எல்லாருக்கும் நிகழ்வதை போல் எனக்கும் ஈசனை பற்றி அறிதல் நிகழ்ந்தது ஒரு சிவாராத்திரி அன்று தான். அன்று புரிந்த விஷயம் என்னுள் பிடிபட பல வருடம் ஆனது வேறு கதை. கோவையில் உள்ள பேரூர் பட்டிஸ்வரர் கோவிலை அறிந்தது தான் , கல்லூரி காலத்தில் நான் செய்த ஒரே நல்ல விஷயம். உக்கடத்தில் இருந்து கோவைப்புதூருக்கு ஒரு குறுக்கு வழியில் போலாம் என்று சொன்னதால், குறுக்கு வழி என்று அன்று தேடி போனது, என் வாழ்க்கையின் மிக பெரிய வழியை உணர வைத்த பேரூர் கோவிலுக்கு கூட்டி கொண்டு போனது.
கூட்டம் கலைந்த மத்திய நேரம் என்பது தான் என் நினைவு. வெயிலுக்கு சிறிது நேரம் இளைப்பாறலாம் என்ற எண்ணம், ஆயிரம் வருடத்திற்கு முற்பட்ட கோவில் என்பதால் அறியும் ஆவல். ஆனால் என் அறிவுக்கு அறியவே முடியாத ஒருவனின் ஆலயம் அது என்று அப்போது என்னால் அறிய முடிய வில்லை. நாத்திக கருத்துகள் அதிகம் என் நினைவை நிறைத்து இருந்த பருவம். ஆனால் சிறு வயதில் இருந்த அம்மாவால் அதிகம் முறை திருவண்ணாமலைக்கு அழைத்து செல்லப்பட்டதால் , ஈசன் மீது ஒரு பற்று இருந்தது. அது மட்டும் அன்றி தெய்வம் என்று எனக்கு அறிமுகபடுத்த எல்லா தெய்வத்திலும் , ஈசன் மட்டும் தனியாக இருந்தான். இவன் கட்டுப்பாடு அற்றவன், எந்த நியதியும் அவனுக்கு இல்லை, உன்னை அறிந்தால் அவனை அறியலாம் என்று சொல்ல பட்டு இருந்தது. மேலும் காமத்தை கருவறுத்த கடவுள் என்று காட்டப்பட்டு இருந்தார். காமம் ்கலைத்தல் என்பதே வெறும் கனவாக தான் இருக்க முடியும் என்ற கருத்துகள் நான் கொண்டு இருந்த விடலை காலம் அது.
எப்போது கோவில் போனாலும் விநாயகரை வணங்கி விட்டு ஈசன் நோக்கி போவது வழக்கம். வெளியே சிறு கூட்டம் இருந்தது, கருவறை உள்ளே போனால், பொன்னேர் மேனியன் பொழிந்து கொண்டு இருந்தான். கல்லூரி மாணவ பருவத்தில் மங்கையின் அழகை கண்டு மயங்கி தவித்து பழகிய என் மனதிற்கு , அன்று தான் மற்றும் ஒரு அழகு ஒன்று அவனியில் உள்ளது என்றுஅறிவிக்கப்பட்டது. அழகு என்ற வார்த்தையே அதிர்ந்து போய் பார்க்கும் அளவில் , ஆதி யோகி அமர்ந்து இருந்தான். அன்று ஏன் அழுதேன் என்று இன்று வரை நினைவு இல்லை. கண் மூடி கண்கள் குளமாகி கரைந்து போனது . கண் திறந்த ஈசனை பார்த்து விட்டு திரும்பிய போது, எதிரே ஒரு அழகிய மங்கை ஒருத்தி என்னை பார்த்து கொண்டு இருந்தாள். ஈசன் அந்த நிமிடமே என்னுள் இருந்து மறைந்தான்.

ஏன் அந்த பெண் என்னை பார்த்தாள் என்றே என்பு த்தி யோசித்து நின்றது. கருவறை முன் கண்ணிற் வந்தால் . கன்னியர் நம் பால் கவரப்படுவர் என்று என் கள்ள மனம் கற்பித்தது. ஒரு சுற்று சும்மா சுற்றி விட்டு, மீண்டும் கருவறை போனேன், கண்ணிற் வரும் கன்னியர் என் பால் கவரபடுவார் என்பதற்காக. கண்ணிற் வரும் என்று நின்றால் , கண்ணிரும் வர வில்லை, கடவுளும் வர வில்லை , போன முறை பார்த்த அந்த கன்னி தான் கண்ணுக்குள் வந்தாள், கடவுள் கலைந்து போனார். கருவறைக்குள் வருபவரை வெறுமனே வேடிக்கை பார்த்து விட்டு, வெளியே வந்தேன்.
