"பதிவை போட்டு என்ன விசயத்தை சாதிக்க போகிறிர்கள்" ஒரு தங்கையின் கேள்வி. என்ன விஷயத்தை சாதிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்கிறீர்கள் என்று கேட்டேன். வேறு எதாவது எழுதுங்கள் என்றார். நீங்களே சொல்லுங்கள் எதை பற்றி எழுதலாம் என்றேன். எதாவது எழுதுங்கள் , மத மாற்றத்தை தவிர. ஏன் என்று கேட்டேன்.
தயக்கமாய் உள்ளது அது மட்டும் அன்றி தண்ணிர், மின்சாரம் போன்ற பிரச்னைகளை பற்றி எழுதலாமே என்றார். இங்கே தான் பிரச்சனை. இந்தியா விளையாட்டு போட்டிகளில் தோற்றுவிட்டால், முக நூலில் வந்து இவர்கள் அழுது புலம்பும் போது, தண்ணிர், மின்சாரம் போன்ற பிரச்சினைகளை பற்றி வருத்தபடலமே யாராவது சொன்னால் கொலை வெறிக் கொண்டு சொன்னவர்களை பார்ப்பார்கள்.
இவர்கள் ஒரு துரும்பை கூட எதற்கும் எடுத்த போட மாட்டார்கள். ஆனால் நாமாக ஒரு விஷயத்தை எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்று நினைத்தால் உடனே நம்மிடம் வேறு விஷயத்தை தூக்கி கொண்டு வருகிறார்கள்.
இந்த தங்கைதான் கிருஷ்ண ஜெயந்தி அன்று தனது குழந்தைகளுக்கு, கோகுல கண்ணன் போல வேடம் அணிவித்து எங்கள் வீட்டில் கண்ணன் என்று பதிவை போட்டார். இவர் மட்டும் அல்ல பலரும் அந்த மாதிரி புகைப்படங்களை வலைத்தளத்தில் ஏற்றினார்கள். மிக்க மகிழ்ச்சி.
அடையாளம் என்று ஒன்று இருந்தால் தானே அணிவிக்க முடியம். கண்ணன் என்ற அடையாளத்தை தாங்கி பிடிப்பது ஏது?
நீங்கள் கண்ணனை கொண்டாடி விட்டால் போதுமா. உங்கள் குழந்தைகள் மற்றும் அவர்களின் குழந்தைகள் , அவர்களுக்கு வர போகும் பல தலைமுறைகளுக்கு இந்த மாதிரி கண்ணன் வேடம் அணிவித்து அழகு பார்க்க வேண்டாமா?. அதற்கு நமது அடையாளமான நமது மதத்தை பாதுகாக்க வேண்டும் அல்லவா.
கண்ணனையும் , சிவனையும் கடவுள் இல்லை என்று சொல்லும் மாற்று மதத்தினர் உங்களை சுற்றி பெருகிக் கொண்டு இருகின்றனர். ஹிந்து மதத்தின் மக்கள் தொகை வேகமாய் குறைந்து கொண்டு வருகிறது என்ற குறிப்புக்கள் தெரிவிகின்றன. நீங்கள் கவனிக்க வில்லையா , இல்லை கவனிக்க வில்லை என்பதை போல் நடித்து கொண்டு உள்ளிர்களா. பாகிஸ்தானில் இருந்த ஹிந்துக்களின் நிலை என்னவாயிற்று என்று யோசித்தது உண்டா?. குமரி அம்மனின் மாவட்டமான , கன்னியாகுமரியை, ஏன் கன்னிமேரி என்று மாற்ற முயற்சித்து ஒரு மண்டைகாடு கலவரத்திற்கு வித்திட்டார்கள் என்று என்றாவது படித்தது உண்டா?.
வரலாற்றை புறந்தள்ளி , வீதியில் விழுக பார்கிறிர்கள். இது முட்டாள் தனம் அல்லவா.
எனது தெய்வனகேஸ்வரர் கோவிலின் அழிவை பற்றிய பதிவு, கிட்ட தட்ட 700க்கு மேல் பகிரப்பட்டது. எனது முக நூல் மெசேஜ் மட்டும் 500 யை தாண்டியது. ஆனால் எனது நட்பு வட்டாரத்தில் இருந்த பல பேர்கள் மௌனமாய் இருந்தர்கள்.
சாதாரண மண்புழு கூட தனது எதிர்ப்பை காட்டும். கொடுமை எனில் மிக பெரிய சிவ பக்தர்கள் என்று எனக்கு அறிமுகமான நபர்கள் வாய் பொத்தி மௌனித்தார்கள். ஆனால் மிக சாதாரணமான மனிதர்கள் , பல பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் மனிதர்கள் , அறிமுகம் அற்ற கல்லுரி மாணவர்கள் அந்த பதிவை வேகமாய் பகிரந்தார்கள். தங்களது தனிப்பட்ட கவலைகளை புறந்தள்ளி அந்த தகவலை நமது மக்களிடம் கொண்டு சேர்த்தனர். மெல்ல ஒரு விழிப்புணர்வு பரவியதை பார்க்க முடிந்தது. நீங்கள் செய்திர்களா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதில்
இந்த தங்கைக்கு ஏன் அந்த கவலை வரவில்லை. இத்தனைக்கும் மிக பெரிய பக்தி மான் அவர். எனது பகிர்வை பகிர்ந்து தான் தனது கவலையை சொல்ல வேண்டும் என்று அர்த்தம் இல்லை.
உனக்கும் எனக்குமான , பொதுவான இறை நம்பிக்கைக்கும், அதை தாங்கி பிடிக்கும் எனது கலாச்சார அடையாளதிற்காக , எனது சக்திக்கு உட்பட்டு, எனக்கு தெரிந்த வழியில் நான் போராடி கொண்டு இருந்தால், என்னை நீ ஆதரிக்க வேண்டாம் , ஆனால் முடிந்த வரை என்னை குறை சொல்லாமல் இரு.
நான் மட்டும் அல்ல பல நண்பர்களின் நிலையும் அதுதான்.
எதிரி எப்போதும் வெளியில் இல்லை, உள்ளே தான் இருகின்றான் என்ற பழமொழி நினைவுக்கு வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.
No comments:
Post a Comment