இன்று ஈழ தேசிய மாவீரர் நாள். அயல் நாட்டில் இருந்து தங்கை ஒருவர் இந்த லிங்கை கொடுத்தார். அண்ணா இங்கே ஒரு பிள்ளை பாடியது, இணையத்தில் தேடி பார்த்து முழு பாடலையும் கேட்ட பிறகு ,உணவே இறங்க வில்லை என்றார். நானும் கேட்டேன் , ஒரு அழகிய கவிதையை இதயத்தில் கத்தி கொண்டு எழுதியது போல் இருந்தது. என்னை அறியாமல் விழியோரம் விழி நீர்.
புலிகளை பற்றி மாறுபட்ட கருத்து எனக்கு இருந்தாலும், அவர்களை ஆதரிக்க மனம் முழுதாக ஒப்பா விட்டாலும் , ஈழத்தில் அந்த பிள்ளைகள் காட்டிய தீரத்தையும், தியாகத்தையும் இங்கே எவரும் மறுக்க முடியாது. அங்கே தமிழ் பெண் பிள்ளைகள் பட்ட பாடுகள் இன்னோர் குருசேத்திரதிற்கு இட்டு செல்ல கூடியது. மாவீர்களின் கல்லறைகளை கூட விட்டு வைக்க வில்லை சிங்கள பேரின அரசு.
ஒரு தமிழனாய் உள்ளே பட்ட காயம் இன்னும் ஆற வில்லை.
“எங்கள் துயிலும் இல்ல கோவிலை இடித்த பகையை வெல்ல நீங்கள் வர வில்லையா”
தமிழ் நண்பர்கள் ஒரு முறையாவது கேளுங்கள்.
No comments:
Post a Comment