Saturday, February 18, 2017

சல்லிக்கட்டு போராட்டகாரர்கள் கவனத்திற்கு

சல்லிக்கட்டு போராட்டகாரர்கள் கவனத்திற்கு

நிரந்தர சட்டம் வரவரைக்கும் சல்லிக்கட்டு எங்குமே நடத்த கூடாது என்று சொல்வதற்கு போராட்டகாரர்களுக்கு உரிமை இல்லை. போராட்டம் நடத்துவதற்கு எவருக்கும் உரிமை உண்டு. இளைஞர்கள் நடத்திய போரட்டத்திற்கு கட்சி வேறுபாடின்றி, சாதி வேறுபாடின்றி எல்லாரும் ஆதரவு தந்தனர். சல்லிக்கட்டுக்கு அவசரம் சட்டம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கையாக வைத்து விட்டு, வந்த பிறகு அதை ஏற்காமல் நிரந்தர சட்டம் வந்தால் தான் ஆச்சு என்கிறீர்கள். சரி அது உங்கள் விருப்பம். தொடர்ந்து போராடுங்கள் , வாழ்த்துக்கள். ஆதரவு உண்டு. ஆனால் சல்லிக்கட்டு மற்ற யாரும் நடத்த கூடாது என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை. அது அந்தஅந்த ஊர்களின் மக்கள் விருப்பம். சல்லிக்கட்டு என்ன உங்களுக்கு மட்டும் சொந்தமா

அரசியல் கட்சிகள் அவரவர் சார்பில் சல்லிகட்டு நடத்த முயன்றால் நீங்கள் ஏன் போய் தடுக்கீரர்கள். அவர்கள் நடித்து விட்டு போகட்டும் , ஒட்டு போடாதீர்கள் அடுத்த தேர்தலில். உங்கள் கைகளில் தான் வாக்குரிமை இருக்கிறது அல்லவா. சரியோ தவறோ அவர்களும் அவர்களின் தளத்தில் முயற்சி பண்ணி இருக்கிறார்கள். வீரியம் புரியாமல் அலட்சியமாக இருந்து இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அவர்கள் அலட்சியமாக இருந்ததற்கு மக்களாகிய நாமும் காரணம்.

நாட்டு மாட்டை பற்றி ஒரு நாளும் , நீங்கள் போராடாத வரை , அதை பற்றி எந்நாளும் ஏதாவது ஒரு வகையிலும் கவலை படாத, வெளியில் இருந்து , வெளிநாட்டில் இருந்து ஆதரவு தருபவர்களையோ அல்லது இரண்டு மூன்று மணி நேரம் அல்லது நான்கு மணி நேரம் மட்டும் போராட்டம் பண்ணி விட்டு , செல்பி எடுத்து facebook . twitter இல் போட்டு விட்டு, “விடாதீர்கள் போராளிகளே" என்று சொல்பவர்களை நம்பி, ஏமாறாதீர்கள். உசுப்பேத்தி விட்டு அமைதியாக இருந்து விடுவார்கள்.

என்னை பொறுத்தவரை அவரச சட்டம் வந்த போதே நீங்கள் இலக்கை எட்டி விட்டிர்கள். தொடர்வது உங்கள் விருப்பம். தொடர்ந்தால் எப்போதும் போல் ஆதரவு உண்டு. ஆனால் தொடருங்கள் என்று எனக்கு சொல்ல தோன்ற வில்லை. சட்ட போரட்டமாக மாற்றி போராடுங்கள். அடுத்த சென்சேஷனல் நியூஸ் வரும் வரை தான் மீடியா உங்களை கவனிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்

இது அடுத்த தலைமுறை எப்படி இதை பார்க்க போகிறது என்பது “எப்படி நீங்கள் முடிவுக்கு கொண்டு வர போகீர்கள் என்பதை பொறுத்துதான் அமையும். இன்று உங்கள் போராட்டகாரர்கள் பேச்சு திசை மாறி இருக்கிறது, அது சரியானதாக பட வில்லை.

தமிழக சரித்தரத்தில் இடம் பெற கூடிய உங்கள் உணர்ச்சிகரமான போராட்டத்தை உங்கள் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் மூலம் சீரழித்து விடாதீர்கள். 

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...