Sunday, January 21, 2018

பரதம் ஆடும் பெண்கள்

என்ன சொல்லுங்க, பரதம் ஆடும் பெண்களையோ, அவர்களை பார்த்தலோ ஒரு மிக பெரிய மரியாதையும் ஈர்ப்பும் வருகின்றன. அவர்களை பார்த்தால் ஒரு வித சந்தோசுமும் பெருமிதமும் வருகின்றன. அதுவும் வெளி தேசத்தில் பரத உடையுடன் அயல் நாட்டு பெண் சாலையில் கடந்து போவதை பார்த்தால் உள்ளம் பரவசம் அடைகிறது. மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்து நண்பர்களிடம் சொன்னால் ஏளனமாக சிரிக்கிறார்கள். திருவான்மியூர் கோவிலில் ஒரு இளம்பெண் ஆடுவார், எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு நின்று பார்த்து விட்டு வருவேன், அடுத்த முறை எப்ப ஆடுவார்கள் என்று விசாரித்து விட்டு போய் முதல் ஆளாக போய் கடைசியில் நின்று பார்த்து விட்டு வருவேன். பக்கத்தில் நிற்பவர்கள் ஏதோ ஏதோ முத்திரை என்று சொல்வர்கள். நல்லா ஆடுகிறார்கள் என்று சொல்வார்கள். எனக்கு ஒன்றும் புரியாது, ஆனால் இது சிவனின் அபிநயம் என்று சொல்லும் போது , உள்ளம் அதிர தொடங்கி விடும். நண்பர்களிடம் சொன்ன போது சிரித்தார்கள். வந்து பார்த்து பெண் அழகாக இருக்கிறார்கள் என்றார்கள். போய் பேசு சுகன் என்றார்கள்.
ஒரு பெண்ணின் அழகில் மயங்கும் வயது தான் அப்போது எனக்கு, ஆனால் பரத உடையில் தோற்றமளிக்கும் ஒரு பெண்ணை அப்படி பார்க்க ஏனோ தோன்ற வில்லை. என் அப்பன் ஈசனின் எல்லா கோலத்தையும் அபிநயம் காட்டி ஆடினார்கள். அர்த்தநாரிசுவார் கோலம் கொண்டு, இரு கால் மாற்றி ஒரு கால் அபிநயம் பிடிக்கும்போது சப்த நாடியும் ஒடுங்கி போனது. சில பாட்டிமார்கள் கீழே விழுந்து வணங்கினார்கள். என்னை அறியாமல் நானும் மண்டி இட்டு அழுது இருக்கின்றேன். “உன்னை அறிவது அடைவதும் எப்படி என்று தெரியாமல் அலைகின்றேன் ஈசனே, வாமனமாக வந்தவன் ஒரு கால் வைத்து ஒருவனை மண்ணுள் இழுத்தது போல், ஏற்றிய ஒரு காலை என் மேலும் வைத்து உன் பாதத்தில் என்னை ஏற்க கூடாதா என்று மனதிற்குள் புலம்பி இருக்கின்றேன்”. உடன் வந்த நண்பர்கள் கேலி செய்தார்கள்.
உன்னை விட கண்டிப்பாக மூன்று நான்கு வயது சின்ன பெண் அவர்கள், மண்ணில் மண்டி ஈடுகிறாய் என்றார்கள். இந்த பிறவியில் உயிரை மறித்து வைத்து இருக்கும் உடல் இருக்கும் வரை, ஈசனின் நடன கோலத்தை நேரிடையாக காண முடியாது, உடலை வெறுத்து ஈசனை தாண்டி உயிர் பறக்கும் போது தான் , ஈசனின் கோலத்தை காண முடியும். அதுவும் உடனடியாக ஈசனிடம் போக முடியாது. பக்கம் பக்கமாய் நிரம்பிக இருக்கும் பாவத்தின் கணக்கிற்கு எல்லாம் கணக்கு சொல்லி விட்டு, அந்த பரமனிடம் போகும் நாள் எக்காலமோ. காரைக்கால் அம்மையார் புராணம் படித்தால் உமையோடு பாகனாக உள்ளம் கவர் கள்வன் இறங்கி, ஆடிய ஆட்டம் பற்றி சொல்கிறார்கள். ஆனால் எப்படி ஆடினான் என்று யார் அறிவார், அந்த அம்மை மட்டுமே அறிவாள். ஆனால் பரதம் ஆடும் பெண்ணே ஆணோ , தத்ருபமாக இம்மையிலே காட்டுகிறார்கள். ஆலகால விஷத்தை ஈசன் எடுத்து அதிரத்தில் வைக்க அகிலாண்டேஸ்வரி அலறி வருவதை அபிநயமாக பிடிக்கிறார்கள். நம் மனமும் சேர்ந்து கரைகிறது. குழந்தை கண்ணனுக்கு யோசதை தாயார் உணவு தரும் நடனங்கள், பக்தியுடன் உற்று கவனித்தால் சரியாக புரியும்.
ஊர் திருவிழாவில், பல்லக்கில் ஏறி வரும் அம்மனை எப்படி பக்தியுடன் பக்தன் கை கூப்பி பார்கின்றானோ , அப்படி தான் பரத உடையில் இருக்கும் நபர்களையும் என்னால் பார்க்க முடியும், இதை யாருக்கும் சொல்லி புரிய வைக்க முடியாது. பரத உடைக்குள் அதை படைத்தவன் தென்படுகின்றான் என்று சொன்னால், மறை கழண்டு விட்டது என்றார்கள். என் காதுகளுக்கு எங்கேயாவது பரதம் ஆடுகிறார்கள் என்றால் யாரிடம் சொல்லமால், போய் பார்த்து விட்டு சத்தம் இல்லாமல் வந்து விடுவேன். பரதம் நம் பாரத தேசத்தின் பொக்கிஷம், பரத கலையை தன்னுள் ஏற்று அதை சரியாக நிகழ்த்தி பறை சாற்றுவார்கள் அதனின் பாதுகாவலர்கள்.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...