எனக்கு தெரிந்து இரண்டு விதமான கிறிஸ்தவ குடும்பம். இரண்டு குடும்பத்திலும் தாய் ஹிந்து , தந்தை கிறிஸ்தவர். முதல் குடும்பத்தை கல்லுரி நாட்களில் பார்த்து இருக்கின்றேன். முதல் குடும்பத்தில் ஹிந்து மதத்தின் தாக்கம் அதிகம். அவர்களின் பிள்ளைகள் கோவிலுக்கும் போகிறார்கள் ,சர்ச்சுக்கும் போகிறார்கள். இறையானது எந்த ரூபத்திலும் தென்படும் என்ற நம்பிக்கை அங்கே நங்கூரமாக இறங்கி இருக்கிறது. அடுத்த மதத்தின் நம்பிக்கையின் மீது வெறுப்பு இல்லை. பைபிளையும் , கந்த புராணத்தையும் தாண்டி கடவுளின் வேறு அவதாரங்கள் பற்றி ஆவலாக இருந்தார்கள்.
இரண்டாவது குடும்பத்தை சமீபத்தில் நண்பர் ஒருவர் மூலம் சந்தித்தேன் இந்த குடும்பத்தில் கிறிஸ்தவத்தின் ஆதிக்கம் அதிகம், அவர்களின் பிள்ளைகள் இயேசு மட்டும் தெய்வம் என்று சொல்லி திரிகிறது. தாய் மேல்மருவத்தூர் போனால் கிண்டல் செய்கிறது. அடுத்த மதத்தின் நம்பிக்கை மீது அப்படி ஒரு வெறுப்பு. தாய் கொடுக்கும் கோவில் பிரசாதங்களை தந்தையும் பிள்ளைகளும் ஏற்க மறுக்கிறது. ஆனால் ஹிந்துவாக இருக்கும் தாய் கொண்டு வரும் பணத்தை வாங்கி கொள்கிறது , அதில் ஜெருசேலம் போவதற்கு காசு சேர்க்கிறது. தாய் தேசத்தில் நிகழ்ந்த அற்புதங்களை பற்றி அப்படி ஒரு அவநம்பிக்கை.
உங்களை சுற்றியும் அப்படி பட்டவர்கள் இருக்கலாம், கவனித்து பாருங்கள்.
நான் ஏன் ஹிந்துவாக இருக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் என்னை சிந்திக்க வைக்கிறது இப்படி பட்ட நிகழ்வுகள்
No comments:
Post a Comment