ஈசன் அன்பன் ,அப்பன், தாயுமானவன்,பித்தன், கூத்தாடி. அவனை உணர்தல் மிக சுலபம், ஆனால் தொடர்ந்து உள்ளே தக்க வைத்தால் சாத்தியம் அன்று. உள்ளே வரும் மூச்சு காற்றாய் வந்து, வெளியே போகி்றபவன் அவன். அவனை சுகிக்கமால் இங்கே சுவாசம் இல்லை. அகிலாண்ட ஈஸ்வரி அரவணைப்பில் இருந்தாலும், ஈசன் தியானத்தில் ஆழ்பவன். காலத்திற்கு முன்னும் பின்னும் இருந்தவன் அவனே. அவனை அறியும் வழியை அவனே சொல்ல வேண்டும், அவனை அடையும் வழியையும் அவனே சொல்ல வேண்டும்.
பற்று அறுக்கும் பாதை இந்த பாமரனுக்கு தெரிய வில்லை. சட்டென்று எல்லாவற்றையும் உதறும் வல்லமையையும் நமக்கு இல்லை. உள்ளே இடைவிடாது சிவத்தை சிந்தனையில் வைத்தால , சிவம் இரங்கும்.அவன் விழி திறந்து பார்க்கும் போது , இங்கே எல்லா விலங்கும் அறுப்படும். உயிர் குருவி உடல் என்ற கூட்டை உதறி , ஈசனை தேடி பறக்கும்.
உணர்த்துவதும் அவனே, அதில் உணரபடுவதும் அவனே.
No comments:
Post a Comment