http://tamil.oneindia.com/news/tamilnadu/a-20year-old-girl-committed-suicide-on-monday-near-salem-256962.html
ஃபேஸ்புக்கில் ஆபாசமாக போட்டோவை ஏற்றிய விஷமிகள்... அவமானத்தில் இளம்பெண் தற்கொலை- வீடியோ"
என்ன விதமான வேதனை இது என்று புரிய வில்லை.
ஒரு பெண்ணிற்கு உன்னை பிடிக்க வில்லை என்றால் அவளை விட்டு விலகி தொலைக்க வேண்டியது தான் நல்ல ஆணிற்கு அழகு. துரத்தி துரத்தி காதலித்தால் காதல் வருவதற்கு இது சினிமா இல்லை.
அழகான பெண்ணை பார்த்துவிட்டால் அது எப்படித்தான் தெய்வீக காதல் வந்து விடுகிறதோ அது ஆண்டவனிற்கு தான் வெளிச்சம். காதல் தவறு இல்லை, ஆனால் அது இருபக்கமும் நிகழ்ந்தால் காதல், இல்லை அது கசப்பாக தான் இருக்கும்
எனது கல்லூரி
நாட்களிலும் அப்படிதான் நிகழ்ந்தது, ஆனால் முதல் நாள் முதலில் பார்த்த
அழகான பெண் மேல் இருந்து ஈர்ப்பு அடுத்த அழகான பெண்ணை மாறியவுடன் இடம்
மாறியது. இது எதுவுமே காதல் இல்லை இது வயது கோளாறு என்று எனக்கு புரிய
இரண்டு வருடம் எடுத்தது. வீடியோ கேம் மீது இருந்து மோகமும் , போரூர் ஈசன்
கோவிலும் பெண்கள் மீது இருந்த கவனத்தை வெகுவாக குறைத்தது.
வயது ஏறும் போது, முதலில் புரிந்த விஷயம் " பெண்ணை விட்டு விலகி நிற்க வேண்டும்" . தங்கை என்று அழைத்து தள்ளி போய் விட வேண்டும். அது தான் நல்லது.
அந்த பெண் அவள் அப்பாவை நினைத்து பயப்படுகிறது , அண்ணனை நினைத்து பயப்படுகிறது என்று எந்த நண்பரக்கும் தயவுசெய்து அறிவுரை சொல்லாதீர்கள். பல பெண்ணடிமை தனத்தில் இருந்து விடுபட்டு படிக்க வந்த முதல் தலைமுறையாக அந்த பெண் இருக்கலாம்.
நீங்கள் அவள் பின் தொடர்கிறீர்கள் என்று அறிந்தால் , அந்த பெண்ணின் பெற்றோர் உங்களை கண்டிப்பதை விட்டு விட்டு அந்த பெண்ணின் படிப்பை பாதியில் நிறுத்தி விடுவார்கள் . இது பல இடங்களில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.
ஏமாற்றும் பெண்கள் இருக்க தான் செய்கிறார்கள். மறுப்பதற்கு இல்லை. அவர்களை தண்டிப்பது நம் வேலை இல்லை.
ஒரு பெண்ணை காதலித்தல் என்பது , அவள் கரம் பிடித்து அவளை நன்றாக வாழ வைக்க. திருமணத்திற்கு முன் உன் காதலை விட்டு நகர்ந்தால் , அவளை நிறுத்தி பிடித்தல் நியாயம் அன்று. வேறு திசை நோக்கி அவள் பயணித்தால் , அவள் போகும் திசை அவளுக்கு நல்லதாக அமையட்டும் என வாழ்த்துதல் தான் , உண்மையான காதல்.
இது கோழைத்தனம் உள்ள செயல், இந்த பெண்ணின் முன் நின்று பேச பயந்து , இந்த பெண்ணை மறைந்து நின்று வீழ்த்தி இருக்கிறார்கள் . இதன் பின் கதை தெரிய வில்லை. ஆனால் எதுவானாலும் இது அற்பமான செயல்.
மகாபாரதமும் , ராமாயணமும் சொல்லிய வரலாறு, நல்ல பெண்களின் கண்ணிற் ஒரு தேசத்தையும், ஒரு வம்சத்தையும் அழிக்கும் என்பது.
அது தனி மனிதர்களுக்கும் பொருந்தும் என்று ஏன் சில முட்டாள் ஆண்களுக்கு புரியவில்லை.
http://tamil.oneindia.com/…/a-20year-old-girl-committed-sui…

No comments:
Post a Comment