தமிழ் பெண்களின் முக்கிய அடையாளம் நெற்றியில் குங்குமம் வைப்பது. கணவனை இழந்த பெண்கள் தான் பெரும்பாலும் தவிர்ப்பார்கள். இப்போது அது கூட மாறி விட்டது. ஏன் தீபாவின் எந்த புகைபடத்திலும் நெற்றியில் பொட்டு இல்லை. ஹிந்து மதம் மட்டும் தான் நெற்றியில் பொட்டு வைப்பதை தன் கலாசாரத்தின் ஒரு அங்கமாக பல ஆயிரம் வருடமாக போற்றி கடை பிடித்து வருகிறது கிறிஸ்தவ மதமும் , இஸ்லாமிய மதமும் தான் பெண்கள் பொட்டு வைப்பதை அனுமதிப்பது இல்லை.
நெற்றியில் பொட்டுடன் காட்சி அளிப்பது தான் ஜெயலலிதாவின் வழக்கம். தீபா கிறிஸ்தவராக மதம் மாறியதை ஜெயா விரும்ப வில்லை. ஆதனால் தான் தீபாவை சேர்க்க வில்லை என்று ஒரு கருத்து உலவுகிறது. ஜெயலலிதா ஹிந்து மதத்தின் மீது தீவிர பற்று கொண்டவர். அதே நேரத்தில் பிற மதத்தின் நம்பிக்கையை மதித்தவர். தீபா தான் என்ன மதம் என்று சொல்ல தயங்குவதேன். அப்துல் கலாமையும் , சகாயத்தை கொண்டாடடிய தேசம் இது . நீங்கள் கிறிஸ்தவராக இருந்தாலும் , உங்கள் நோக்கம் நல்ல நோக்கமாக இருந்தால் இந்த தேசம் உங்களுக்கு வாக்களிக்க போகிறது என்னையும் சேர்த்து. உங்கள் பதவியை வைத்து ஹிந்து மக்களை மத மாற்ற நீங்கள் முயன்றால் தான் உங்களுக்கு எதிர்ப்பு வரும்.
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் எந்த கடவுள்களையும் வணங்கி கொள்ளுங்கள். ஆனால் பொது வாழ்க்கைக்கு நீங்கள் வரும் போது உங்களிடம் வெளிப்படை தன்மை வேண்டும். என்னை பொறுத்தவரை மறைந்த ஜெயலலிதாவே உங்களை நம்ப வில்லை. நீங்கள் நம்பிக்கை உரியவர் அல்ல என்று அவரே, அவர் மிக தெளிவாக திடமான உடல் நிலையில் இருக்கும்போதே மக்களுக்கு காட்டி விட்டார்.
சசிகலாவிற்கு காலம் பதில் சொல்லும், உங்களுக்கு உங்கள் அத்தையே பதில் சொல்லி விட்டார்
No comments:
Post a Comment