#இன்று_நேதாஜி_பிறந்த_தினம்#
தேசத்தந்தைகள், எல்லாம் பிள்ளைகள் அடிப்படுவதை வேடிக்கை பார்க்க , தேசதந்தைகளின் கை தடியை பிடுங்கி , பிள்ளைகளை அடிக்க வந்த ஆங்கிலயனை திருப்பி அடித்தவர். தேசம் எங்களின் சுவாசம் என்று சொன்ன மனிதன். இந்திய தேசத்தின் விடுதலை என்ற ஒன்றை தேடி , மண், கடல், வான் என்று எல்லா திசைகளிலும் பறந்து சென்றவர்.
தேசத்தந்தைகள், எல்லாம் பிள்ளைகள் அடிப்படுவதை வேடிக்கை பார்க்க , தேசதந்தைகளின் கை தடியை பிடுங்கி , பிள்ளைகளை அடிக்க வந்த ஆங்கிலயனை திருப்பி அடித்தவர். தேசம் எங்களின் சுவாசம் என்று சொன்ன மனிதன். இந்திய தேசத்தின் விடுதலை என்ற ஒன்றை தேடி , மண், கடல், வான் என்று எல்லா திசைகளிலும் பறந்து சென்றவர்.
அடக்கி ஆண்டு கொண்டு இருந்த ஆங்கிலே படைகள், அதிர்ந்து போய் பார்க்க, இந்திய ராணுவ படையை கட்டமைத்தவர். அடிமை இந்தியாவில், சுதந்திர இந்தியா என்று இந்தியர்கள் கனவு காணுகையில், கடல் கடந்து சுதந்திர இந்தியாவை அமைத்தவர்.
ஆங்கிலேயன் இந்திய மண்ணை விட்டு அகன்ற போன போதும், அவர்களின் உறக்கத்தில் பேயாய் போய் நின்று உலுக்கியவர். அதற்கு ஆதாரம், சுதந்திரம் பெறும் போது, இவரை கண்டிப்பாக பிடித்து கொடுக்கும்படி சொல்லி விட்டு தான் ஆங்கிலயன் தன் பிடியை விட்டான்.
ஆங்கிலேயன் படையில் இருந்த இந்தியர்கள் இந்திய இராணவ படையை எதிர்த்த போதும் , “இந்தியாவை ஒழித்து கட்டி விடுவேன்”, “இந்தியர்களை ஒழித்து கட்டி விடுவேன் “ என்று இவர் சொல்ல வில்லை.
“இந்தியா” என்ற ஆன்மாவிற்குள் தான் தானும் இருக்கின்றேன் என்று புரிந்து கொண்ட ஆன்மிகவாதி.
“இந்தியாவே ஒழிக” என்று முட்டாள் தனமாக கோசம் போடும் இன்றைய சில பிள்ளைகள் இதை புரிந்து கொள்ள வேண்டும். அதை “போலி மத சார்ப்பற்ற” என்ற புகழுக்காக மறைமுகமாக ஆதரிக்கும் சில மடையர்களின் மதிக்கும் எட்ட வேண்டும்.
“இந்திய தேசம்“ என்று சொல்லின் மைய புள்ளிக்கு இவரே ஆதாரம். நேதாஜி பற்றிய வரலாறு பக்கங்களை புரட்டி பார்க்கும் எந்த இந்திய பிள்ளைக்கும் உள்ளே வலிக்கும், ஏன் இந்த பிள்ளைக்கு இத்தனை தவிப்பு, வேதனை என்ற கேள்வி வரும். திசை அற்ற பயணத்திலும் இவரால் திசை வைத்து எப்படி பயணிக்க முடிந்தது ?. ஏதோ ஒரு உந்து சக்தி அவரை இயக்கி இருக்கிறது?
அது ஏது என்று நாம் தேட போனால் , விடையாக விவரித்து நிற்கிறது “ இந்தியா” என்ற ஒற்றை வார்த்தை.
ஆனால் சுதந்திர இந்தியாவை தேட போன இந்த பிள்ளை, சுதந்திர இந்தியாவிற்குள் மீண்டும் மீளவே இல்லை.
No comments:
Post a Comment