Thursday, November 27, 2014

!!274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 4-பகுதி!!

!!274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 4-பகுதி!!
அதிகாலை எழுந்து , பயணித்து , திருவெண்ணெய் நல்லூர் அடைந்தேன். அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில், திருவெண்ணெய் நல்லூர், விழுப்புரம். ஊர் அமைதியாக இருந்தது. கோவில் அருகே இருந்த கடையில் இருந்து சிவசுப்ரபதம் தவழ்ந்து கொண்டு இருந்தது.
முதியவராக வந்த ஈசன், சுந்தரரை திருமண பந்தத்தில் இருந்து தடுத்து , தனக்கு அடிமை என்ற நிரூபிக்க, வழக்கு தொடுத்து வாதாடிய தலம்.தாருகாவனத்து முனிவர்கள் அகந்தை அழிந்து , தவம் புரிந்த தலம். அர்ச்சுனன் வழிபட்ட தலம். எவன் வேதங்களின் நாயகனோ , அவனை சுந்தரர் பித்தன் என்று முதன் முதலில் அழைத்த தலம்.
கோவில் உள்ளே நுழைந்தும், இடப்பக்கம் ஈசனுக்கும் , சுந்தரர்க்கும் , வழக்கு நடைபெற்ற மண்டபம் உள்ளது. ஈசனின் பாதங்கள் நெடும்நேரம் பதிய பெற்ற இடம். ஈசனின் திரு உருவத்தை இங்கே பதிந்து உள்ளார்கள். சுந்தரரை வாதம் செய்து அடிமையாக கொண்டவன், வழக்கின்றி ,ஒரு வார்த்தை இன்றி, நம்மை அடிமையாக கைக் கொள்ளும் விந்தையயை என்ன வென்று சொல்வது.
வெளி வந்து கோவில் உள்ளே போனால், கோவில் பிரமாண்டமாக இருக்கிறது. சுந்தரர்க்கு தன்னை அறிவித்த ஈசன், இந்த கருவறையில் தான் மறைந்தான். நற்றுணைநாதன் நம்மை நோக்கி நலமாய் என்று கேட்கின்றான். உலகின் மொத்த அழகும் இங்கே ஈசனிடம் அடைக்கலமாகி அவனுக்கு அரணாய் நிற்கிறது. ஈசனை விட்டு, மங்கையரின் அழகு கண்டு மயங்கி தவித்த காலங்கள், மனதிற்குள் ஒளிர்கின்றன.
பார்த்துக் கொண்டு இருக்கும்போதே மலர்கள் ஈசனின் தலையில் இருந்து அவர் பாதம் நோக்கி பணிகின்றன. “அல்லல் என் செய்யும், அறுவினை என் செய்யும், தொல்லை வல்வினை தொன்தான் என் செய்யும், தில்லை மாநகர் சிற்றம்பலமாக்கு” என்ற பாடல் வரிகள் நம்மை அறியாமல் நமக்குள் வருகின்றன.
கருவறை உள்ளே, முதியவர் வேடம் பூண்டு வந்த ஈசன் , அணிந்த மிதியடிகள் வைத்து உள்ளனர்.
யாருடைய பாதங்கள், நமது பாவங்களை கழுவி விடுமோ, அவரின் பாதங்களை சுமந்த பாத ரட்சைகள் நம் கண் முன்னே. தொட்டு தழுவ முடியவில்லை நம்மால், தலை மீது வைத்து கூத்தாட வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. மீண்டும் மீண்டும் அதை பார்த்து விட்டு, கோவில் சுற்றி வந்தேன். நன்றாக வைத்து இருக்கிறார்கள்.
