Saturday, October 8, 2016

"பாகிஸ்தான் உள்ளே புகுந்து அடித்தது இந்தியா"

மிக்க மகிழ்ச்சி. இந்திய ராணுவத்திற்கும் & மோடிக்கும் வாழ்த்துக்கள்/ நன்றி. உள்ளுக்குள் தன்னை இந்தியன் என பெருமை கொள்ளும் எந்தவொரு குடி மகனுக்கும் இது உவகை அளிக்கும் செயல். உலகத்தின் நான்காவது வலிமையான ராணுவம் , இந்திய இராணவம் என்ற பட்டியலில் இடம் பெற்று இருந்தாலும், அத்தகைய பலத்தை காட்டினமோ என்ற கேள்வி எல்லார் மனதையும் அரித்து கொண்டு இருந்தது. வீரர்கள் பலி என்ற வார்த்தைகளை படித்து படித்து விரக்தியின் விளிம்பில் நாம் இருந்தோம். நம் வீரர்களின் விதியை பக்கத்து தேசம் எழுதி கொண்டு இருக்கிறது என்று பதறியவர்கள் பலர். பிள்ளையை பற்றிய கவலை போல் தேசத்தை பற்றிய கவலையும் எல்லோர் மனதினுளும் கவ்வியது. 

பாகிஸ்தானை பழிவாங்கும் எண்ணம் சாதாரண குடி மகன்களிடம் கூட பரவி கிடந்தது என்பது உண்மை.பழி வாங்கும் எண்ணம் பகையை கூட்டும் என்ற சாஸ்திரங்கள் சொல்லி கொடுத்தாலும் , அதே சாஸ்திரங்கள் யுத்த நியதி எது என்பதையும் சொல்லி கொடுத்தது. நியதி என்பதே அறியாத அந்த வெறியர்களிடம் பேசுவதே நிந்தனைக்குரியது என்பது நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு புரிந்து போனது.

"உள்ளே புகுந்து அடித்தது இந்தியா" என்ற வரிகள் கண்டு உதட்டில் ஒரு சிறு புன்னகை எல்லோரிடமும் விளம்பியது. யானையின் பலம் அதன் பாகனிடத்தில் என்பது பழமொழி. அது மெய்யானது இன்று. பாகானாக மோடி நிற்க , யானையாக பிளறி இருக்கிறது ராணுவம். பகை தேசம் பயந்து இருக்கிறது.

வேறு தேசங்களின் அழுத்தத்தை நான் ஏற்று கொள்கின்றேன், நீ போய் அழித்து விட்டு வா என்று மோடி அனுப்பி இருக்கிறார். கைகள் கட்டுண்ட நேரத்திலே களமாடிய பாரத படைகள், இன்று கட்டவிழ்த்து விட பட்டு இருக்கிறது என்றால் களத்தின் கதைகள் பற்றி சொல்லி தெரியவில்லை.
காயம் பட்ட அந்த தேசத்தின் களவானிகளின் கதறல் இந்திய தேசத்தினுள் மெல்லிசையாக பரவுகிறது.

!!வாழ்க தாய் தேசம், வாழ்க பாரத படைகள்!!

http://www.dinamalar.com/news_detail.asp?id=1617361

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...