Saturday, February 18, 2017

ஜல்லிக்கட்டு எப்படி "இந்தியா அதிக மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும நாடு" என்ற வார்த்தையுடன் இணைகிறது, என்று தேடிய போது எனக்கு கிடைத்த புரிதல் இது.

ஜல்லிக்கட்டு எப்படி "இந்தியா அதிக மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும நாடு" என்ற வார்த்தையுடன் இணைகிறது, என்று தேடிய போது எனக்கு கிடைத்த புரிதல் இது.
மாடு என நாம் சொல்வது எருமை மாடுகளை. அதுவும் மாடு இனம் தான். அமெரிக்காவின் வேளாண்மைதுறை water buffalo எருமை மாடுகளை “beef” மாடு என்று பட்டியலில் சேர்த்தது. எருமை மாடுகளும் உயிர் தான். அதவும் தடுக்க பட வேண்டியதுதான் மாற்று கருத்து இல்லை. ஆனால் நாட்டு மாடுகள் என்று சொல் பொதுவாக எருமைகளை குறிப்பது இல்லை. அது நாட்டு பசு , மற்றும் காளை இனத்தை தான் குறிக்கின்றன பெருமபாலான மாநிலங்களில் பசு வதை தடை செய்யப்பட்டு உள்ளன. பெரும்பாலும் இந்திய சமூகத்தில் காளைகள் கொல்லபடுவது இல்லை.
இந்தியா அதிக அளவில் எருமை மாட்டு இறைச்சியை தான் ஏற்றுமதி செய்கிறது. பொது தளத்தில் இந்தியா “beef” ஏற்றுமதி செய்கிறது என்று சொல்லும்போது அது நம் நாட்டு மாடுகளையும் சொல்வதாக அர்த்தம் வருகிறது. இது சல்லிக்கட்டுக்கு எதிராக பேசுபவர்களின் வாதத்திற்கு வலு சேர்க்கும் அனார்த்ததிற்கு வித்திடுகிறது. நம் வாதம் என்ன, சல்லிக்கட்டு தடை நாட்டு மாடுகளை அழிக்கும். நாமே என்ன சொல்கின்றோம் “மாடுகளின் இறைச்சி ஏற்றுமதியில் “ இந்தியா இரண்டாம் இடம். ஆனால் எந்த மாடுகள் என்பது என்ற புரிதல் தவறாக போகிறது. காளைகள் வேண்டும் என்றால் அதை பெற்று தர நாட்டு பசுக்கள் வேண்டும். ஆனால் பசு வதை தடை என்று பேசுபவர்களின் மீது மத முத்திரை குத்தி எதிர்க்கின்றோம். ஒரு பக்கம் பசுக்களை கொல்வது என் உணவுக்கான உரிமை என ஆதரித்து விட்டு, மறு பக்கம் நாட்டு மாடுகள் அழிகிறது என்று சொல்கின்றோம்.
ஆக நம் வாதம், பசுவையும் , காளையையும் கொல்ல தடை கொண்டு வருவது போல் எருமை மாடுகள் கொல்வதையும் தடை என்று பேசுவது தான் சரியானதாக இருக்க முடியும்.
இன்னும் சற்று பின்னோக்கி நகர்ந்தால் , வேத கால இந்தியாவில் அவைகள் யாகத்தில் பலி இடப்பட்டன, யாக குதிரைகள் பலி இடப்பட்டன. இரண்டும் உண்ணவும் பட்டு இருக்கிறது. அந்தணர்கள் மற்றும் ரிஷிகள் உணவாக ஏற்று இருக்கிறார்கள். பின்பு உயிர்வதை அகிம்சை இன்மை என்ற கொள்கை பரவலாக ஏற்கப்பட்டு, அது கை விடப்பட்டது.
பின்னர் மாடுகளையும் உணவாக ஏற்று கொள்ளும் முகலாயர்கள் படை எடுப்பு நிகழ்ந்து , பாரத தேசத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. பல நூறு ஆண்டுகள் முகலாய அரசுகள் ஆண்டன. மக்கள் மத மாற்றப்பட்டனர். ஹிந்து அரசுகள் மீண்டு எழுந்த போது , முகலாய அரசுகள் சிதைய ஆரம்பித்தன. மக்கள் மீண்டும் ஹிந்து மதம் திரும்பினர். ஆனால் மாட்டு இறைச்சி உண்ணும் பழக்கம் சில ஹிந்து மத மக்களிடம் தொடர்ந்தது.
மாட்டை உணவாக உண்ணும் ஆங்கிலே கிறிஸ்தவர்கள் வந்த போதும், இந்திய நாட்டு மாடுகள் இனம் பெரும் பாதிப்பு அடைநதது. குறிப்பாக ராபர்ட் கிளைவ் காலத்தில் இந்திய விவசாயத்தை அழிக்க மாடுகளை அழிக்க பல கொலை களம் உருவாக்க பட்டன.
நாம் கவனிக்க வேண்டிய விஷயம் , புத்த மதம் தோன்றிய காலத்தில் இருந்து சனாதன தர்மம், உயிர் வதையில் இருந்து விலகியது.விலக நேர்ந்தது என்றும் சொல்லலாம். குறிப்பாக பசுவை வதைக்க கூடாது என்பது பெருவாரியாக ஏற்று கொள்ளப்பட்டது. இஸ்லாம், கிறிஸ்தவமும் அதன் தொடக்க காலத்தில் இருந்து இன்று வரை எல்லா மாடுகளையும் உணவு பட்டியலில் வைத்து இருக்கிறது. உலகத்தின் மூன்றாவது இஸ்லாமிய மக்கள தொகை கொண்ட இந்தியாவில் எந்த அரசும் beef மாட்டை தடை செய்தால் , அது சுலபமாக இஸ்லாமுக்கு எதிராக திருப்பப்டும். எல்லாரும் அரசை சாடுவார்கள்.
பசு வதை தடை செய்யப்பட்ட மாநிலத்தில் இருந்து , பசு வதை தடை இல்லாத மாநிலத்திற்கு நாட்டு பசுக்களும், காளைகளும் திருட்டு தனமாக அனுப்பப்பட்டு அங்கே கொல்ல படுகின்றன, அங்கே இருந்து ஏற்றுமதி செய்யபடுகின்றன. கேரள ஒரு மிக சிறந்த உதாரணம்.
ஒரு பக்கம் பசுவதை தடையை எதிர்ப்பது ,அதை நாடு முழுதும் கொண்டு வர முயலும் அரசின் மீது சிறுபான்மை விரோதம் என்று மிரட்டி தடுப்பது, இன்னொரு பக்கம் மாடு எனது உணவு என்ற போர்வையில் பசுவையும் காளையையும் , எருமை மாடுகளுடன் சேர்த்து கொல்லுவதற்கு ஆதரவு அளிப்பது , சல்லிக்கட்டு நடத்த விடாமல் செய்து காளைகளை மெல்ல அழிப்பது,
கூட்டி கழித்து பார்த்தால், இது எல்லாம் ஒரே நேர்கோட்டில் சேர்ந்து பயணிக்கிறது என்று தான் எனக்கு புரிகிறது.
“அந்த பயணத்தின் இறுதியில் இந்திய நாட்டு மாடுகள் எதுவும் மிஞ்ச போவதில்லை” என்பது தான் என் புத்தியில் உறைத்தது

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...