தாயார் பச்சை பட்டு உடுத்தி, நம்மை பரவச படுத்துகின்றாள். ஈசனின், சரி பாதி, தனி உருவம் கொண்டு, தனிமையில் தன்மையாக நிற்கின்றாள். தாயை தொழுது விட்டு, வெளியேறினேன்.அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில், இடையாறு, விழுப்புரம். ஈசன் , அம்மைக்கு, சிவ ரகசியம் சொன்னதை மறைந்து இருந்து கேட்ட சுகபிரம்ம முனிவர், சாபம் பெற்று , மானிட பிறவி கண்டு, ஈசனை வழிபட்டு பாவ விமோசனம் பெற்ற தலம்.
நான் சென்ற நேரம் கோவில் நடை திறக்க வில்லை. 7.30 மணி ஆன பிறகும் நடை திறக்கும் அறிகுறி இல்லை. இத்தனைக்கும் அர்ச்சகர் வீடு மிக மிக அருகில் உள்ளது. அர்ச்சகர் வீட்டின் வெளியே மிக ஏழ்மை நிலையில் இருந்த இரண்டு பேர் காத்து கொண்டு இருந்தனர். காலை 5.30 மணி அளவில் இருந்து காத்து கொண்டு இருப்பதாக சொன்னதும் மனம் கனத்து போனது. அர்ச்சகர் வீட்டின் கதவை தட்டி திறக்க தயங்கிய காரணம் என்ன வென்று நான் தனியாக குறிப்பிட தேவை இல்லை.
நான் கதவை தட்டி , கோவில் திறக்க வேண்டினேன். இளம் வயது அர்ச்சகர் வந்தார், தந்தை வெளியே சென்று இருப்பதாகவும், இது கிராமம், இப்படி தான் இருக்கும் என்று சொன்னார். இது வரை சென்று வந்த கோவில்களில் , இந்த கோவிலில் தான் இப்படி ஒரு வாசகம் கேட்டேன். கிராமம் என்றால் இறைவனுக்கு நேரம் தவறாத பூஜை தேவை இல்லையா. கோவில் மிக சுமாராக இருக்கிறது. வருமானம் பெரிய அளவில் இல்லை.
பெரிய அலங்காரம் எதுவும் இன்றி அருளப்பன்(ஈசன்) அமர்ந்து உள்ளான். கால சக்கரத்தின் அச்சாணி எவரோ , அவரின் ஆலயத்தின் நிலை நம் முகத்தில் அறைகிறது. முக்காலம் அறிந்த ஒன்று நம் முன்னே நிற்கிறது என்பது மூளையில் உறைக்க, எக்காலம் வந்தாலும், உன்னை மறவாத மனமே வேண்டும் என் ஈசனே என்ற பீறிடல் உள்ளே எழுகிறது. மரணத்தை தழுவும்போது என் ஐயனே நீயே வந்து என்னை தழுவ வேண்டும், உன் பேர் சொல்லி தான் உயிர் உடலை துறக்க வேண்டும் என்ற வேண்டுதல் வருகிறது.
தாயை கண்டால், தவிப்பாய் வருகிறது. ஆடை மட்டும் அணிந்த அரசி இவள். கணவன் நிலை கண்டு கலங்கி நிற்கும் மனைவியாக நிற்பது போல் உள்ளது. கவலை கொண்டவள் முகத்தில் , மைந்தனக்கான கனிவை உற்று நோக்கினால் அறிய முடிகிறது. சுற்றி வந்தால், சுகம்பிரம்ம முனிவர் சுகமாய் அமர்ந்து உள்ளார். என்னால் முடிந்த உதவி அளித்துவிட்டு வெளியே வந்தேன்.
குறிப்பு: ஈசனின் பாத ரட்சைகள் அனைவரும் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் புகைப்படம் எடுத்து பதிவு செய்தேன். கோவில் நிர்வாகத்திற்கு அது தவறு என்ற பட்டால், அதை நீக்கி விடுகின்றேன்.











