தமிழகத்தில் நக்சல்கள், மாவோயிஸ்ட்கள் ரயிலை கவிழ்ப்பதற்கு பல முறை முயற்சி செய்தார்கள். பல முறை செய்திகள் வந்தன.ரயில்வே காவல்துறை மற்றும் உள்ளூர் காவல் படையின் தொடர் கண்காணிப்பாலும், அது தொடர்ந்து முறியடிக்க பட்டு வருகிறது. ஒரு காலத்தில் தருமபுரி நக்சல் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. நக்சல் சிறப்பு படை உருவாக்கப்பட்டு அதன் மூலம் நக்சல்கள் அழிக்க பட்டனர். இப்போது சல்லிக்கட்டு போராட்டத்திலும் அவர்கள் ஊடுருவி இருப்பார்கள் என சந்தேகிக்கபடுகிறது.
நடந்த சல்லிகட்டு போராட்ட கலவரத்தில் மாணவர்கள் மீது குற்றம் இல்லை என அனைத்து தரப்பிலும் ஒத்து கொள்ள பட்ட பிறகும், மாணவர்கள் பற்றி பேசி பேசி , காவல்துறையை மட்டும் குற்றம் சாட்டி , மற்ற தேச விரோதிகள் , சமூக விரோதிகளையும் தப்பிக்க வைக்க பல பேர் முயற்சி செய்கின்றனர். நாம் சொல்ல வேண்டியது “யார் தவறு செய்தாலும் , அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும், அது காவல் துறை என்றாலும், தண்டிக்க பட வேண்டும்”. அதே நேரத்தில் மொத்த பழியையும் காவல்துறை மேல் போடுபவர்கள் ஒன்றை உணர வேண்டும்.
சமீபத்தில் நடந்த ரயில் விபத்து விசயத்தில் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டன. அது விபத்து அல்ல, திட்டமிட்ட சதி என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. ISISI தீவிரவாதிகள் பின் இருக்கிறார்கள் என்று அரசின் புலனாய்வு அமைப்புகள் கண்டு அறிந்து உள்ளன. நக்சல் , மாவோயிஸ்ட்கள்மோ கடைபிடிக்கும் சதி வேலையில் இன்று ISISI தீவிரவாதிகள் இணைந்து இருக்கிறது. இந்த குழுக்கள் இடையே ஒரு கூட்டமைப்பு ஏற்பட்டு இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
ரயில் இன்று எல்லாரும் சர்வ சாதரணமாக பயன்படுத்த கூடியது. குண்டு வைப்பதற்கு பதில் தண்டவாளத்தை பெயர்ப்பது, பாறாங்கற்களை வைப்பது, குறுக்கே பல தடுப்புகளை வைப்பது செய்ய ஆரம்பித்து இருகிறார்கள். இது மிக சுலபமாக பல விரைவு ரயில்களை கவிழ்த்து பல உயிர் இழப்புகளை ஏற்படுத்தி விடும்.
அந்த ரயில்களில் தான் அடிக்கடி நமது ரத்த உறவுகள் பயணிக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

No comments:
Post a Comment