் என்ற கேள்வி என்னுள் எழுந்தது.
காஷ்மீர் பண்டிட்கள் . காஷ்மீரை விட்டு துரத்தி அடிக்க பட்ட போது, ஏன் எந்த இஸ்லாம் அமைப்புகளும் காஷ்மீர் ஹிந்துக்களாக பேச வர வில்லை.
இஸ்ரேல் அரசால் கொல்லப்பட்ட குழந்தைளை கண்ட போது, எல்லார்க்கும் வேதனை தந்தது. இஸ்ரேலை கண்டித்து, ஹமாஸ்க்கு ஆதரவாக பல பதிவுகள் இஸ்லாமிய நண்பர்களால் பதிவு செய்யபட்டது. இஸ்ரலை பிடிக்கும் என்றாலும், இஸ்ரேலை கண்டித்து பதிவுகள் போட்டேன்.
ஆனால் அதே ஹமாஸ் சொந்த இன குழந்தைகளை , உளவு சொன்னதாக சொல்லி கொன்ற போது, என் இஸ்லாமிய நண்பர்கள் உட்பட மௌனம் சாதிக்கின்றனர். இது பாரபட்சம் அல்லவா.
சொந்த இன இஸ்லாம் மக்களை கொன்று குவித்து , இந்தியாவிற்கு எதிரான போரை அறிவித்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஆதரித்து பதிவுகள் பதிய பட்டால் உங்களை பற்றி நாங்கள் என்ன நினைப்பது.
குண்டுகளை வைத்து விட்டு . அதற்கு முஸ்லிம் பெயர் கொண்ட அமைப்புகள் பொறுபேற்று கொண்டு , ஜிஹாதிற்கு ஆக செய்தோம் என்ற சொன்ன போது தான், அது இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று அரசாங்கம் அறிவித்தது.
எனக்கு தெரிந்த வரை எந்த அரசாங்கமும தானாக சொல்லவில்லை. அவர்களே தங்களை இஸ்லாமிய போராளிகள் என்று அறிவித்து கொண்டனர். போராளிகள் அரசாங்கத்துடன் அல்லவா போர் செய்ய வேண்டும். இங்கே நிராயுதபாணியாக மக்கள் கூடும் கோவில்களையும், சாலைகளையும், குறி வைத்து கொன்று, அது மதத்திற்கு என்று சொன்னால், அதை எப்படி ஏற்பது. போராளிகள் இங்கே தான் பயங்கரவாதிகள் என்று உருப்பெற்றது.
எல்லா மக்களும் தீவிரவாதிகள் இல்லை என்பதை நாங்களும் ஒத்து கொள்கின்றோம்.ஆனால் அந்த மதத்தை பற்றி அப்படி ஒரு பிம்பம் விழ உங்கள் மக்கள் காரணமா, எங்கள் மக்கள் காரணமா அல்லது அரசாங்கமா என்று சிந்தித்து பாருங்கள்.
சிறும்பான்மை மக்களை அச்சுறுத்தி பெரும்பான்மை மக்கள் பேசினால்/தாக்கினால் , முதல் எதிர்ப்பு ஒரு ஹிந்துவிடம் இருந்து தான் வரும். ஆனால் பெரும்பான்மை மக்களை அச்சுறுத்தி சிறும்பான்மை மக்கள் பேசினால்/தாக்கினால், எந்த சிறுபான்மை இன மக்களும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.
நீங்கள் அதை ரசிக்கிறீர்கள் என்று எங்களுக்கு எண்ண தோன்றுகிறது.
சாதிய கொடுமைகளை நானும் பலமுறை எதிர்த்து உள்ளேன். சாதிய முறையை எதிர்ப்பது, என்பது என் மதத்திற்கு எதிரானது அல்ல. என் மதத்தை மீட்டு எடுத்து மேல் நோக்கி நகர வைப்பது.
என் மதம் என்பதாலே அதை தூக்கி பிடித்து கொண்டு திரிய மாட்டோம். யார் தவறு செய்தாலும், தவறு தவறுதான்.
ஹிந்து மதமும், அதன் மக்களும் , சகிப்புதன்மை கொண்டவை. எங்கள் மக்கள் பலர் இன்று மதச்சார்பற்ற என்ற நிலை ஹிந்து மதத்தையும், அழிவுக்கு கொண்டு போக வைக்கும் என்ற பயத்தை உணர தொடங்கி உள்ளனர்.
அப்படி அந்த பயத்தை உணர்த்தியது எந்த ஹிந்து மத தலைவரும், அமைப்பும் இல்லை என்பது சத்தியம்
நட்பாய் , நடுநிலையாய் இருக்க விரும்புகிறோம,
அதுவே இந்த நாட்டை இதுவரை நடத்தி கொண்டு போகிறது.
அது தொடர போகிறதா என்பதே என் கேள்வி!!

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...