Wednesday, November 26, 2014

!!274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 3-பகுதி!!

 அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம். திருவக்கரை வக்கிர காளியம்மன் கோவில் என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும். சம்பந்தரால் பாடல் பெற்ற தலம். உள்ளே நுழைந்தவுடன் காளி எதிர்படுகிறாள். அச்சமுட்டும் உருவம், சிறிது நிதானித்து பார்த்தால், அனபானவாளாக தெரிகின்றாள். அவளை வணங்கி விட்டு, ஈசன் நோக்கி போனேன்.
ஈசன் மும்முகத்தில் காட்சி அளிப்பது இங்கே மட்டுமே. அலங்கார பிரியன் அரசனின் தோரணையில் அமர்ந்து இருக்கின்றான். சூரியன் கண்டு மலரும் தாமரை போல், ஈசனை பருகி, தீபங்கள் மலர்ந்து மிளிர்கின்றன. நல்ல நிலையில் உள்ள கோவில். குண்டலினி சித்தரின் ஜீவ சமாதி ஈசனை ஒட்டி உள்ளது. நீங்கள் அறிந்த ஈசனை எனக்கு அறிவிக்க மாட்டிர்களா சித்தரே , என்று அவரிடம் வேண்டி கொண்டு வெளியே வந்தேன்.
அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம். தட்சனின் யாகத்திற்கு சென்று ஈசனின் கோபத்திற்கு ஆளான சூரியன், பாவம் நீங்க வந்து வழிபட்டு மீண்டும் உருவம் பெற்ற தலம். என் பாவ கணக்கு ஒரு கோவிலுடன் முடிய கூடிய விஷயம் அன்று என்று எனக்கு தெரியும். சுமாரான நிலையில் உள்ள கோவில். யாரும் இல்லை கோவிலில். வழக்கம் போல் ஈசன் தனித்து நிற்கின்றான். காலத்தின் கணக்கு நாம் கண் முன்னே நிற்கிறது.
என்ன வேண்டுவது என்று தெரிய வில்லை. பேரின்பம் என் கண் முன்னே நிற்கும்போது , வேறு எதை கேட்பது ஈசனிடம். ஈசா என்ற வார்த்தை மட்டும் உள்ளே உலவி கொண்டு இருக்க, மௌனமாய் கோவில் விட்டு வெளியேறினேன்.
அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம். பசுக்கள் , கொம்பு வேண்டி ஈசனை வழிபட்ட தலம் மற்றும் ராமர் வழிபட்ட தலம். இரவு ஏழு மணியளவில் கோவிலை அடைந்தேன். பெரிய கோவில். அனல்விழியனை (ஈசன்) கண்டால் மனம் ஆடி போகிறது. கோவில் வரலாறு சொல்லி அர்ச்சகர் நகர்ந்து போகிறார்.
மீண்டும் ஒரு தனிமை தவம் ஈசனுடன். வேண்ட நினைத்தாலும் எதுவும் நினைவுக்கு வரவில்லை. வேண்டுதல் நின்று போய் விட்டது என்று புரிகிறது. வில்வ மாலை அணிந்தவன் , நம்மை வில் எய்தாமலே வீழ்த்துகின்றான். தாயை தேடினால் , தாய் கோவிலில் இல்லை. கலவரமாகி , அர்ச்சகரிடம் கேட்டால், பிருகு முனிவர் ஈசனை மட்டும் வணங்கியதால் , அம்மை கோபித்து கொண்டு எதிரே தனி கோவில் கொண்டு உள்ளாள் என்றார்.
வெளிவந்து பார்த்தால், தனி கோபுரம் கொண்டு, தனி கோவிலில் நிற்கின்றாள் அம்மை. எப்படி கவனிக்காமல் விட்டோம் என்ற கேள்வியுடன் உள்ளே நுழைந்தால், நிலவு இறங்கி வந்து கோவிலில் நிற்பது போன்று ஒரு குளுமை கோவிலுக்குள். ஈசனிடம் இருந்து சந்திரன் இடம் மாறி தாயிடம் நிற்கின்றான் போலும், அன்பு இங்கே அபிராமியாக நம்மை அள்ளுகிறது.
இரவு 8 மணியை நெருங்க, இனிமேல் மற்ற கோவில்கள் திறந்து இருக்க வாய்ப்பு இல்லை என்ற எண்ணம் கொண்டு , திருவெண்ணெய் நல்லூரில் தங்கும் விடுதி தேடி கொள்ளலாம் என்று பயணித்தேன். 
வழியில் கிரமாம் என்று ஊரை தாண்டும் போது, நாய் ஒன்று வேகமாக குறுக்கே ஓடியது. தடுமாறி போய், கீழே விழ வேண்டிய நிலையை சமாளித்து , வண்டியை ஓரத்தில் நிறுத்தினேன்.
