!!யார் இங்கே மாணவர்களின் துரோகிகள்!!
காங்கேயம் காளை ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவனோபதி, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா “மாணவர்களே பிரிவினை வாதிகள்/விஷ்மிகள்/ வருகிறார்கள் , சல்லிகட்டு என்ற ஒற்றை நோக்கில் கவனம் செலுத்துங்கள்”- என்று சொன்னார்கள். துரோகி என்று பெயர் பெற்றார். முக நூல் தூற்றியது
ராகவா லாரன்ஸ் -என் மாணவர்கள் என் மாணவர்கள், என்று போரட்ட களத்தில் பெரும் பங்கு பெற்றார், கடைசியாக அவரும் சொன்னார் “மாணவர்களை விட்டு வேறு சக்திகளுக்கு களம் மாறிவிட்டது”. அசிங்க படுத்த பட்டார். முக நூல் தூற்றியது
ஆரம்பத்தில் இருந்தே போராட்டத்தை வலுப்படுத்தி வந்த மீடியாவும்(விகடன், நக்கீரன் தவிர) கடைசியில் பிரிவினைவாதிகள் பற்றி சுட்டி காட்டியது- மீடியா விலை போனது என்று தூற்ற தொடங்கினார்கள்.
எல்லா நல்ல மாணவர் குழுவும் கலைந்த பிறகு , மிச்சம் சில குழுக்கள் மட்டும் தான் முரண்டு பிடித்தன. அந்த குழுக்களிடம் சமாதானம் பேசியது யார், “நாம் தமிழர் கட்சியும், கௌதமன் என்ற ஈழ போராளியும்”. இவர்கள் தவிர வேறு அமைப்புகளும் ஒளிந்து நின்று இருக்க வாய்ப்பு உண்டு.
இரண்டு பேரும், இந்திய தேசியத்தை எதிர்ப்பதும் , தனி தமிழ்நாடு பிரிவினை பேசுபவர்கள் என்பதும் உலகம் அறிந்த உண்மை. கைபுண்ணுக்கு கண்ணாடி தேவையா?
35வயது மேல் உள்ளவர்கள் மாணவர் என்று பெயரில் உள்ளே வருகிறார் ?
காவல் துறையும் கலவரத்தை தூண்டியவர்கள் “மாணவர்கள் அல்ல” என்று சொல்லி விட்டார்கள்.
காவல் துறை தீ வைத்த வீடியோவை பரப்புவர்கள், ஏன் தேச விரோத சக்திகள் நடத்திய கலவர வீடியோவை பரப்பமால் அமைதி காப்பது ஏன்.
கரரணம் என்றால், காவல் துறை இப்போது மாணவர் என்ற போர்வையில் உள்ளே புகுந்த விஷமிகளை தேடி போகும். தாங்கள் ஆதரிக்கும் தேச விரோத சக்திகள் அகப்பட்டு கொள்வார்கள் என்ற அச்சத்தில் மௌனம் சாதிக்கின்றனர்
.
உன் அக்காவும் ,அம்மாவும், தங்கையும் பாதுகாப்பாக வீடு திரும்ப காவல் துறையும் ஒரு காரணம் என்று உனக்கு உறைக்க வில்லை. உன் கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு, ,முக புத்தகத்தில் காவல் துறைக்கு எதிராக மட்டும் பதிவு போடும் உனக்கு , உன் கணவன் தொழில் பாதுகாப்பாக நடக்க காவல் துறையும் ஒரு காரணம் என்று உன் புத்தியில் இன்னும் ஏற வில்லை. சொந்த உறவுகளை தமிழகத்தில் விட்டு விட்டு. வேறு தேசத்தில் பிழைப்பு தேடி போன கூட்டத்தின் அறிவிற்கு தோன்ற வில்லை, உன் உறவுகள் இங்கே பாதுகாப்பாக இருக்க காவல் துறையும் ஒரு காரணம் என்று.

சென்னையில் புதிதாக தொழில் தொடங்க இருந்த எத்தனை நிறுவனம் இப்போது யோசித்து இருக்கும் என்று யோசிக்க தோன்ற வில்லை.
ஒழுங்காக அமைதியாக இருந்த கூட்டத்தை, காவல்துறை கலைத்து, மாணவர்களுக்கு துரோகம் செய்தது, என்று நீ சொல்கிறாய்.
ஆனால், நம் வீட்டு பிள்ளைகளிடம் பிரிவினைவாதிகள் கலந்த போது அதை மறைத்த நீ யார், இப்போதும் அவனை தப்ப விடுவதற்காக கள்ள மௌனம் சாதிக்கிற நீ யார்?
நீயும் ஒரு துரோகி தான்.
No comments:
Post a Comment