Saturday, February 18, 2017

நந்தினிகளை பற்றிய செய்திகள் நிற்க போவதில்லை

பெண் என்ற ஒற்றை சொல்லில் வரும் பெண்களின் மேல் நடக்கும் கொடுமைகளை பற்றி பேசாமல் தலித் பெண், பிராமன பெண், செட்டியார் பெண்.. சேட்டு பெண் என்று எதாவது அடையாளத்தை வைத்து தான் எப்போதும் பெண்ணை மீடியா பார்த்து இருக்கிறது. உற்று நோக்கினால், எல்லா வித பெண்களுமே இங்கே வீழ்த்தப்பட்டு இருக்கின்றனர். பெண் என்ற ஒற்றை சக்தியில், பெண்கள் தங்களுக்குள் இணையாமல் பெண்களால் தன் மீதும் ஏவப்படும் கொடுமையில் இருந்து விடுபட முடியாது. அப்படி அவர்கள் இணைய கூடாது என்பதற்காக தான் , தனி தனியாக அடையாள படுத்துகின்றனர். சுவாதி ஒரு பிரமாண பெண் என்பதற்காக , ஆண்ட பரம்பரை வாயில் விழுந்த வெட்டு என்று சமூகவளைத் தளத்தில் பதிவுகள் பரவி மகிழ்ந்தன. நந்தினி ஒரு தலித் பெண் என்பதால், தலித் மீதான வெறுப்பை உமிழ இப்போது பதிவுகள் வருகின்றன
என்னை பொறுத்தவரை வரை, அரசாங்கம் யாராக இருந்தாலும் , குற்றவாளி மீது கடுமையான தண்டனை எடுக்கப்பட்டு , இன்னோர் பெண்ணிற்கு இது நிகழாத வண்ணம் பயம் ஆண்கள் மத்தியில் வர வேண்டும், பெண்கள் மனதில் பயம் போக செய்ய வேண்டும்.
.
சுவாதி , நந்தினி, ஜிஷா, நிர்பயா எல்லார்மே ஆண் என்ற ஆதிக்க அரக்கனின் கையில் சிக்கி சிதைந்த பெண் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது தான் உண்மை. வேதனையான விஷயம் பெரும்பாலான பெண்களே இதை உணர வில்லை. அதிகாரத்தில் இருந்த ஜெயலலிதா, மம்தா , இந்திரா காந்தி , சோதிமணி , சசிகலா, தமிழிசை , ஸ்மிருதி இரானி, விஜயதாரணி மீதான தனி நபர் தாக்குதல்களை பெண்களில் பலர் ஆதரித்தனர். அவர்களை பற்றிய அரசியல் சார்ந்த விமர்சனத்தை வைக்காமல் ,அவர்கள் உருவம் , தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த விஷயத்தை பற்றி தான் விமர்சனம் வந்தது. கண்டிக்க பலர் மறந்தனர் அல்லது கண்டு கொள்ளாத மாதிரி இருந்தனர். அதை படித்து சிரித்தனர். என்றாவது ஒரு நாள் அது தன் மேலும் நடக்கும் என்பதை பல பெண்கள் அறியாமல் இருந்தனர்.
பெண்கள் எப்போது எல்லா வித வேறுபாட்டையும் கலந்து ஒன்றாக ஒரு புள்ளியில் குவிய தொடங்குகிறார்களோ அப்போது தான் பெண்களால், தன் சக பெண்கள் மீதான ஆண்களின் தொடர் வன்முறையை வீழ்த்த முடியும்.
அது வரை நந்தினிகளை பற்றிய செய்திகள் நிற்க போவதில்லை
Like
Comment

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...