மோடி ஆதரவாளர்களின் கவனத்திற்கு, நானும் மோடியின் ஆதரவாளன் தான். ஆனால் மோடியை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேச விரோதிகள் என்று சொல்வதும் , மோடியின் எதிர்ப்பவர்கள் எல்லாம் என் நட்பில் இருந்து விலகுங்கள் என்று சொல்வதும் சரியான செயல் அல்ல. மாற்று கருத்தே இல்லாமல் ஒத்த கருத்து உள்ள நபருடன் பேசுவதும் , விவாதம் செய்வதும் , நம்மிடம் நாமே பேசி கொள்வது போல்.
மோடி பற்றி அல்ல யாரையும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் நபர்களை நம் முக புத்தகத்தில் இருந்து விலக்குவது சரி, நான் கூட பல பேரை விலக்கி இருக்கின்றேன் , அவர்களை முக புத்தகத்தில் தொடர்வதை நிறுத்தி இருக்கின்றேன் , குறிப்பாக பல ஹிந்து மத போராளிகளை கூட.
மோடியை எதிர்ப்பது வேறு , அவர் திட்டங்களை எதிர்ப்பது வேறு. இந்திய அரசாங்கத்தை எதிர்க்கின்றேன் என்று சொல்வது தவறு இல்லை , ஆனால் இந்தியாவை எதிர்க்கின்றேன் , இந்திய இராணவத்தை எதிர்க்கின்றேன் என்று சொல்வது தான் தேச விரோதம்.
அது என் உரிமை என்று சொன்னால் , சுட்டு கொல்ல வேண்டும், ஆனால் நமக்கு அத்தகைய அதிகாரம் இல்லை என்பதால் , அவர்கள் யார் என்று மக்களுக்கு சுட்டி காட்ட வேண்டும். தாய் தேசத்தின் அழிவை விரும்பவன், தலை கொய்யப்பட வேண்டும்
கள்ள பணம் விவாதத்தில் பல மாற்று கருத்துகள் இருக்கலாம். முரண்பட்ட கருத்துகளில் சில முத்துகளும் இருக்கலாம். அதை அரசாங்கத்தின் அறிவுக்கு எடுத்து செல்ல வேண்டும். PMOindia வின் கவனத்திற்கு நாம் எடுத்து செல்ல வேண்டும்.
மோடியின் உறவினர்கள் பொருளாதார நிலையும், சாதாராண ஒரு அரசியல்வாதியின் பொருளாதார நிலையும் ஒப்பிட்டு பார்த்தாலே , பல பேருக்கு மோடியின் உண்மை புரியும்.
இந்திய தேசத்தில் அதிகம் விமர்சிக்கபட்டவர் மோடி. எந்த விமர்சனமும் அவரை வீழ்த்தியது இல்லை. கவனியுங்கள் அவரை விமர்சிப்பவர்களை பற்றி, அவர்கள் எப்போதும் விமர்சித்து தான் வந்து உள்ளார்கள். ஜெய் ஹிந்த் என்ற வார்த்தையை விளையாட்டாக பேசுகிறார்கள். உலகத்தின் எல்லா விசயத்தை பற்றியும் ஒரு பதிவை போடுபவர்கள் மறந்தும் இந்திய ராணவ வீர்களுக்கு என்று ஒரு பதிவு கூட அவர்களிடம் இருந்து வராது.
அவர்களுக்கு வலிக்கிறது என்று அவர்களால்வெளியில் சொல்ல முடியும், மக்கள் துன்ப படுகிறார்கள் என்று பேச முடியும், ஆனால் நம்மை எல்லாம் காக்கும் நம் பாரத்தின் பாதுகாப்பு படைகள் செய்யும் உயிர் தியாகம் பற்றி வரும் போது மட்டும் அவர்கள் உதடுகள் ஊமையாகி விடும். உள்ளத்தில் அழுகிறார்கள் போலும்.
எந்த ராணவ வீரரின் குடும்பமும் வெளியில் வந்து கள்ள பணம் ஒழிப்பு நடவடிக்கையால் நாங்கள் துன்பம் அடைந்தோம் என்று சொல்லி கொண்டு இருக்க வில்லை. உயிர் போன துன்பத்தை விட இத்தகைய தற்காலிக சிரமம் ஒன்றும் பெரிதாக இல்லை.
இவர்கள் பெரும்பாலும் தேசம் என்ற கோட்பாட்டின் மீது நம்பிக்கை அற்றவர்கள். வேறு வழி இல்லாமல் இங்கே இந்தியர்களாக நம் இடையே வாழ்கிறார்கள். மாற்று திட்டம் எதுவும் அவர்களிடம் எதுவும் இருக்காது. எது வந்தாலும் எதிர்த்து கொண்டு தான் இருப்பார்கள். சில பேர் சிறிய கருப்பு பண முதலைகள், ஏழைகளின் கண்ணிற் என்று சொல்வது அவர்களின் கண்ணிற்.
நூறு குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நிரபிராதி தண்டிக்க பட கூடாது , என்று சொல்லி சொல்லி , லட்சம் குற்றவாளிகளை நம் தேசம் வளர்தததின் வினை தான் , இப்போது கள்ளி செடியாக வளர்ந்து நிற்கிறது
No comments:
Post a Comment