Saturday, October 8, 2016

மோடி தமிழக மக்களை ஏமாற்ற வில்லை, தமிழகம் தான் மோடியை தொடர்ந்து ஏமாற்றி கொண்டு இருக்கிறது

தொட்டதிற்கு எல்லாம் மோடியை இழுத்து கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம். தமிழகம் மோடியை நம்ப மறுத்தது போன பாராளுமன்ற தேர்தலில். இருந்தும் காவிரி விஷயத்தில் கர்நாடக அரசுக்கு என்று பேசாமல், தலையிட மறுத்து , உச்ச நீதி மன்றம் சொல்வதை கேளுங்கள் என்ற சொன்னார். என்னை பொறுத்தவரை காவிரி மேலாண்மை அமைப்பது தமிழகத்திற்கு பாதகமானது. அதற்கு என்ன மேல் அதிகாரம் இருக்க போகிறது. அது தண்ணிர் குடு என்று சொன்னால் கர்நாடகம் கொடுத்து விடுமோ? கர்நாடகம் அதில் இருந்து வெளியேறும் , மத்திய அரசு ஒரு தலை பட்சமாக செயல் படு கொண்டு இருக்கிறது என்று குற்றம் சொல்லும். மத்திய அரசு என்ன இராணுவத்தை ஏவி அடக்க முடியமா ? சாத்தியம் அன்று.

ஒரு மாநிலத்தின் பிரதமர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மதிப்பேன் என்று சத்திய பிரமாணம் எடுத்து இருக்கிறார். மத்திய அரசு வைக்கும் குழுவை மதிக்க வில்லை என்றால், அது நெறி முறைகளுக்கு எதிரானது இல்லை என்று சொல்லி தப்பித்து விடும். ஆனால் உச்ச நீதிமன்றம் சொல்லும் உத்தரவை செயல் படுத்து முடியாது என்று அதனால் திரும்ப திரும்ப சொல்லி கொண்டு இருக்க முடியாது. அதனால் தான் தண்ணிர் திறந்து விடுகிறது.

சோனியாவில் இருந்து ராகுல்காந்தி வரை இந்த விஷயத்தில் மௌனம் சாதிக்கின்றனர். கண்டிப்பாக இதில் அரசியல் இருக்கிறது , மோடியும் அதில் விதி விலக்கல்ல. ஆனால் மோடி எந்த மாநிலத்துக்கும் பாதகம் வர கூடாது என்று விலகி இருக்கிறார். உச்ச நீதிமன்றம் தரும் அழுத்தம்தான் நன்மை பயக்கும் என்று உணர்ந்து இருக்கிறார்.

தமிழக அரசு கூட மத்திய அரசை நாட வில்லை. உச்ச நீதிமன்றதைத்தான் தான் நாடியது. இது உணர்வுபூர்வமான விசயம் என்பதால் எந்த மதிய அரசும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்பட முடியாது, கால விரயம் தான் நடக்கும். நீதிமன்றம் சென்றால் தான் கொஞ்சமாவது நீர் கிடைக்கும் என்று புரிந்து கொண்டது.

37 தமிழக எம்பிக்கள் அனுப்பிய தமிழக மக்கள், அந்த எம்பிக்களை பார்த்து கேட்க வேண்டியதை, பிஜேபி யை பார்த்து கேட்டு கொண்டு இருக்கின்றனர்.
தமிழக காங்கிரஸ், தமிழக பிஜேபியும் தமிழக மக்களின் குரலுக்கு பேசுகிறது
கர்நாடகா காங்கிரஸ், கர்நாடகா பிஜேபியும் கர்நாடகா மக்களின் குரலுக்கு பேசுகிறது. இயல்பான அரசியல் இது.

ஆனால் கவனிக்க வேண்டிய அரசியல் , கர்நாடக ஆளும் காங்கிரஸ் உச்ச நீதிமன்றம் உத்தரவை மதித்து இருந்தால் , இன்று இத்தகைய பிரச்சினை தேவை இல்லை. ஆனால் கர்நாடக ஆளும் காங்கிரஸசை குறை கூறாமல் , கர்நாடகா பிஜேபியை தான் அதிகம் குறை கூறினோம் நாம்.
தமிழகத்தின் காவிரி பிரச்சினையை மோடிக்கு எதிரான அஸ்திரமாக மாற்ற பல பேர் முயற்சித்து கொண்டு இருக்கின்றனர் , அதில் இருந்து அவர் விலகி இருக்கிறார்

மோடி தமிழக மக்களை எமாற்ற வில்லை, தமிழகம் தான் மோடியை தொடர்ந்து எமாற்றி கொண்டு இருக்கிறது

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...