Saturday, February 18, 2017

மெரீனாவில் நான் பார்த்த வரைக்கும் ஒரு இரண்டு குழுக்கள் தான் , பேசுதலும், வார்த்தைகளும் மோசமாக இருந்தது

மெரீனாவில் நான் பார்த்த வரைக்கும் ஒரு இரண்டு குழுக்கள் தான் , பேசுதலும், வார்த்தைகளும் மோசமாக இருந்தது. அந்த இரண்டு குழுக்களின் நோக்கம் சல்லிகட்டு அல்ல, மோடி/இந்திய தேசியம் எதிர்ப்பு. ஆனால் மற்ற குழுக்கள் பொதுவாக தான் பேசி கொண்டு இருந்தது, மத்திய , மாநில மற்றும் எல்லா திராவிட கட்சிககளையும் விமர்சித்தது , தமிழர் பெருமையை திரும்ப திரும்ப சொல்லி கொண்டு இருந்தது. நோக்கம் தெளிவாக இருந்தது , சல்லிகட்டு தடையை வெல்லுதல் என்ற நோக்கம். நியூஸ் 7 இவர்களை தான் சரியாக காட்டி கொண்டு இருந்தது. அதாவது ராகவா லாரன்ஸ் இருந்த இடம் என்று சொல்லலாம்.
முதல் முறை இரவில் சென்ற போது யார் எந்த குழு என்று சரியாக தெரியவில்லை. யார் கூட நின்று கோசம் போடுவது என்று தெரியாமல் , எல்லா கூட்டத்துடன் கோசம் போட்டால் , நடுவில் சட்டென்று எவனாவது இந்தியாவிற்கு எதிராக கோசம் போட்டு விடுகிறான் . அது குழப்பமாக இருந்தது. இரண்டாம் முறை பகலில் சென்ற போது , இந்த இரண்டு கூட்டத்தையும் விட்டு ஒதுங்கி வந்து சரியான குழுவில் கலந்து கொண்டேன். 5 மணி நேரத்திற்கும் மேலாக அது சரியான திசையில் பயணித்தது. சல்லிக்கட்டு மற்றும் அதன் பாரம்பரியும் பற்றி தான் பேசியது. எல்லா வித மக்களும் இருப்பார்கள் என்று புரிந்து கொண்டு , போராட்டத்தை சரியாக கொண்டு போனது. சில பேர் வேறு பக்கம் பேச முயன்றால் , அப்படி பேசுவதை தவிருங்கள் என்று உடனே சொல்கிறார்கள். கூட்டத்தில் கலந்து கொள்பவர்களிடம் சுழற்சி முறையில் கலந்து கொள்ள அறிவுறுத்தி கொண்டு இருந்தது. அதாவது தொடர்ந்து நடை பெறுவதை உறுதி செய்து கொண்டது.
மக்கள் சந்தோசமாக குடும்பம் குடும்பமாக வருகிரார்கள், ஒவ்வோர் கூட்டமாக நகர்ந்து போய் கோசம் போடுகிறார்கள். உணவு பொட்டலம் வாங்குகிறார்கள்/கொடுக்கிறார்கள் செல்பி எடுக்கிறார்கள். சிலம்பாட்டம் ஆடுகிறார்கள். காவல் துறை பாதுகாப்பாக நிற்கிறது
.
தமிழ் நாட்டின் அடுத்த முறை தலைவர்கள் அந்த கூட்டத்தில் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
குறிப்பு :எந்த கூட்டத்தை தவிர்க்க வேண்டும்
என்பதற்காக ஒரு குழுவின் வீடியோவை ஏற்றி உள்ளேன். அவர்களை தவிர்த்து விடுங்கள்
-0:32
Click for more
196 Views

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...