இறைவனே. இவர்கள் திருந்தவே மாட்டார்களா. இன்னும் எத்தனை பெண்கள் பலியாக
போகிறார்கள். வேலைக்கு போனால் தொல்லை, ரயிலில் போனால் தொல்லை, பேருந்தில்
பயணித்தால் தொல்லை. ஒரு பெண் தான் பாதுகாப்பாக உணரும் இடம் தன் வீடு, அவள்
வீட்டில் புகுந்தும் ஒரு பெண்ணை கொன்றால், பெண்கள் எங்கே தான் போவார்கள்.
பெண்ணை பெற்றவர்கள் என்ன தான் செய்வார்கள். எத்தனை பெண்ணை பெற்றவர்கள் கதி
கலங்கி போய் இருப்பார்கள்.
காதலித்த பெண்ணை கொன்று விட்டு , என்ன சாதிக்க போகிறார்கள். தன் உள்ளத்தை பறித்தவளின் உயிரை பறிக்க எப்படி மனம் வரும். அவளின் கை பிடிக்க ஏங்கி தவித்த கைகளுக்கு எப்படி கொல்ல தைரியம் வரும்.
உண்மையாக காதலித்தவருக்கு சத்தியமாக சாத்தியம் அன்று. ஒரு பெண்ணின் மீது அன்பு கொள்ளுதல் , அவளை ஆளுமை செய்ய அல்ல, அவள் அழகை கைபற்ற அல்ல , நம் அன்பால் அவளை திளைக்க வைத்து , அவள் கண் மூடும் வரை அவளை காப்பாற்ற.
உன் அன்பு அவளால் மறுக்கபட்டால் , அவளிற்கு பிடித்த இடத்தில் அவள் தேடும் அன்பை அவள் பெற்று கொள்ளட்டும் , என்று நகர்ந்து போகுதல் உண்மையான காதல்.
உன் அன்போ அல்லது உன் அருகாமையோ ஒரு பெரும் தொந்தரவு என்று பெண் சொன்னால் , அவளை விட்டு விலகி போகுதலும் கூட ஒரு வகையில் அது பேராண்மை.
"அட என்னிடம் இருந்தால் கூட இந்த பெண் இவ்வளவு நன்றாக இருந்து இருக்கமாட்டாள் , இப்போது பார் சகல வசதிகளோடு வாழ்கிறாளே, நன்றி இறைவனே " என்று சொல்லி அகம் மகிழ்பவனே நல்ல ஆண் மகன்
உன்னால் ஒரு பெண்ணின் சாதாரண பார்வையையும் , நட்பையும் புரிந்து கொள்ள முடிய வில்லையா , அப்படி என்றால் பெண்ணை விட்டு விலகி நில்லுதல் சரியான முடிவு. நானும் ஒரு வயதில் அந்த தடுமாற்றத்தில் தவித்து இருக்கின்றேன். சட்டென்று ஒரு நாள் புரிந்தது , பெண்ணை புரிந்து கொள்ளும் பக்குவம் என்னிடம் இல்லை , பெண்ணை விட்டு விலகி போவது என்னை பொறுத்தவரை சரியாக இருந்தது. என்னை என்னிடம் இருந்து காப்பாற்றி கொண்டேன்.
அதை விடுத்து கட்டாயபடுத்தி வருவது பேர் காதலா ? எப்படி தான் நேசித்த பெண்ணை கொல்ல மனம் வரும். காமத்தை காதலாக கொள்ளும் காலிகளின் கயமைதான் , இத்தகைய செயலை செய்யும். தனக்கு சொந்தமாகத அழகு , மற்றவருக்கு சொந்தமாக கூடாது என்ற கீழ் நிலை புத்தியின் வெளிப்பாடு இது.
இது ஒரு தலை காதல் என்று சொல்லி காதலை களங்கப்படுத்தாததீர்கள்
http://tamil.oneindia.com/news/tamilnadu/teenager-stabbed-death-kovai-262797.html

No comments:
Post a Comment