திருமாளவன் காஞ்சிபுரத்தையும், ஸ்ரீரங்கத்தையும் இடித்து விட்டு புத்த விகராம் ஆக்க வேண்டும் என்று சொல்கிறார். புத்த விகராத்திற்கு முன்னாடி அங்கே என்ன இருந்தது என்றும் சொல்ல வேண்டும் அல்லவா. ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டு இருக்கும் எங்கள் பெருமானை அகற்ற ஓராயிரம் திருமாளவானாலும் முடியாது. பீரங்கி கொண்டு பிளக்க வேண்டும் என சொன்ன பெரியாரே, எங்கள் பெருமானின் கோவில் வாசலில் பிச்சை காரராக நின்று கொண்டு இருக்கிறார். சரி வரலாறு என்ன சொல்கிறது என்று பாப்போம்.
புத்தர் தோன்றிய காலம் கி.மு 563- கி.மு 480. அதற்கு முன் தோன்றிய மதங்கள் வைதீகம், சமணம். வேதம் இவர்களுக்கு முற்பட்டது. தமிழகத்தின் தொன்மையான நூல் தொல்காப்பியம், இது பல காலத்தில் எழுத பெற்று இருந்தாலும், இதன் தொன்மை என்று சொல்வது கி.மு 4ஆம் நூறாண்டு அல்லது கி.மு 8 ஆம். அதாவது கி.மு 400 அல்லது 800 .
தொல்காப்பியம் திருமாலை தெய்வமாக சுட்டுகிறது
"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே" தொல்காப்பியம், பொருள்-அகத்திணை-05
"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே" தொல்காப்பியம், பொருள்-அகத்திணை-05
மாயோன் திருமால்.
அதாவது பௌத்தம் தமிழ் மண்ணில் நுழையும் முன்னரே திருமால் இங்கே தெய்வமாக போற்ற பட்டு இருக்கிறார். அவருக்கு நம் தமிழ் வேந்தர்கள் முக்கியமாக முற்கால சோழர்கள் , பாண்டியர்கள் கோவில் எடுத்து இருக்கலாம். ஏன் பெருமளவு அது பற்றி குறிப்புக்கள் இல்லாமல் போக காரணம். கி.மு 300- கி.மு 500 ல் இருந்து நடைபெற்ற களபிரர்களின் இருண்ட ஆட்சி காலம் ஒரு காரணமாக இருந்து இருக்கலாம். தமிழ் மன்னர்களை வென்று தமிழகத்தில் என்ன நடந்தது அந்த இடப்பட்ட காலத்தில் என்று சொல்லும் தரவுகள் இல்லை. இன்னோர் முக்கியம் அந்த கால கட்டத்தில் “தமிழகம்” என்ற வார்த்தை இல்லை. அது சேர சோழ, பாண்டிய நாடுகள் என்று இருந்தது.
கி.மு வில் தமிழகத்தில் இருந்த பெளத்த மன்னர்களை பற்றி குறிப்பிட தக்க குறிப்பு இல்லை. அவர்கள் பெரிய பெரிய விகாரங்கள் கட்டினதாக குறிப்பு இல்லை. கி.மு 29௦ அசோகர் காலத்தில் தான் பெருமளவு புத்த மதம் பரவுகிறது என்பதை கவனிக்க வேண்டும். தமிழகம் அவர் ஆட்ச்யில் இல்லை. கி.மு 200ல் சோழ மன்னா ஒருவன் இலங்கை மன்னனை வெற்றி கொண்டான் என இலங்கை மகா வம்ச நூல் கூறுகிறது. மேலும் அவன் தன் மகனை பசுவிற்காக கொன்றான், அவன் சிவ பக்தன். சோழர்கள் திருச்சியில் உள்ள உறையுர் தலை நகரமாக கொண்டு ஆண்டார்கள். புத்தம் எங்கிருந்து வந்தது அப்போது?. கி.பி. 300 யில் வந்து கி.பி. 850 முடியும் பல்லவர்கள் காலத்தில் தான் புத்த விகாரங்கள் அமைக்க படுகின்றன என்று தரவுகள் சொல்கின்றன. ஆனால் அவர்களும் கி.பி. 450 வாக்கில் மீண்டும் சைவத்தையும், வைணவதையும் தழுவுகின்றனர். பல்லவர்கள் மிக பெரிய விஸ்ணு பக்தர்கள் என்பதை அவர்கள் அரசர்களின் பெயர் வாயிலாக அறியலாம்.
