Saturday, February 18, 2017

உங்கள் ஹிந்து நண்பர்கள் தங்களை மத சார்ப்பற்றவர் என்று சொல்கிறார்களா. அப்படி என்றால் இந்த பதிவு அவர்களுக்கு அல்ல, உங்களுக்கு தான்

உங்கள் ஹிந்து நண்பர்கள் தங்களை மத சார்ப்பற்றவர் என்று சொல்கிறார்களா. அப்படி என்றால் இந்த பதிவு அவர்களுக்கு அல்ல, உங்களுக்கு தான்
அவர்கள் நட்பில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இருப்பார்கள், ஹிந்துக்களாகிய நாமும் இருப்போம். இந்த “மதசார்பற்ற” நம் ஹிந்து நண்பர்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தை பற்றி வரும் எந்த எதிர் மறை செய்திகளை மறந்தும் அவர்களை வைத்து கொண்டு பேச மாட்டார்கள். முக புத்தகத்திலும் அப்படி வரும் செய்திகளை தொடவே மாட்டார்கள். ஏன் என்றால் தங்கள் இஸ்லாமிய, கிறிஸ்தவ நண்பர்கள் வருத்த பட கூடாது என்ற “உயர்ந்த நோக்கத்தில்” செய்கிறார்கள்.
ஆனால் ஹிந்து மதத்தை பற்றி வரும், எதிர் மறை செய்திகளை அவர்களை வைத்து கொண்டே நம்மிடம், நம் ஹிந்து நண்பர்கள் விவாதிப்பார்கள். ஹிந்து மதத்தை சாடி வரும் பதிவுகளை மீள் பதிவு செய்து கொண்டே இருப்பார்கள். அப்ப என்ன அர்த்தம், உன் இஸ்லாமியர்/கிறிஸ்தவ நண்பர் மட்டும் வருத்த பட கூடாது , ஆனால் உன் ஹிந்து நண்பர்கள் வருத்த படலாம். அதை பற்றி கவலை உனக்கு இல்லை.
சரி உங்கள் நட்பில் இருக்கும் கிறிஸ்தவ/இஸ்லாமிய நண்பர்களை கவனியுங்கள்.
என்றாவது ஒரு நாளாவது நம்மிடம் அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளை பற்றியோ அல்லது போலி கிறிஸ்தவ சாமியார்களை பற்றியோ பேசி இருக்கிறார்களா.
அவர்கள் கூச்சமே இல்லாமல் யார் எல்லாம் ஹிந்து மதத்தையும், அதன் மக்களையும் இழிவுபடுத்தி கொண்டு உள்ளார்களோ அவர்களை தான் மிக சிறந்த தலைவர்கள் என்று நம்மிடம் பேசி கொண்டு இருப்பார்கள்.
மோடியை பற்றி குறை கூறும் எந்த இஸ்லாமியர்/கிறிஸ்தவ நண்பரும் என்றாவது கருணாநிதியை பற்றியோ, காங்கிரஸ்ன் ஊழல்களை பற்றியோ நம்மிடம் அவர்களாக பேசி இருக்கிறார்களா? நாமாக அந்த விஷயம் பேசினால் மட்டுமே , ஒரு சின்ன ஆமோதிப்பு வரும். நன்றாகவே தெரியும் , வேறு வழி இல்லாமல் வந்த ஆமோதிப்பு என்று.
முக புத்தகத்தில் இவர்களை ஆதரித்து தான் பதிவு வரும்.
அப்புறம் இந்த நாத்திக நண்பர்கள். அவர்கள் எந்த மதமும் இல்லை, எந்த கடவுளும் இல்லை, எந்த நம்பிக்கையும் இல்லை என்று நம்மிடம் சொல்லி கொண்டு இருப்பார்கள் . ஆனால் ஹிந்து மதத்தையும், தமிழர்களின் வழிபாட்டு நம்பிக்கையை மட்டும் தான் குறி வைத்து நம்மிடம் விவாதம் செய்வார்கள். அந்த மாதிரி பதிவுகளை தான் மீள் பதிவு செய்வார்கள்.
மறந்தும் , இஸ்லாம், கிறிஸ்தவம் பற்றி பேசவோ, எழுதவோ மாட்டார்கள். ராமர் எப்போது பிறந்தார் அல்லது தமிழர்கள் மதம் அற்றவர்கள் என்று விவாதம் செய்வார்களே தவிர மறந்தும் இயேசு எந்த தேதியில் பிறந்தார் என்று விவாதம் செய்ய மாட்டார்கள். ஆக நாம் வருத்தபட்டால் அவர்களுக்கு கவலையே இல்லை.
என் நண்பர்கள் யாரும் வருத்த பட கூடாது என்று நினைப்பவன் நல்ல நண்பனா , இல்லை தன் கிறிஸ்தவ, இஸ்லாமிய நண்பர்கள் மட்டும் வருத்த பட கூடாது என்று நினைப்பவன் நண்பனா?
தன் போலி மத சார்பற்ற தன்மையை காட்ட நம்மை பலி கொடுக்க தயங்க மாட்டார்கள். தான் பிறந்த மண்ணையும் சேர்த்தே கொல்வார்கள்.
யோசியுங்கள், உற்று உங்கள் “போலி மத சார்பற்ற” நண்பர்களை கவனியுங்கள்
என் நண்பர்கள் கூட்டத்தில் ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு, ஹிந்து/கிறிஸ்தவ/இஸ்லாமிய/நாத்திக நண்பர்கள் தவிர அனைவரும் இந்த போலி கூட்டத்தில் தான் உள்ளனர். அதனாலே பல பேரிடம் இருந்து மெல்ல விலகி விட்டேன்.
“தான் பிறந்த மரத்தை கொல்லும் கோடரி” அது வெறும் வாசகம் அல்ல, வரலாறு.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...