நேற்று இரவு பைக் சர்வீஸ் விடுவதற்கு விசாரிக்க சென்றேன், அப்போது தகவல் தொழில்நுட்ப இளைநர்கள் இரண்டு பெரும் அங்கே வந்து இருந்தனர். இரண்டு பெரும் எரிச்சல் மற்றும் வருத்ததுடன் தங்களுக்குள் பேசி கொண்டு இருந்தனர். என்னவென்று விசாரித்தேன். விஷயம் இது தான். மேலாளரின் அறிவுரையையும் மீறி உணர்ச்சி வசப்பட்டு , போராட்டம் என்று தொடர்ந்து அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் கிளம்பவுதும் , தொடர் விடுமுறை எடுத்து இருக்கிறார்கள்.
விளைவு இவர்கள் குழு செய்த அலுவலக வேலைகள், ஹைதராபாத் கிளைக்கும், பெங்களூர் கிளைக்கும் அனுப்பட்டு உள்ளன. இப்போது புதிய வேலைகளும் அங்கே தான் பெருமளவில் அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று நாட்கள் இவர்கள் குழுவிற்கு பில்லிங் பண்ணும் அளவிற்கு வேலைகள் தரப்பட வில்லை என்பதால் கலக்கத்தில் உள்ளனர். இதில் கவனிக்க வேண்டியது, அவரின் மேலாளர் குடும்பத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்டவர்.
“அந்த ஆளு அப்பவே சொன்னார் டா, சென்னை மாறி பெரு நகரத்தில் இத்தகைய நீண்ட போராட்டம் பொருளாதார தேக்கத்தை ஏற்படுத்தும், ஒரு கட்டத்தில் இது முடிவு அடைய வேண்டும், தொடர்ந்தால் எல்லாரும் பாதிக்கபடுவார்கள், நாம தாண்டா யோசிக்கல”. இது தான் அந்த இளைஞர்கள் கடைசியாக சொன்ன வார்த்தை.
உண்மை இது தான் பல பேரால் சொல்லப்பட்டது, ஆனால் தான் சரியாக வேலைக்கு போய் கொண்டு , அவசர சட்டம் வந்த பிறகும், இளைஞர்களை விடாதே போராடு என்ற பல பெண்களும், ஆண்களும் தூண்டி விட்டனர்.
சில பேருக்கு பட்டால் தான் புத்தி வரும் போல.
No comments:
Post a Comment