ரொம்ப நாளாக halo கேம்மில் multiplayer பகுதியை தாண்ட முடிய வில்லை. killerking என்று பெயர் வைத்து கொண்டு ஒருத்தன் என்னை அந்த விளையாடில் துவம்சம் செய்து அடிப்பான். கிட்டத்தட்ட குறைந்தது ஆறு மாதமாக முயற்சி செய்து கொண்டு இருந்தேன். எப்படி விளையாடினாலும் கடைசியில் அழித்து விடுவான், எங்கோ கனடாவில் இருந்து விளையாடுகின்றான் போல. ரொம்ப நாள் கழித்து இன்று விளையாட request அனுப்பி இருந்தான். சரி இன்றாவது முயற்சி செய்யலாம் என்றென்னி, மூன்று மணி நேரமாக தாக்கு பிடித்து படைகளை கட்டி, பாதுகாப்பு படைகளை கோட்டைக்கு காவல் வைத்து, அவன் மேப்பில் இருக்கும் இடம் பார்த்து அடிக்க வேண்டும் என்று கிளம்பும் நேரத்தில், நண்பரின் நண்பர் என்று ஒருவர் வீட்டிற்கு வந்தார். ஜீ இது ஒண்ணுமே இல்லே ஜி, எல்லா கனரக ஆய்தத்தையும் தூக்கி பின்னாடி போடுங்கள், ஹெலிகாப்டரில் தூக்கி எல்லாவற்றையும் வைத்து கொள்ளுங்கள், மின்னல் வேகத்தில் போய் அடித்து விடலாம் என்று சொன்னார். ஜீ அப்படி எல்லாம் பண்ணால் நம்ம கோட்டை காலியாகி விடும்.
நம்மளை முடித்து விடுவார்கள், மூன்று மணி நேரம் தாக்கு பிடித்து நிலைகளை பலபடுத்தி உள்ளேன், கீழே போவது தான் பாதுகாப்பு, தரை படைக்கு பாதுகாப்பாக வான் படை இருக்கட்டும் என்றேன், இந்த இடத்தில் என்னால் save கூட செய்ய முடியாது, என்னால் மீண்டும் இவ்வளுவு நேரம் செலவு செய்ய முடியாது. என் நட்பு படைகளை முதலில் அழித்து விட்டான், நான் மட்டும் தான் எஞ்சி இருக்கின்றேன்.
நாம் பொறுமையாக நகர்ந்தால் மட்டும் தான் முழு வரைபடம் தெரியும். எதிரி mapல் இடம் மாறி கொண்டே இருப்பார் என்று சொல்லி பார்த்தேன். குருட்டாம் போக்கில் போய் இறங்க முடியாது ஜி என்றேன். மனுஷன் கேட்டாரா. ஜீ எத்தனை முறை விளையாடி உள்ளேன் சொல்லி, மொத்த படையையும் ஏற்றி, காவலுக்கு நின்ற படைகளையும் ஏற்றி, நேராக மேப்பில் ஒரு இடத்தில இது தான் killer king கோட்டையின் பின்புறம் என்று சொல்லி, நேராக எதிரி படைகளின் மையத்தில் போய் இறக்கி விட்டு சோலியை முடித்து விட்டார். மூச்சு விட கூட நேரம் இல்லை, மொத்தமாக முடித்து விட்டான் killer. அடுத்த ஒரு நிம்டத்தில், என் மொத்த கோட்டையும் அழித்து வெற்றி பெற்று விட்டான். next time best of luck rajendra chola என்று சொல்லி போய் விட்டான்.
ஜீ multiplayer விளையாடி இருக்கீர்களா என்று அந்த நபரிடம் கேட்டேன், multiplayer ன்னா என்ன ஜி என்றாரே பார்க்கலாம். மயக்கம் போடாத குறை தான் எனக்கு . வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வந்தது. நமக்கு மட்டும் தான் இப்படி நடக்கும்.
No comments:
Post a Comment