Tuesday, December 27, 2016

போய் வாருங்கள் தாயே. ஜெயலலிதா

போய் வாருங்கள் தாயே.
இது அதிர்ச்சியை தவிர வில்லை ஒரு ஆற்றாமையை தருகிறது. உள்ளே ஒரே சங்கடமாக இருக்கிறது எல்லார் மனதிலும். வீடு திரும்ப இருந்த நேரத்தில் விதி வழி மறித்து பறித்து கொண்டது. ஊருக்கு பகுத்தறிவு உபதேசம் பண்ணி விட்டு, வீட்டில் பஞ்சாங்கம் வைத்து பிராத்தனை செய்து கொண்டு இருந்த ஆண் அரசியல் தலைவர்கள் மத்தியில், ஒளிவுமறைவு இன்றி தன் ஆன்மிக நம்பிக்கையை அறிவித்த ஆண்மை மிக்க ஒரே பெண் முதல் அமைச்சர்
ஆணாதிக்கம் ஊடுருவி போன சமூகத்தில் , ஒரு பெண்மணியாக இவர் அரசாண்ட விதம் வியப்பின் உச்சம். மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் , இவர் காட்டிய மன உறுதி வேறு எந்த மங்கைக்கும் இனி வருமா என்பது கேள்விகுறி தான்.
இவரின் சில செயல்பாடுகள் ஐயம் இன்றி விமர்சினத்திற்கு உள்ளானவை தான். ஆனால் தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சினைகளில் , இவரின் உறுமல்கள், உச்ச நீதிமன்றத்தில் உரிமையை பெற்று தந்தது. ராஜ தந்திரி என்றழைக்கப்பட்ட கருணாநிதியும் கூட பல குள்ள நரிகளை தன்னுடன் சேர்த்த பின்னரே, யுத்தத்திற்கு போனார், ஆனாலும் பெரும்பாலும் ஜெயம் ஜெயாவிற்கு தான்
அம்மா என்று இவரை தொண்டர்கள் அழைப்பதற்கு அம்மா உணவகம் ஒரு மிக சிறந்த உதாரணம். தனித்து நின்று களம் கண்டு ஜெயாவை வீழ்த்த எந்த திராவிட கட்சிக்கும் இங்கே தைரியம் இருந்தது இல்லை. எதிர்ப்பவர் எவரையும் எதிர்த்தவர். காலனும் அதற்கு விதி விலக்கல்ல. இவரை முறித்து போட முடிய வில்லை அவனால், அதனால் இரண்டு மாதமாக அரித்து அரித்து அவரை அழைத்து கொண்டான்.
இத்தனை வயதில் இத்தனை மருத்துவ போராட்டமா , போதும் அம்மணி என்று இறைவனே இந்த இரும்பு பெண்மணியை இழுத்து கொண்டது போலும்.
மண்ணுலகம் உங்கள் முன் மண்டி இட்டு விட்டது. உங்களுக்காக விண்ணுலகம் மிச்சம் இருக்கிறது தாயே. ஆக இந்த வேதனைகள் போதும், செய்த சாதனைகள் போதும்.
சென்று வாருங்கள் தாயே.
Like
Comment

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...