கி.மு வில் இருந்த மூவேந்தர்கள் தங்களுக்குள் போர் புரிந்தாலும் ,எந்த கோவில்களை தாக்கி அழிக்க வில்லை, சமணத்திற்கும், பௌத்தத்திற்கும் நிலங்களை அளித்து உள்ளனர். ஆக சமணர்கள் அல்லது பௌத்தர்கள் எனப்படும் களபிரர்களின் ஆட்சி காலத்தில் திருமாலுக்க்கு உரிய கோவில்கள் அழிக்கப்பட்டு இருக்கும், பின் வந்த அரசர்கள் தாய் மதம் திரும்பும் போது , எல்லா கோவில்களும் திரும்ப பெறப்பட்டு இருக்கும். எப்படி பார்த்தாலும் திருமால் தமிழகத்தில் முதன்மையான தமிழர்களின் வழிபாட்டு தெய்வமே என்பதே வரலாறு.
சரி இவ்வளவு சொன்னவர் வேளாங்கண்ணி ஆலயத்தையும், பரங்கி மலை ஆலயத்தையும், சாந்தோம் சர்ச் இருக்கும் இடத்தின் வரலாறையும் பேசி இருக்கலாம் அல்லவா. அது ஹிந்து கோவில்கள் அல்லவா, அவர் பாஷையில் சொன்னால் ஹிந்து கோவில் ----> பெளத்தம் கோவில்----->ஹிந்து கோவில்-----> கிறிஸ்தவ கோவில்.
குறிப்பு: விக்கிபீடியாவில் தேடி அழகாக நாயன்மார்கள் , ஆழ்வார்கள் சங்ககால இலக்கியம், பௌத்தம் , சமண மதங்களின் , அரசர்கள் வரலாறு காலத்தை கணக்கிட்டால் மிக தெளிவாக சொல்லி முடியும். திராவிட நாத்திக குழு எழுதி இருக்கும் விக்கிப்பீடியாவை விட்டு விடுங்கள், அவர்கள் ஒரே நோக்கம் , ஹிந்து மதம் அல்லாத மதங்களால் தான் தமிழகம் வாழ்வு பெற்றது என சொல்ல விரும்புவார்கள், அதாவது தமிழர்கள் மடையர்கள், வெளியில் இருந்து வந்து தான் நமக்கு அறிவு புகட்டினார் என்ற சொல்ல வருபவர்கள். அடிமைகள் அழுவதை பற்றி நமக்கு கவலை இல்லை. அறிவு பிச்சையை அந்நியனிடம் இருந்து பெற்று கொள்ளட்டும்,. தமிழ் நிலங்கள் சொல்லும் வரலாறு தெய்வங்கள் நம் இடையே நம் ஆராதனையில் நமக்காக வாழ்கின்றன, அது போதும் நமக்கு.
கி.மு ஆண்டு கணக்கு என்பது குறைந்து வந்து கி.பியில் தொடங்கும் உதாரணம் கீழே
கி.மு. 25-9
கி.மு. 9-1
கி.மு. 4
கி.பி. 1 - 20
கி.மு. 25-9
கி.மு. 9-1
கி.மு. 4
கி.பி. 1 - 20
இவள்ளவு தான் விஷயம், மேற்படி வேறு தகவல் சொன்னால் கேட்டு கொள்கின்றேன்

No comments:
Post a Comment