Saturday, February 18, 2017

மாடு எப்படிடா தெய்வமாகும் என்று கேட்டவர்கள் ,இன்று மாடு எங்கள் தெய்வம் என்று பேசுகிறார்கள்

தமிழர்களே ஒரு முறை யோசியுங்கள். மாடு எப்படிடா தெய்வமாகும் என்று கேட்டவர்கள் (நான் எட்டாவது படிக்கும் போது, என் கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர் கேட்டார்) , இன்று மாடு எங்கள் தெய்வம் என்று பேசுகிறார்கள். ஜல்லிக்கட்டு தடைக்கு உலக அரசியலை பற்றி பேசியவர்கள் , உள்ளூர் அரசியல் பற்றி பேச மறுக்கிறார்கள்.
சட்டென்று தமிழ் கலாச்சாரம் பற்றி எல்லாருக்கும் கவலை வருகிறது. யோசியுங்கள், தமிழ் கலாச்சாரத்தின் மீது தாக்குதல்களை தொடர்ந்து செய்தது யார். இஸ்லாமும், கிறிஸ்தவமும் தமிழ் மண்ணில் தழைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழரின் கலாச்சாரத்தின் கட்டமைப்பு தொடர்ந்து குறி வைத்து தகர்க்கபட்டது.
தமிழகத்தின் ஊர்களின் பெயர்களை அரபு, ஐரோப்பிய பெயர்களில் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது, அதற்கு பின் நிற்பது யார்?
தமிழ் பெயர்களை தவிர்த்து , ஆங்கிலேயே, அரபு பெயர்களை தங்கள் மக்களுக்கு சூட்ட சொல்லி கொடுத்தது யார் ?
தமிழ் சித்தர்கள் செய்த அற்புதங்கள் முன் தங்கள் இறை தூதர்களின் அற்புதங்கள் செல்லா காசாகி விடும் என்று பயந்து, சித்த மருத்துவத்தையும் சிதைத்து , சித்தர்களை பற்றிய அறிவை தமிழ் மக்கள் பெற கூடாது என்பதற்காக , ஆங்கிலேய மருத்துவத்தை முன்னிலை படுத்தியது யார்?
தமிழ் கலாசாரத்தின் அங்கமான பொட்டு வைத்தலையும் , பூவையும் தங்கள் மக்களிடம் தடை செய்தது யார் ?
தமிழ் தெய்வங்களை இங்கே மறுத்து கொண்டும், இழிவுபடுத்தி பேசி கொண்டும் இருப்பது யார்?
தமிழ் கலாச்சாரத்தையும் அதன் விழுதுகளையும் தாங்கி கொண்டு இருக்கும், தமிழக கோவில்களுக்கு போக கூடாது என்று தங்கள் மக்களுக்கு கட்டளை இட்டது யார்?.
ஏசுவிற்கு முற்பட்ட தமிழர்களின் திருக்குறளை , கூச்சமே இல்லாமல் அது ஆபிரகாம மதத்திற்கு சொந்தமானது என்று சொன்னது யார்?
தமிழரின் பொங்கல், இயற்கையையும் , அதை உழைத்து உரமாக்கி தரும் விவசாயிக்கு பக்க பலமாய் நின்ற மாட்டையும் கொண்டாடியது. மாடு தெய்வம் என்று தமிழன் கை எடுத்து கும்பிட்டான், கும்பிட்ட அந்த கைகளை ஏளனப்படுத்தி , “முட்டாளே மாடு எப்படிடா தெய்வம் ஆகும்” என்று பரிகசித்த பகுத்தறிவு கூட்டம் எது ?
நாகரிகத்தின் உச்சம் தொட்டு வாழ்ந்த தமிழனிடம் , நீங்கள் அடிமையாய் அறிவு அற்றவராய் இருந்தீர்கள் , ஆபிரகாம மதங்கள் வந்த பின் தான் அறிவு பெற்றீர்கள் என்று நம்ப வைத்தது யார் ?
தன் மத நம்பிக்கையை மட்டும் சரியாக தன் மக்களிடம் பேண செய்து, ஆனால் தமிழருக்கு மட்டும் மதம் இல்லை என்று சொன்னது யார்?
அந்த “யார்” யார் என்று சொல்லி தெரிய வில்லை. தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் , அதன் பண்பாட்டையும் மறுத்த , தமிழருக்கு அந்நிய மதங்களான இஸ்லாமும், கிறிஸ்தவமும் தான் ஆரியனை அந்நியன் என்று தமிழருக்கு சொல்லி கொடுத்தது.
ஆனால் அந்த ஆரியர்கள் தமிழர்களின் எல்லா கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் மதித்தது, கொண்டாடியது. நாம் உற்று நோக்க மறந்த விஷயம் இது.
மிக சரியான திட்டமிடல் இது. தமிழனை, தமிழ் கலச்சாரத்தில் இருந்து பிரித்தார்கள்.
இதை ஒரு போதும் நாம் யோசிக்க வில்லை. யோசிக்க மறுத்து மயங்கி நின்றதால், இன்று நம் மாடுகள் மடியும் நிலைக்கு வந்து இருக்கிறது.
“ஆட்டை கடித்து மாட்டை கடித்து” கடைசியில் தமிழனை கடிக்க காத்து இருக்கிறார்கள்.
சிந்தியுங்கள்!!

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...