Saturday, February 18, 2017

பல கோழைகள் தற்காலிகமாக வீரமாய் மாறி இருக்கிறார்கள்

2010 அல்லது 2011 என்று நினைக்கிறேன். முக புத்தகத்தில் நண்பர் ஒருவர் , கேரளாவிற்கு திருட்டு தனமாக அனுப்ப இருந்த நாட்டு மாடுகளை மடக்கி மீட்டு விட்டு , கோசலைக்கு அனுப்ப கொஞ்சம் பணம் தேவை படுகிறது என்று பதிவு இட்டு இருந்தார். அந்த பதிவை தாண்டி செல்ல உறுத்தலாக இருந்தது. உறுதி செய்து விட்டு , என்னால் முடிந்த பணத்தை அனுப்பி விட்டு, அப்போது என் முக புத்தகத்தில் இருந்த நட்புகளிடமும் , உறவுகளிடமும் உதவ சொன்னேன். பணம் உதவ முடிய வில்லை என்றால் தயவு செய்து மீள் பதிவு செய்யுங்கள் என்று வேண்டினேன். பணம் தந்து உதவியவர் என் வீட்டு உரிமையாளர் மற்றும் ஒரு தோழி மட்டுமே.
பணம் தர வில்லை என்றாலும பரவாயில்லை் , ஆனால் பெரும்பாலும் எல்லாராலும் மத புத்தி பிடித்த சிறு மதி குணம் கொண்டவன் என சிறுமை படுத்த பட்டேன். கேலி செய்ய பட்டேன். அன்று மீள் பதிவு செய்ய மறுத்த ஆண்களும் பெண்களும் இன்று பத்து நிமிடத்திற்கு ஒரு முறை சல்லிகட்டு தடை காளை இனத்தை அழிக்கும் ,என்று வரும் பதிவுகளை மீள் பதிவு கொண்டு உள்ளார்கள். சிரிப்பாக வருகிறது.
நாட்டு பசு இல்லாமல் காளைகள் வளராது என்று புத்தியில் இப்போது தான் உறைத்ததா அல்லது கூட்டம் கூடியதால் வந்த தைரியமா என்று தெரியவில்லை.
பல கோழைகள் தற்காலிகமாக வீரமாய் மாறி இருக்கிறார்கள்.
"முக புத்தக போராளிகள்" என முத்திரை குத்தி மற்றவரை சாடிய கூட்டம் , இன்று தானே முக புத்தக போராளியாக மாறி ,மற்றவர்களுக்கு முகவரியாகி இருக்கிறது என்பதை இன்று ஒலிம்பியா அருகே நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது கண்டு கொண்டேன்.
ஏதோ ஒரு நல்லது நடந்து இருக்கிறது. நம்பிக்கை பிறக்கிறது.

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...