ஒரு தங்கையின் பதிவில் " பெண்களுக்கு கல்யாணம் ஆகி விட்டதா
"என்று என் பெற்றோரை கேள்வி கேட்டு மறை முகமாக என்னை அடிமை படுத்த
நினைப்பது ஆகவும், தான் தன் பெற்றொருருடன் இன்னும் சிறிது நாள் வாழ்ந்தால்
இவர்களுக்கு என்ன கவலை என்று பொங்கி இருந்தார். அப்படிப்பட்ட கேள்விகள்
உள்நோக்கத்துடன் இருந்தால் கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது. ஆனால் அது பொதுவான
கேள்வியாக கருதினால் , அதன் பின் ஒரு உண்மை உள்ளது.
பெரும்பாலும் மகள் பிள்ளை பெறும் போது, அனிச்சை செயலாக மகளையும் , அவள் பிள்ளையையும் பராமரிக்கும் பொறுப்பு அவளின் தாயிடம் வருகிறது. உலகின் எல்லா தேசங்களிலும் இது தான் இயல்பாக நிகழ்கிறது. உயிரியல் தத்துவத்தின் உலக பொது மறை தாய். எல்லா மனித பண்புகளும் மக்கி கொண்டு இருக்கும் வேளையில், இன்றும் தினம் தினம் எல்லா உயிர்களிடத்திலும் மலர்ந்து கொண்டு இருக்கும் அன்பானது தாயின் அன்பு.
மகள் 25 வயதில் பிள்ளை பெறும் போது , அவளின் தாயுக்கு சராசரியாக 50 வயதில் இருந்து 55 வயது வரை இருக்கும். அவர்கள் உடம்பிலும் மனதிலும் தெம்பு இருக்கும். மகளையும் பார்த்து அவள் பிள்ளையையும் பார்க்க அவர்களுக்கு வலு இருக்கிறது. மகள் 30 வயதில் அடுத்த பிள்ளைக்கு தாயாகும் போது, அவளின் தாய் முதுமையை அடைந்து விடுகிறார். இருந்தாலும் சமாளித்து விடுகிறார்.
தயவு செய்து கணவனின் பங்கும் , அவரின் பெற்றோர் பங்கும் என்ன என்று சம உரிமை பேசி கலவரம் செய்யாதீர்கள். எல்லா பெண்களும் தன் தாயை தான் விரும்புவார்கள் பிரசவ காலத்திலும், பிள்ளையை சீராட்ட வேண்டிய காலத்திலும்.
ஆனால் இன்று பெண்கள் தங்கள் கல்யாண வயதை கிட்டத்தட்ட 28 வயது என்று கொண்டு போய் விட்டார்கள். கல்யாணம் ஆன பிறகு , ஒரு வருடம் ஜாலியாக இருக்க வேண்டும் என்ற கணவனின் நிர்பந்தத்தால் , கிட்டத்தட்ட முதல் குழந்தை பிறக்கும்போது 28 அல்லது 30
வயதை அடைகிறார்கள். அந்த பெண்ணின் தாயுக்கு பெரும் சுமை ஏற்றுகிறார்கள் . இரண்டாவது குழந்தையை முப்பது வயதிற்கு மேல் பெறுகிறார்கள். பல பெண்களின் தாய்கள் அதற்குள் தளர்ந்து போய் விடுகிறார்கள்.
முதுமையின் தளர்ச்சியில் அவர்கள் தடுமாறுகிறார்கள். குடும்பங்கள் குழப்பத்தை பெறுகின்றன.
பெண்கள் ஒன்றை மறந்து போனார்கள், உங்கள் தாயின் உடல் நலத்தை பற்றிய கவலையை நீங்கள் மட்டுமே முழுதாக உணர முடியும். என்ன தான் சட்டம் போது பேசினாலும் உங்கள் கணவர் உங்கள் தாயின் தளர்ச்சி பற்றி பரிதாபம் மட்டும் கொள்வார். கவலை கொள்ள மாட்டார்.
அது மட்டும் அல்ல , நம் போன தலைமுறை தாய்மார்கள் நம்மை சுக பிரசவம் செய்தவர்கள். அவர்கள் உடல் வலுவானதாக இருக்கும் முதுமை அடைந்தாலும். ஆனால் அறுவை சிகிச்சை என்பதே இந்த தலைமுறை பெண்களின் தலை எழுத்து ஆகி போனது. நாம் அவர்கள் வயதில் அந்த உடல் திடத்துடன் இருப்பது சாத்தியமாக பட வில்லை.
ஆண் 50 வயதிலும் தந்தையாக முடியும், அது இயற்கையின் உண்மை. பெண்ணாலும் முடியும், ஆனால் முப்பது வயது தாண்டி பிள்ளை பெரும் பெண்கள் உடல் அளவில் பெரும் சிரமத்தை பெறுகிறார்கள் என்பதும் உண்மை. கணவன் அருகில் அன்போடு இருந்தாலும் , ரணம் என்னவோ பெண்களுக்கு தான்.
உங்கள் தாய் உங்களுக்கு செய்த அதே உதவிகளை நீங்களும் உங்கள் பெண் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டும் என்றால், பிள்ளை பெறுதலை தள்ளி போடாதீர்கள். இதன் பொருள் சிறு வயது திருமணத்தை ஊக்கபடுத்தல் ஆகாது. குறைந்த பட்சம் 24 வயதில் திருமணம் ஆகி 25 வயதில் முதல் குழந்தை பெறுங்கள். அது உங்கள் குழந்தை மற்றும் உங்களின் எதிர் காலத்திற்கும் , உங்கள் தாயின் ஆரோக்கியமான வாழ்விற்கும் நல்லது.
இது தான் யதார்த்தமான உண்மை என்பதை என் உறவுகள் , நண்பர்கள் மற்றும் தனிப்பட வகையிலும் அறிந்து கொண்டேன் அதனால் பகிர்ந்து கொண்டேன். மற்ற படி இது ஆணாதிக்க சிந்தனை கொண்டு எழுதப்பட பதிவு அல்ல.

No comments:
Post a Comment