என்னால் முடிந்த வரை ராமரை பற்றிய தமிழ் விக்கிபீடியாவை மாற்றி அமைத்து
இருக்கின்றேன். அவதூறு சொல்லும் பிரிவை நீக்கி இருக்கிறேன். ராமாயண
வரலாற்றில் பல நற் கருத்துக்கள் சொல்லப்பட்டன அதை பற்றி மேற் கொள் காட்டாமல
பல நூறு கோடி பேர் நம்பும் ராமரை பற்றி மட்டமான தொகுப்புகள் ஏற்றப்பட்டன.
திராவிட கட்சிகளை பற்றி ராமர் வீக்கி பீடியாவில் ஏன் பேச வேண்டும்.
திட்டமிட்டு அசிங்க படுத்த முயற்சி செய்து இருக்கிறார்கள். எல்லா மாற்று மத
தெய்வங்களின் வரலாற்றிலும், புனித நூல்களிலும் முரண்பாடுகள் உள்ள கருத்துக்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன , ஆனால் அந்த தெய்வங்களின் விக்கிபீடியாக்களில் அது தொகுக்க பட வில்லை. ஏன்?
ராமன் இந்த தேசத்தின் பொக்கிஷம். சரித்தர நாயகன். இந்திய வரலாற்றில் இப்படி பட்ட மனிதன் இந்த தேசத்தில் வாழ்ந்து இருக்கின்றான் என்பதே இன்று வரை எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. இது சாத்தியம் சாத்தியமா என்று வினா என்னுள் தொடர்ந்து விரட்ட படுகிறது .சத்தியத்தை பற்றி படிக்கும்போது உள்ளே ஒரு சங்கடம் பரவி மெல்ல வெளியேறுகிறது. அது வேறு ஒன்றும் இல்லை அவ்வப்போது என் மனதினுள் வந்து குடி புகும் சாத்தான், சந்தடி செய்யாமல் வெளியேறி இருக்கிறது.
சத்தியத்தை நேருக்கு நேர் சந்திக்க இங்கே எவருக்கும் துணிவு இருந்ததாக சரித்தரம் இல்லை. ராம சரிதம் படிக்கும் எந்த நெஞ்சிற்கும் இது நேரும். அவன் சத்திய புருசன் என்பது மனதினுள் சங்கல்பமாகும். ராம நாமம் நம்மை நம்மிடம் இருந்து ரட்சிக்கும்.
நற் சிந்தனைகளின் நிஜ உருவம் ராமன். பக்தியின் பரிதவிப்பில் பக்தன் எதை கொடுத்தாலும் தெய்வம் ஏற்கும். ராமன் கள் குடித்தானா , மாமிசம் சாப்பிட்டனா என்பதை பற்றி எள்ளவும் எனக்கு அக்கறை இல்லை. அவன் என்ன உபதேசம் செய்தான் என்பதில் தான் ஆர்வம் கொள்ள வேண்டும். மனதாலும் மாற்று மங்கையரை தொட மறுத்தவன் அவன். தந்தை சொல் மிக்க வார்த்தை தரணியில் இல்லை என்று வாழ்ந்த தலைவன்.
இயற்கையை இயக்கும் இறைவனே என்றாலும் , மனித உடல் எடுத்து வந்தால் , உடலுக்கு உண்டான உறவுகளின் வார்த்தைகளுக்கு உட்பட்டு வளைந்து , அலைந்து திரிந்து வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்று ராமன் கற்பித்தான் நமக்கு . ஆனால் மனித மனதில் உறையோடி போய் இருக்கும் இச்சைகளுக்கு ராமன் ஆட்பட மறுத்தான்.
கண் மூடினால் கன்னியர்களை பற்றி கனவில் கழியும் கள்வர்களுக்கு ராமன் பற்றிய பிம்பங்கள் கலவரமாக இருந்து இருக்கிறது. அவர்களால் ராமனாக மாற முடியாது, அதனால் ராமனும் அவர்களை போன்றவர் தான் என்ற கருத்தை உருவாக்க முயன்று இருக்கிறார்கள்.
அதாவது தெய்வத்தை பற்றி, மேல் எழும்ப தெரியவில்லை , தெய்வத்தை தன் நிலைக்கு கீழ் இழுக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். தன் இச்சைகளை அறுக்க தெரியாமல் எச்சையாக திரியும் மனிதர்களுக்கு ராமன் சரிதம் அச்சமாக இருந்து இருக்கிறது என்பதின் வெளிப்பாடு தான் விக்கிபீடியாவில் அவர்கள் செய்து வைத்து இருந்த மாற்றங்கள்
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

No comments:
Post a Comment