நல்ல நோக்கதிற்கு ஆரம்பிக்க பட்ட ஒரு விஷயம் மிக தெளிவாக் admk அரசை கவிழ்ப்பது அல்லது எதிர் மறை எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பயணிக்கிறது. எப்போது காவல்துறை தமிழனாக தன்னை காட்டி கொள்ள துவங்கியதே அப்போதே அரசு இயந்திரத்தின் வீழ்ச்சிக்கு அறிகுறி. எல்லா மாநில மக்களும் வாழும் சென்னையில் இப்படி செய்தது சரியான செயல் அல்ல.
சல்லிக்கட்டு போரரட்டம் என்று ஆதரித்த பல கூட்டம், இன்று அது இந்திய எதிர்ப்பு கூட்டம் என்று அது மாறிய போது, கண்டிக்க வில்லை. குறைந்த பட்சம் அது தவறு என்று சொல்ல வில்லை, நேர் வழியில் திரும்புங்கள் அல்லது அந்த மாதிரி இருப்பவர்களை அனுமதிக்காதீர்கள் என்று பேசவும், பதிவு எழுத வில்லை. மௌனமாகி நின்றது. இப்போது மாறாக இந்திய எதிர்ப்பு கூட்டம் என்று சுட்டி காட்டியவர்களை ,பார்த்து பணம் வாங்கி விட்டார்கள் , மாறி விட்டார்கள், பயந்து விட்டார்கள் என்று பேசவும் எழதவும் தொடங்கி விட்டது. கவனித்து பாருங்கள். இந்திய எதிர்ப்பு என்ற வார்த்தையை மறைக்க முயல்கிறார்கள்.
ஆக நோக்கம் ஒன்று, இந்திய எதிர்ப்பு என்ற நோக்கத்தில்தான் இவர்கள் இதை ஆதரிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் பல பேர் இந்திய பாஸ்போர்ட் வைத்து வேறு தேசம் வேலைக்கு போக காத்து இருக்கிறார்கள். இதில் பல பேர் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள். இவர்கள் போகும் தேசத்திலும் இதைத்தான் பண்ண போகிறார்கள்.
ஜனநாயக அரசு இருப்பதால் தான் உங்கள் போராட்டம் இவ்வளவு சாத்தியமாக நடந்தது என்பதை புரியாமல் புரட்சி பேசுகிறார்கள். முக புத்தகத்தில் எழுதியதற்காக கைது செய்த மேற்கு வங்காளம் அரசு இருக்கும் தேசத்தில் தான் , அச்சில் ஏற்க முடியாத கெட்ட வார்தைகளை சொல்லி மாநில முதல்வரையும் , தேசத்தின் பிரதமரையும் விமர்சித்து கொண்டு இருந்தார்கள். அப்பவும் அமைதி காத்தது அரசுகள். என் பிள்ளைகள் என்று தான் அரவணைத்து நின்றது. ஆனால் தேசம் என்று சொல்லுக்கு ஊறு விளைவிக்கும் கூட்டம் உள்ளே நுழையும் போது , ஒரு அரசு வேடிக்கை பார்க்காது. தன் பலத்தை காட்டும். அது தான் நடந்து இருக்கிறது
No comments:
Post a Comment