இன்று
ஒரு கல்லூரி தோழர் ஒருவர் அழைத்து இருந்தார். அலைபேசியில், அவரின் உறவினர்
ஒருவருக்கு வேலை வாய்ப்பு பற்றி அறிய. பேச்சு மெல்ல கல்லூரி வாழ்க்கை
பற்றி திரும்பியது. அந்த கல்லூரி நாட்களில் அவர் என்னிடம் எப்போதும் எந்த
மாதிரி கேள்விகளை கேட்டு கொண்டு இருப்போரே அதே மாதிரியான கேள்விகள்,
கிட்டத்தட்ட அதே பாணியில் பதில் அளித்து கொண்டு இருந்தேன். பேச்சு முடிந்த
பிறகு, நீ கொஞ்சமாவது மாறி இருப்பாய் என்று நினைத்தேன்
மாற வில்லை என்றார். எனக்கு ஒன்றும் புரிய வில்லை. என்ன மாற வில்லை
என்றேன். இல்லை கல்லுரியில் பேசி கொண்டு இருந்த அதே பேச்சுகளை தான் பதிலாய்
தருகிறாய் என்றார்.
நானும் பதிலுக்கு நீயும் அப்படியே தான் இருக்கின்றாய் என்றேன். அவருக்கு வருத்தமாக போய்விட்டது. கல்லூரி நாட்களில் நீ என்னிடம் கேட்டாயோ அதே கேள்விகளை பனிரெண்டு வருடம் கழித்து கேட்கின்றாய். வேறு எதுவும் உனக்கு கேக்க தோன்ற வில்லை. அப்படி என்றால் நீயும் மாற வில்லை தானே என்றேன். வேகமாக மறுத்து விட்டு, நான் அப்படி, இப்படி என்று சொல்லி விட்டு , வேலை வாய்ப்பு பற்றி தகவல் தெரிந்தால் சொல் , என்று சொல்லி விட்டு அலைபேசியை வைத்து விட்டார். கல்லூரி வாழ்க்கை அது வேறு உலகம். இன்று நின்று யோசிக்கும்போது , சில விசயங்களை நிதானித்து செய்து இருக்கலாம் அல்லது தவிர்த்து இருக்கலாம் என்று தோன்றுகிறது இன்னும் நன்றாக படிப்பில் கவனம் செலுத்தி இருந்து இருக்கலாம் என்ற எண்ணம் வருகிறது. வயதிற்குரிய குறும்புகளை ஒரு வரையறைக்குள் வைத்து இருந்து இருக்கலாம் என்று யோசிக்க வைக்கிறது. நான் செய்த சில வேலைகளை நினைத்தால் எனக்கே இன்று சிரிப்பாக வருகிறது. ஆனால் அது முடிந்த போன நாட்கள். அது முதிர்ச்சியற்ற பருவம், அப்படித்தான் இருந்து இருக்க முடியும் என்னால். இன்று அப்படி இல்லை. முப்பது வயதை தொட்ட போது நமக்குள் இருந்த முரண்பாடுகள் மரணித்து போகின்றன. மெல்ல ஒரளவு பக்குவம் முளைத்து வருகிறது. என்ன பேச வேண்டும் என்பதை விட என்ன பேச கூடாது என்று தெரிகிறது. யார் யாரை எல்லாம் விட்டு விலகி நிற்க வேண்டும் என்ற தெரிகிறது. சிந்தனைகளை சிதறடிக்கும் சில்லறை தனமான சிற்றின்பம் விஷயத்தை தவிர்க்க சொல்லி மனம் வேண்டுகிறது. கிட்டத்தட்ட இன்னொரு பட்ட படிப்பு மாதிரி. முழு முதுமை வந்து தழுவும்போது கூட , இந்த படிப்பை முடிக்க முடியாது என்று புரிகிறது அந்த நண்பருக்கு ஏன் அது புரியவில்லை என்று எனக்கு புரியவில்லை. நான் மாற வில்லை என்று அவரே முடிவு செய்து விட்டார். அவர் மாறி விட்டார் என்றும் அவரே முடிவு செய்து கொண்டார். அதாவது எனக்கும் அவருக்கும் சேர்த்து அவரே நீதிபதியாக இருந்து தீர்ப்பு எழுதிக் கொண்டார். இது தீர்ப்பா அல்லது நம் தலைஎழுத்தா என்று அறியமுடியவில்லை. ஆனால் இந்த மாதிரி நீதிபதிகள் எல்லா உறவுகள், நட்பு வட்டத்தில் இருந்து நமக்கு சில சமயம் தலைவலியாக வருகிறார்கள் என்பதை அறிவேன். |
ஈசனை அடையும் முடிவற்ற பயணம்...இந்த முறை தரணி வழியாக, அதன் வழிதடத்தில் நான் செய்த விசாரிப்புகள் இங்கே......
Friday, May 13, 2016
என் கல்லூரி வாழ்க்கை அது வேறு உலகம்
Subscribe to:
Post Comments (Atom)
கொரோனா வைரஸ்
எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...

-
நண்பர்கள் சிவாலயங்கள் பதிவுக்கான, நான் சென்று வந்த பயண திட்டத்தை தெரிவித்தால், நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். http://tiny.cc/ewgg...
-
"இது தான் காலம் காலமாக நீங்கள் செய்வது. கிறிஸ்தவம் வந்த பிறகு தான் தமிழ் பெருமை வளர்ந்தது அல்லவா? நல்லது அந்த நினைப்போடு நீங்கள்...
-
இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்-ஹோல்கர் கேர்ஸ்டன் - புத்தகம். ரயில் பயணத்தின் போது, இந்த புத்தகம் வாங்கினேன். படிக்க மிக சுவராசியமாக இருக்...
No comments:
Post a Comment