அது என்ன அம்மாவை பற்றி புகழ்ந்து பேசும் போது, தந்தையை விட்டு விடுகிறார்கள். இங்கே யாரும் வரம் வாங்கி கொண்டு வந்து பெண்ணாகவோ , ஆணாகவோ பிறப்பது இல்லை. இயற்கையின் இயக்கத்தில் நிகழ்பவை. தாய்க்கு மாற்று கிடையாது , அதே போல தான் தந்தை. தந்தை கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தில் உல்லாசமாக வாழ்ந்து கொண்டு , தாயே தெய்வம் என்று பாடி கொண்டு இருக்கிறார்கள், தந்தையை மதிப்பது இல்லை. பொருள் ஈட்டும் போரட்டத்தில் பல தந்தைகள் தன்னை இழந்து இருக்கிறார்கள். சுமை தாங்கியாகவே வாழ்ந்து விட்டு, சுவடே இல்லாமல் மறைந்து போகிறார்கள்.
ஐயோ பிள்ளைகள் பள்ளி கூடம் தொலைவில் இருந்தால் போய் வர களைத்து போவார்கள் என்று எண்ணி, பள்ளி கூடம் அருகில் வீடு பார்த்து , தந்தை தினமும் 50 கிலோ மீட்டர் பயணித்து வேலைக்கு போய் வந்து கொண்டு இருப்பார். பிள்ளைகளின் எதிர்காலம் கருதி தனது நிகழ் காலத்தை கடந்த காலமாக்கி கொண்டு இருப்பார். தந்தையை மட்டம் தட்டி பேசும் எந்த பிள்ளைகளும் தந்தையின் வருமானத்தில் தான் உல்லாச வாழ்க்கை நடத்துகிறது. பத்து ரூபாய் சம்பாரிக்க தெரியாத பிள்ளைகள் , தந்தையிடம் ஆயிரம் கேள்விகள் கேக்கும். ஒரு வகையில் பிள்ளைகளின் இந்த அலட்சிய போக்கிற்கு தாயும் ஒரு காரணம். பிள்ளைகளை கணவனுக்கு எதிராக தூண்டி விட்டு தன்னை நிலை நிறுத்த முயல்கிறார். பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனவுடன் தாயையும் சேர்ந்து எதிர்க்கிறது. தாய் வேறு வழி இல்லாமல் பிள்ளைகள் பக்கம் முழுதும் விழுந்து விடுகிறார்.புத்தி சொல்லும் தந்தை பிள்ளைகளுக்கு தொந்தரவராக தெரிகிறார். பல குடும்பத்தில் இது தான் நிலை.
தாயின் தடையற்ற அன்பானது தந்தையின் தியாகத்தினாலும் உழைப்பினாலும் தான் பிள்ளைகளுக்கு முழுதாக கிடைக்கிறது. தந்தையை தள்ளி வைத்து தாயை கொண்டாடி மகிழ்வது தவறு. இறையும் பெற்றவர்களும் வேறானவர்கள் அல்ல. இறையிடம் பேதம் பார்த்தல் சரியா?
No comments:
Post a Comment