Saturday, February 18, 2017

உத்திரபிரதேச பிஜேபி தேர்தல் அறிக்கையை வைத்து மீண்டும் மீடியாவும் , சமூக வலைத்தளமும்

உத்திரபிரதேச பிஜேபி தேர்தல் அறிக்கையை வைத்து மீண்டும் மீடியாவும் , சமூக வலைத்தளம் வார்த்தை விளையாட்டு செய்து மீண்டும் பிஜேபியை குறி வைக்கிறது.
தந்தி டிவி அசோக வர்த்தினி எவ்வளவு தெளிவாக அச்சு அசல் நிகழ்ச்சியில் வார்த்தையை மாற்றி பேசுகிறார் பாருங்கள், ராமர் கோவில் கட்டுவதை பற்றி சொல்லும் போது “சட்டத்திற்கு உட்பட்டு ராமர் கோவில் கட்டுவோம்” என்ற வார்த்தையை கவனமாக தவிர்த்து விட்டார். நல்ல வேளை சுமன், அசோக வர்த்தினி வார்த்தையை சரியாக திருத்தி சொல்கிறார். அசோக வர்த்தினி ஆயுத எழுத்து நிகழ்ச்சியிலும் இதே உத்தியை தான் எப்போதும் கடைப்பிடிக்கிறார். ஆனால் எத்தனை பேர் சுமன் மாதிரி சரியாக திருத்த முயற்சி செய்து இருக்கிறார்கள். இப்படித்தான் ஆரம்பிக்கிறது பிஜேபியை பற்றிய பொய்யான செய்திகள்.
ஒரு வார்த்தையை மறைத்து விட்டால், எவ்வளவு அர்த்தம் வருகிறது என்பது இன்னும் தமிழக பிஜேபியில் சில பேருக்கு புரிய வில்லை. நிர்மலா சீதாராமன் ஊடகத்தை எப்படி எதிர் கொள்கிறார் என்று கவனியுங்கள். “ஊடகம் என்ன தவறான வார்த்தையை பயன்படுத்துகிறது என்பதை கவனமாக கவனித்து, அதற்கு அந்த இடத்திலே பதில் அடி கொடுத்து, அதே இடத்தில அந்த தவறான வார்த்தையை வலுவிழக்கச் செய்கிறார்”
அப்புறம் இந்த திராவிட போராளிகளுக்கு , உத்திர பிரதேச தற்போதைய முதல்வர் அகிலேஷ் யாதவ் தான் முதலில் இலவச லேப்டாப் வாக்குறுதி அளித்தார். எதை பின்பற்றி ? ஹிந்து மதத்திடம் மட்டும் நாத்திகம் பேசும் பகுத்தறிவு கூட்டத்தின் பறவை கூடான தி மு க தான் முதன் முதலில் இலவசம் ஆரம்பித்து மக்களை சீரழித்தது என்பது உலகம் அறிந்த செய்தி. அதனால் திராவிட கூட்டம் ரொம்ப பொங்க வேண்டாம்,
No automatic alt text available.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...