Tuesday, December 27, 2016

தியேட்டரில் தேசிய கீதம் இசைக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

நல்ல நோக்கம் தான். ஆனால் இது தேவை அற்றது. குறிப்பாக தேசிய கட்சிகள் வலு இல்லாத தமிழ் நாட்டில், தமிழ் தேசியம் பேசும் திராவிட கட்சி இருக்கும் இடத்தில் , இது செயல் படுத்த முடியாது. தேசிய கொடியை எரித்தவனை அழைத்து ஊடகம் பேச வைக்கிறது. அவனுக்கு திராவிட கட்சிகளும் , பகுத்தறிவு கூட்டமும் வக்காலத்து வாங்கியது. சாதியை இழுத்தது. கண்டனம் தவிர்த்து வேறு ஒன்றும் நடக்க வில்லை. உள்ளே போனவன் வெளியே வந்து இன்னும் இந்திய தேசத்தை இழிவாக தான் பேசி கொண்டு உள்ளான். இது வட இந்தியாவில் நடந்து இருந்தால் இந்நேரம் நடந்து இருப்பது வேறு. ஆளும் அரசாங்கம் அவனை துவைத்து இருக்கும். இங்கே அது சாத்தியம் அன்று. ஏன் எனில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது.
நேசிப்பவன் எழுந்து நிற்பான். நிற்க இயலாமல் போகும் உண்மையான காரணத்தை தவிர்த்து. நிற்க விரும்பாதவன் பல காரணம் சொல்வான். . அவனுக்கு ஆதரவாக பல கூட்டம் வரும். சாதி பேசும், சிறுபான்மை உரிமை பேசும். அரசாங்கம் என்ன செய்யும், தமிழ்நாட்டு அரசாங்கம் வேடிக்கை பார்க்கும் .
புதுடில்லி: 'நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில், திரைப்படம்…
DINAMALAR.COM

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...