கை குழந்தையில் இருந்து, வயது முதிர்ந்த பாட்டி வரை, பெண் என்ற இனத்தின் மீது நடத்தப்படும் வல்லுறுவுகள் வேதனையை தருகின்றன. அரக்க ஆண்களின் ஆண்மையற்ற காமத்திற்கு , கள பலியாக விழுகின்றன வீதியில் விளையாடும் சின்னம் சிறு பெண் குழந்தைகள்.
பெண்கள் வயது வந்தாலே வெளியே போக ஆயிரம் கட்டுப்பாடு இன்னும் இந்த தேசத்தில் உண்டு. தன் விழியாலே தனது உடம்பை உரித்து உண்ணும் , கழுகுகளிடம் இருந்து தப்பி தினமும் வீடு வந்து சேர்வதே ,மங்கையற்கு ஒரு மாபெரும் சோதனை.
ஆணை பற்றிய அச்சம் அற்று பெண் பிள்ளை ஆடி பாடி திரிவது அவள் பிள்ளை பருவத்தில் தான். அதுவும் இனி பெண் பிள்ளைகளுக்கு இருக்க போவதில்லை போலும்.
பெண்ணாக வாழ்வதே ஒரு பெண்ணிற்கு இங்கே போராட்டம் என்று மாறி போனால, பெண்களும், அவர்களை பெற்றவர்களும் என்ன தான் செய்வார்கள் இந்த சமூகத்தில்.
இந்த மாதிரி மிருகத்தை, வெட்டி கொல்ல வேண்டும் இல்லை அறுத்து எறிய வேண்டும்...
No comments:
Post a Comment