எங்கே அந்த பெண் போனாள் என்று கேள்வியுடன் கோவில் பிரகாரம் சுற்றி தேடி வந்தால் , “இந்த கோவில் உள்ளே இருப்பது எல்லாம் , நாம் அறிந்த உயிர் வடிவங்கள், ஆனால் இதற்கு எதற்கும் சம்பந்தம் இல்லாமல் உள்ளே ஒன்று இருக்கிறது, அது தான் லிங்கம்” என்று நடராஜர் சன்னிதியில் யாரோ ஒருவர் யாருக்கோ சத்தமாக சொல்லி கொண்டு இருந்தார். அந்த நிமிடம் தான் மனம் திரும்பியது என இன்று வரை நம்புகின்றேன். சொன்னவர் பற்றிய அறிய ஆவல் வர வில்லை, சொல்லபட்டதை பற்றி அறிய ஆவல் வந்தது.
இந்த முறை ஒவ்வொன்றாக நின்று பார்த்து கொண்டு போனேன், சத்தமாக கேட்டது சத்தியம் தான் என்று மீண்டும் கருவறையில் காலடி வைத்து போது புரிந்தது. எதற்கும் சம்பந்தமே இல்லாமல் கருவறையில் லிங்கம் மட்டுமே. கண் இல்லை, காது இல்லை, கால் இல்லை, கை இல்லை, வாய் இல்லை. வியப்பும் வினாவும் உள்ளே விரவி, விடையாக விழி நீர் வந்தது. அது ஒரு ஆனந்த தருணம். அறிவிற்கு அப்பாற்பட்ட ஈசனை அறிந்து கொள்ளும் முதல் அரிச்சுவடி அங்கே தான் அந்த ஆலயத்தில் தான் எனக்கு அருளப்பட்டது.

கூட்டம் மெல்ல வர ஈசனை சுமந்து கொண்டு கோவில் விட்டு வெளியே வந்தேன். என் பைக் அருகே உள்ள கடையில் அந்த பெண் அவர் தந்தையுடன் நின்று கொண்டு இருந்தார். அட இந்த பெண்ணா என்று மந்தியாகி மீண்டும் மனம் துள்ளியது. ஓர விழி பார்வை பார்த்து அவர் பரவசப்படுத்தினார். கோவில் படி தாண்டியதும் இவ்வாறு பரமனை மறந்து போதல் அடிக்கடி நிகழ்ந்தது. வெளியே போனால் ஈசன் என்னை விடுத்து வெளியேறுகின்றான் என்று அறிந்து கொண்டு, கோவில் மூடும் வரை காத்து இருந்து வெளியேறி போனது இன்னும் நினைவில் இருக்கிறது.
கல்லூரியில் செய்த சிறு பிள்ளைத்தனம் கல்லூரி முடியும் வரை நிற்கவே இல்லை. இன்று யோசித்தாலும் சிரிப்பாக இருக்கிறது.
கல்லூரியில் செய்த சிறு பிள்ளைத்தனம் கல்லூரி முடியும் வரை நிற்கவே இல்லை. இன்று யோசித்தாலும் சிரிப்பாக இருக்கிறது.
அது ஒரு கடுமையான போராட்டம், காயம் பட்டும் காயப்படுத்தியும் காலம் கடந்தது. பேசும் முன்னும், செய்த செயல் முன்னும், நின்று யோசிக்க தோன்ற வில்லை, ஆனால் ஈசன் முன் நின்ற போது யோசிக்க வைத்தது, குற்றமற குருபரன் முன் நிற்க்கும் போது , கள்ள புத்தி குறுகுறுதத்து, கூனி குறுகி வெளி ஏறியது.
என்னிடம் இருந்த கலையாத காமத்தையும் , காதலையும் ஈசன் கழுவில் ஏற்றினான்.
என்னிடம் இருந்த கலையாத காமத்தையும் , காதலையும் ஈசன் கழுவில் ஏற்றினான்.
பழுது பட்ட இயந்திரத்தை சரி செய்ய , அடிக்கடி தொழிற்கூடத்திற்கு எடுத்து செல்வதை போல, மாசுபட்ட என் மனதை மீளாக்கம் செய்ய அடிக்கடி கோவில் நோக்கி போனேன்.
அதற்கு பல வருடம் கழித்து பலன் கிடைத்தது, ஆனால் அதற்கு முதல் படியை கொடுத்தது பட்டிஸ்வரர் ஆலயமும் அந்த சிவராத்திரி நாளும் தான்.
அனைவர்க்கும் இனிய மகா சிவாராத்திரி வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment