Friday, May 13, 2016

சீமானின் கருத்தில் உடன்படுகின்றேன்

கருணாநிதி தோற்று விட்டால் , தமிழனை திட்டுவார் "நீ மானமுள்ள தமிழனா , சோற்றில் அடித்த பிண்டங்கலாகி போன தமிழனா" என்று .
 
 நாம் தமிழர் கட்சி தமிழனை திட்டி கொண்டு ஒட்டு கேட்கிறது. "பச்சை தமிழனா, மானமுள்ள தமிழனா , சூடு சொரணை உள்ள தமிழனா".

கருணாநிதிக்கும், சீமானுக்கும் முற்பட்டு இருந்து நாம் தமிழர்களாக தான் இருந்து வருகிறோம். இந்த இரண்டு பேருக்கும் ஒட்டு போட்டு தான் நாம் தமிழர் என்று நிருபிக்க வேண்டிய அவசியம் நம் தமிழர்களுக்கு இல்லை.

தமிழ் புத்தாண்டு அன்று விடுமுறை மறுத்த பல பன்னாட்டு நிறுவனங்கள் உண்டு. பொங்கல் பண்டிகைக்கும் விடுமுறை மறுத்த நிறுவனங்கள் உண்டு. சாதாரண படிப்பறிவு அற்ற மக்களும் வந்து போகும் வங்கிகளில் , தமிழே தெரியாத பல பணியாளர்களை தமிழகத்தில் பணி அமர்த்தி வாடிக்கையாளர்களை தினமும் வேதனை படுத்தும் வங்கிகள் உண்டு.

தமிழகத்தில் தங்கள் வியாபாரத்தை செய்து கொண்டு இருக்கும் பல பன்னாட்டு நிறுவங்கள் ,தங்கள் 24 மணி நேர தொலைபேசி உதவியில் ஒரு தமிழரை கூட அமர்த்தாமல் இருக்கும் நிலை உள்ளது.

ஏன் எனில் கேட்பார் யாரும் இல்லை. எங்கள் மண்ணை ஆண்ட யாருக்கும் நான் தமிழன் என்ற எண்ணம் இருந்தது இல்லை.

அதனால் சீமானின் கருத்தில் உடன்படுகின்றேன் " இந்த மண்ணில் யாவருக்கும் வாழ உரிமை உண்டு, ஆனால் இந்த மண்ணை ஆளும் உரிமை என்றும் "தமிழ் கலாச்சாரத்தை" மறவாது கடைபிடிக்கும் தமிழருக்கு மட்டுமே உண்டு"


No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...