நண்பர் ஒருவர் எனது தெய்வநாயகேஸ்வரர் கோவில் பதிவை பகிர்ந்தார். நான் எனது கட்டுரையில் எந்த இடத்திலும், யேசுவை பற்றி ஒரு வார்த்தை தவறாக சொல்ல வில்லை. ஆனால் பதிவுக்கு கருத்து தெரிவித்த நபர் எடுத்தவுடன் ஈசனை இகழ்கிறார். கிறிஸ்தவம் இல்லை எனில் இந்த தேசம் கல்வி அறிவு பெற்று இருக்காது என்று ஏகடியம் வேறு. என்ன மட்டமான சிந்தனை. கிறிஸ்தவம் வரும் முன் இந்த தேசம், எழுத்தறிவே பெற வில்லையா என்ன?.
தமிழன் என்ற உணர்வு இருந்தால் , சங்க இலக்கியம் பற்றி யோசித்து இருப்பார். நீங்கள் திருவள்ளுவரையே கிறிஸ்தவர் என்று சொன்னவர்கள் தானே. ஹிந்து மதம் வந்த கதை இருக்கட்டும். கிறிஸ்தவம் இந்தியாவில் எப்படி வந்தது. கடல் வழியாக தானே. உங்களுக்கும் முன் ஹிந்து மதம் வந்து விட்டதல்லவா.
ஒரு விவாதத்திற்கு இவர் சொல்வதை போல் வைத்து கொண்டால், நான்அந்நிய மதமான ஹிந்து மதத்தை கைவிட்டு, தமிழரின் வழிபாடான இயற்கையை வழி பட தயார். இவர் அந்நிய மதமான கிறிஸ்தவத்தை விட்டு, தமிழர்கள் போல் இயற்கையை வழிபட முடியமா?.
ஹிந்துமதம் தமிழரோடு இணைந்தே உள்ளது என்பதற்கு மித சரியான உதாரணம், தமிழர்கள் பஞ்ச பூதங்களை வழிபடுகின்றனர். பொட்டும் பூவும் உள்ள கலச்சாரம் இது. மற்ற மதங்களின் கோவிலுக்கும் எங்களால் சென்று வழிபாடு நடத்த முடியும். ஏன் எனில் எங்கும் நிறைபவன் இறைவன் என்று நாங்கள் அறிவோம்.
கிறிஸ்தவம் தமிழரோடு இணைந்ததா?. மிக தெளிவாக தமிழரின் கலாசாரம் ஆன, பொட்டையும் , பூவையும் , இயற்கை வழிபாட்டையும், தமிழ் பெயர்களையும் புறந்தள்ளி வைத்து உள்ளது அல்லவா?. கிறிஸ்தவ ஆலயத்தில் மட்டும் இறைவன் உள்ளான் என்று சொல்லி, இறைவனை ஒரு இடத்தில் மட்டும் அடைத்த கூட்டம் அல்லவா நீங்கள்.
இப்போது தான் சில நல்ல கிறிஸ்தவர்கள் இதை பற்றி வருந்தி, திருந்தி, தமிழர் வழி வருகின்றனர. மாதாவை கும்பிடும் சில கிறிஸ்தவர்கள் ஹிந்து கோவிலுக்கும் வர தொடங்கி உள்ளனர்.
இயேசுவின் பாணியில் சொல்வதேன்றால் , "இறையே இவர் அறியாமல் செய்கிறார், இவரை மன்னித்து விடுங்கள்"
No comments:
Post a Comment