இன்று காந்தி கொல்லப்பட்ட தினம். என்ன விதமான சமாதானம் சொன்னாலும், இவர் எல்லா சுதந்திர களத்தையும் ஒன்றிணைத்து , அதன் பிரதான தளபதியாக முன் இருந்தார். தனது சுதந்திர போராட்ட தோழர்கள் மூலமும் , தனது சொந்த மகன் மூலம் கடும் நெருக்கடிகளையும் சந்தித்தாலும், சுதந்திர இந்தியா என்ற தாகத்தை தணிக்கும் , ஒற்றை நோக்கில் நோக்கி தள்ளாத வயதிலும் தளராமல் பயணித்தார்.
இவரை பற்றி எனக்கு முரண்பட்ட கருத்துகள் இருந்தாலும் , இவரை என்னால் தேச தந்தை என்று கொள்ள முடியாவிட்டாலும், இவரை எனக்கு பிடித்து இருக்கவும் , இவரை மறுக்காமல் இருக்க ஒரே காரணம், தாய் தேசத்தை நேசித்தலை மன பூர்வமாக செய்தார். ஆயிரம் பிரச்சினைகள் நமக்கு இருந்தாலும், தேசத்தின் பிள்ளைகள் , தனது தாய் தேசத்திற்கான தவிப்பை உதிரத்தில் உரமிட்டு எப்போது வைத்து இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியவர்.
காந்தி பற்றிய காலசக்கரம் என்றும் கடந்த காலத்தோடு முடிவது இல்லை, அது எதிர் காலத்திலும் சுழன்று கொண்டு தான் இருக்கும்.
ஏன் எனில் காந்திகள் காலவதியாவது இல்லை.
No comments:
Post a Comment