Rangaraj Pandey இப்படி பட்ட ஒரு நெறியாளரை வைத்து தான் நீங்கள் விவாதம் நடத்த வேண்டுமா. நீங்கள் எல்லாம் என்ன அயல்நாட்டு பிரஜையா? இந்திய தேசத்தில் வந்து தொழில் செய்து கொண்டு உள்ளிர்களா?. அது என்ன கேள்வியை இப்படி கேட்கீர்கள் " அந்த நாட்டு உடைய பாதுகாப்பை அந்த தொலை காட்சி சமரசம் பண்ணி விட்டதா " . (@ 3.33 MINUTES). எந்த நாட்டு உடைய பாதுகாப்பு என்று கொஞ்சம் சொல்லுங்களேன். ? இது தெரியாத்தனமாக வரும் வார்த்தை அல்ல. கிட்டத்தட்ட எல்லா ஊடகவியளரும் சொல்லும் வாரத்தை. நீங்கள் எல்லாம் எல்லா தேசத்திற்கும் அப்பாற்பட்ட பிறவியா ". "நம் தேசத்தின் பாதுகாப்பை NDTV சமரசம் செய்து விட்டதா " என்பது தான் இந்திய ஊடகவியலாளரின் வார்த்தையாக வர முடியும். ஆனால் விவாதம் முழுவதும் இந்தியாவிற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி வார்த்தைகள்
NDTV டிவி யும் , அதன் இயக்குனர்களும் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான மனநிலையை உருவாக்கி கொண்டு இருந்தார்கள். காஷ்மீர் தீவிரவாதியை தியாகி ஆக்க முயன்றார்கள். ndtvயின் வார்த்தைகளை அப்படியே ஐநா வில் பாகிஸ்தான் பிரதமர் வழி மொழிந்தார் என்பதில் இருந்தே அந்த டிவியின் இந்திய வெறுப்பை புரிந்து கொள்ளலாம். அந்த டீவி யை தடை செய்யாமல் வேறு என்ன செய்ய முடியும்.
நாளையே உங்கள் தொலைக்காட்சி அலுவலகத்தில் தீவிரவாதி புகுந்தால் , நீங்கள் எங்கே ஒளிந்து கொண்டு உள்ளீர்கள் , உங்கள் ஊழியர்கள் எங்கே ஒளிந்து கொண்டு உள்ளார்கள் , மீட்பு அதிகாரிகள் எங்கே உள்ளனர் என்று தந்தி டிவி சொல்லுமா? , அந்த தீவிரவாதி ஒரு ஏழை தொழிலாளியின் மகன் என்று சொல்லி உருகி கொண்டு இருக்குமா ?
இங்கே யாருக்கும் கட்டுபாடு அற்ற சுதந்திரம் கொடுக்க பட வில்லை. உச்ச நீதிமன்றம் கூட விதி விலக்கல்ல.
ஊடக சுதந்திரம்/ஒற்றுமை என்ற பெயரில் இந்தியாவின் பாதுகாப்பை அலட்சியம் செய்ய துணிகிறது ஊடக துறை.
BJP Tamilnadu Tamilisai SoundararajanK.T.RaghavanH Raja எவ்வளவு முக்கியமான விவாதத்தில் , கருத்துகளை அதன் பின்புலத்தையும் ஆணித்தரமாக வைக்கும் நபர்களை அனுப்பாமல் , மென்மையாக பேசும் நபரை அனுப்பி இருக்கீர்கள். பத்திரிகையாளர் ஷ்யாம் பேசும் அளவிற்கு கூட பிஜேபி பேச வில்லை.
No comments:
Post a Comment