Thursday, February 18, 2016

தேசிய கொடி பற்றிய விவாதம்...

மிக சிறப்பான விவாதம் மட்டும் அல்ல , சரியான நேரத்தில் வந்த விவாதம். கடைசியில் தேசத்திற்காக உயிர் கொடுக்க துறந்த ராணுவ வீரர்களை அழ வைத்து நம் மனதை ரணமாக்கியது
இந்தியா எப்போதும் தனது ஆன்மாவை பற்றிய நம்பிக்கையை வெளிபடுத்தி வந்து இருக்கிறது. பங்களாதேஷ்ல் அது அந்த மக்களை பாதுகாக்க தன் வீரர்களை பயணிக்க வைத்தது.
ஈழ மக்களுக்கு துணை நின்றது. சுற்றுலா என்பதையே மொத்த மாநிலத்தின் வருவாயாக வைத்து இருந்த காஸ்மீர், அதன் வருவாயை இழந்த போது, தேசத்தின் மற்ற மக்களின் வரி பணத்தில் இருந்து அந்த மாநிலத்தை தாங்கி பிடித்தது.
தேசம் சரியாக இருந்து இருக்கிறது. அதன் தலைவர்கள் மாறும்போது, தேசத்தின் ஆன்மா அடக்கப்பட்டு வந்து இருக்கிறது இதில் இந்தியா என்ற தேசம் செய்த குற்றம் என்ன.
மக்கள் செய்த குற்றம், தமிழகத்தில் தேசிய கட்சிகள் வலுவாக இருந்த போது, தமிழகத்திற்கு என்ற குரல் ஒலித்தது. திராவிட கட்சிகள் தங்கள் குடும்ப சுய நலத்திற்காக பதவிகளை பெற்ற பின் எல்லாம் மாறிப் போனது.
தேசிய கொடி ஏற்றுவது சிறுபான்மை மக்களை பாதிக்கும், என்று விவாதத்தில் பங்கு பெற்ற ஒரு அடிமை பேசியது. சத்தியமாக எப்படி என்று புரியவில்லை. இது அந்த சிறுபான்மை மக்களை இழிவுபடுத்தும் பேச்சு.
என் தேசத்தின் கொடியை விட என் மதத்தின் கொடிதான் பெரியது என்ற யாராவது யோசித்தால் , எந்த தேசத்தில் அந்த மத கொடி உயர பறக்கிறதோ அந்த தேசம் நோக்கி போகட்டும் , அவர்களுக்கு இங்கே இடம் இல்லை.
தாய் தேசத்தை, தங்கள் கடவுளை விட உயர்ந்தது இல்லை என்று சொல்லி தேசிய கீதத்திற்கு கூட மரியாதையை தர மறுத்தவர்களை இந்த தேசம் பார்த்தது
ஆ ர் ஸ் ஸ் அஜெண்டா என்று விவாதம் வேறு. இருந்து விட்டு போகட்டும் ஆ ர் ஸ் ஸ் என்ன காவி கொடிய ஏற்ற சொன்னார்கள்.
தேசியக்கொடியை தான் ஏற்ற சொன்னார்கள் அதில் என்ன தவறு இருக்கிறது.
நான் இந்தியாவை நேசிக்கின்றேன் ஆனால் என் நண்பன் இந்திய அழிய வேண்டும் , அதை உடைக்க வேண்டும் என்று சொன்னால் ,நான் ஏன் வருந்த வேண்டும் , அவன் கருத்து சுதந்திரத்தில் ஏன் தலையிட வேண்டும் என்று விவாதம் செய்கிறார்கள். அதாவது நான் என் குடும்பத்தை நேசிக்கின்றேன், ஆனால் என்னை சேர்ந்தவன் என் குடும்பத்தை அழிக்க வேண்டும், உடைக்க வேண்டும் என்று சொன்னால் , இவர்கள் இதே மாதிரி பதிலை தான் சொல்வார்களா.
உள்ளுக்குள் தேசத்தின் மீது வெறுப்பை வைத்து கொண்டு, உதட்டளவில் தேசத்தை நேசிகின்றேன் என்று மீடியாவில் பேசுகிறார்கள்.
கவலை தரும் விஷயம், இந்த நபர்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள், கல்லூரிகளில், பள்ளிகளில், நிர்வாகத்தில, உள்ளனர்.
தேசத்தில் ஒரு சிலர் செய்யும் செயலை வைத்து ஒட்டு மொத்த தேசத்தை வெறுக்க வேண்டும் என்று சொன்னால், அதே அளவுகோலை அரசியல் கட்சிகளுக்கும் , மதத்திற்கும் வைத்து பார்த்தால், கட்சி தலைவர் என்றும் , உயர்ந்த மதம் என்ற சொல்ல எதுவும் மிஞ்ச போவதில்லை.
எனக்கும், பல பேருக்கும் சில விஷயங்களில் வருத்தம் இருக்கிறது. இந்த தேசம் சில விசயங்களை இன்னும் சரியாக செய்து இருக்கலாம் என்று. ஆனால் ஒருபோதும் தேசம் அழிய வேண்டும் என்ற எண்ணத்தை கனவிலும் நினைக்க வில்லை.
ஏன் எனில் நான் வாழும். என்னை வாழ வைக்கும் தேசம் எல்லா கடவுளை விட , தாய் தந்தையரை விட உயர்வானது, நமக்கு உயிரை போன்றது.

அதனால் தான், தங்களது விலை மதிப்பில்லா உயிரை தந்து , ஒவ்வாரு முறையும் நமது பாதுகாப்பு படைகள் நமக்கு பாடம் சொல்லி தருகின்றன போலும்...............


On THE NEWSHOUR, TIMES NOW's Editor-in-Chief Arnab Goswami and panelists -- Dr Sambit Patra,…
youtube.com
LikeComment

Sunday, February 7, 2016

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் Belief

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் Belief என்ற நிகழ்ச்சி, உலகத்தில் வாழ்ந்த பெருமை மிகு கலாச்சாரங்களையும் அதை கட்டமைத்த மதங்களையும் சொல்லி வருகிறது.மறைந்து கொண்டு இருக்கும் அதன் மிச்சங்களை காட்டுகிறது. அந்த நிகழ்ச்சியின் ஊடாக மறை முகமாக ஒரு விஷயம் புரிகிறது. பல மதங்களையும் அதன் கலாச்சாரத்தையும் அழித்தது , உலகின் இரு பெரும் அன்பு மதங்கள் தான்.

அடுத்தவர்களின் நல்ல நம்பிக்கையை தகர்த்த, தகர்த்து கொண்டு இருக்கும் இந்த மதங்கள் எப்படி இன்று வரை தங்களை அன்பு மதங்கள் என்று அழைத்து கொள்கின்றன என்பது வியப்பாக இருக்கிறது. 

இவர்களின் அன்பு , விஷ அம்பாக பாய்ந்து இருக்கிறது போலும்.

PREMIERES 13 DECEMBER 2016 | SUNDAYS 9PM | 8PM BKK/JKT/MNL 10 months into their relationaship, Ian and Larissa are put to the ulitmate test. A sudden twist o...

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...