சில நண்பர்களுக்கு , மோடியை திட்டி கொண்டு இருக்கும் எல்லா பதிவுகளுக்கும் பதில் சொல்லி கொண்டு இருக்க தேவை இல்லை. மோடியை திட்ட விடுங்கள் . அவர் செய்தாலும் திட்டுவார்கள், செய்ய வில்லை என்றாலும் திட்டுவார்கள். யாரிடமும் மாற்று திட்டம் இல்லை.
ஆனால் நன்றாக கவனித்து பாருங்கள் சட்டென்று சில பேருக்கு நாட்டு மக்களின் அக்கறை, ஒரு பரிதவிப்பு , சக குடி மகன்கள் மீது பாசம். வருத்த பட்டு தொடர்ந்து பதிவுகள் தேசத்தின் மக்கள் பற்றி போட்டு மோடியை தாக்குகிறார்கள்.
ஆனால் நன்றாக தொடர்ந்து அவர்களை கவனியுங்கள் இந்திய நாட்டு குடி மக்களில் ஒருவரான நமது தேசத்தின் இராணுவ வீரர்களின் உயிர் தியாகம் பற்றி வருத்த பட்டு, ஒரு பதிவு கூட அவர்களிடம் இருந்து வந்து இருக்காது.
தேசத்தின் காவல் தெய்வங்கள் பற்றி கவலை படாத கூட்டத்திற்கு, இன்று தேசத்தின் மக்கள் மீது கவலை வருகிறது. இராணுவ வீரர்களும் இந்த தேசத்தின் அங்கம் அல்லவா. விசித்திரமாக இருக்கிறது இவர்கள் வருத்தபடும் முறை. ஒரே நோக்கம் மோடியை குறை சொல்ல வேண்டும்.
எப்படி பண முதலைகள் வந்து வரிசையில் நிற்கும், கணக்கு சொல்ல வேண்டும் அல்லவா.
இது கஷ்ட காலம், இதை கடக்க வேண்டும். இந்த தேசத்திற்காக அதன் எதிர்காலதிற்காக இதை எதிர் கொள்ள வேண்டும். வேறு வழி இல்லை. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாக இருந்து எல்லாரும் இதை கடக்க வேண்டும்.
என்னை பொறுத்தவரை, முதல் அடியை மோடி தொடங்கி விட்டார். நல்லது இதை செய்து வீட்டிர்களா, பெரும் பண நிறுவனங்களின் மீது உங்களது நடவடிக்கையை எதிர்பார்கின்றேன்.
மோடியை திட்டுங்கள் எழுதுங்கள் , கண்ட படி ஏசுங்கள் , வருத்தம் இல்லை. குறை சொல்பவர் எப்போதும் குறை சொல்லி கொண்டு இருப்பார்கள்.
எதற்கும் பதில் சொல்லாதீர்கள் , காலம் பதில் சொல்லும்
No comments:
Post a Comment