வண்டியை நிறுத்திய இடத்தில் இடபக்க சந்தில் ஒரு கோவில் கோபுரம் தென்பட்டது. என்ன கோவில் என்ற யோசனையுடன் சென்றால் , அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில் என்ற பலகையை கண்டவுடன் தூக்கி வாரி போட்டது எனக்கு. என் பயண திட்டத்தில் பார்க்க வேண்டிய பாடல் பெற்ற தலம் இது.
உண்மையில் அபிராமேஸ்வரர் திருக்கோயில் பார்த்து முடித்த உடன், இடையாறு அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில், பின்பு திருவெண்ணெய் நல்லூர், பின்பு அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில் என்பது என் பயண திட்டம். எப்படி பயண திட்டத்தை மாற்றிக் கொண்டேன் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.
கோவில் நடை திறந்து இருந்தது , இரவு 8.45 மணி. வெளி ஊரில் இருந்து வந்த பக்தர்கள் திருவெண்ணெய் நல்லூர் கோவிலுக்கு சென்று இருக்கிறார்கள், அவர்கள் வந்து பூஜை செய்வதற்கு வசதியாக கோவில் நடை அடைக்காமல் உள்ளோம், இல்லை 7.30இல் இருந்து 8 மணிக்குள் கோவில் அடைத்து விடுவோம் என்று கோவில் துப்பரவாளர் சொன்னார்.
உற்சாகமாக உள்ளே சென்றேன். ஈசனின் வாயில்காவலர்களான திண்டி, முண்டி வழிபட்ட தலம், அதிசய மலரை பறிக்க நினைத்த மன்னன், ஈசன் மீது அம்பு விட்ட தலம். என் ஈசனின் கருணை, பல கோவில்களில் கருவறை முன் தனியாக நிற்கும் பேறு கிடைத்து கொண்டு வருகிறது எனக்கு.
அழுகை தானாக வருகிறது ஈசனை கண்ட உடன். சித்தர்களும், யோகிகளும் , ஏன் ஈசனையே நாடுகின்றனர் என்பது ஈசன் முன் நிற்கும்போது உணர்த்தபடுகின்றது நமக்கு. கருவறையில் பிறந்த நாம், இன்னோர் கருவறை முன் வந்து நிற்கின்றோம். இங்கே தாயுக்கும், தாயுமானவன் கருவறையில் நிற்கின்றான். கருவறை நமக்கு இன்னோர் தாயின் வீடாக அறிவிக்க படுகிறது.
கவலைகள் நம்மிடம் இருந்து கழற்றி எறியப்படுகிறது. பாதுகாப்பு என்ற சொல்லின் அர்த்தம் இங்கே பலமாக நம்மால் உணரப்படுகிறது. கோவில் சுற்றி வெளியே வந்தால், நம் பைக்கின் முன் குறுக்கே பாய்ந்த, நாயார் நிற்கிறார் வாலை ஆட்டிக்கொண்டு. நன்றி சொல்லிவிட்டு , திருவெண்ணெய் நல்லூர் கோவில் நோக்கி பறந்தேன்.
நான் சென்ற போது, திருவெண்ணெய் நல்லூர் கோவில், நடை அடைக்கப்பட்டு இருந்தது. அங்கு தங்கும் விடுதி எதுவும் இல்லை. திருக்கோவிலூர் செல்லலாம் என்று நினைத்தால் , மிக மோசமான சாலைகள் , இரவில் பயணிப்பது சரியான செயல் அன்று என்று அங்குள்ளவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.
சில அன்பர்கள் தங்கள் வீட்டில் தங்கும் படி ஆதரவு காட்டினார்கள். நன்றி சொல்லி விட்டு, வேறு வழி இல்லாமல், மீண்டும் விழுப்புரம் வந்து ,விடுதி எடுத்து நன்றாக அயர்ந்தேன்.





!!274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 2-பகுதி!!

!!274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 2-பகுதி!!
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், செய்யாறு. சம்பந்தரை கொல்ல சமணர்கள் அனுப்பிய பாம்பை , ஈசன் பாம்பாட்டியாக வந்து பிடித்து சம்பந்தரை காத்த தலம். ஆண் பனை மரங்கள் ஈசனின் அருளால் பெண் பனை மரங்களாக குலை தள்ளிய அதிசயம் நடை பெற்ற தலம். மிக நல்ல நிலையில் உள்ள கோவில். எந்த குறையும் இல்லாமல் ஈசன் நிற்கின்றான்.
வெள்ளை வேட்டி அணிந்து வெள்ளிச்வரன் அருள்கின்றான். கலியுகத்தின் எட்டாத இறை, இங்கே நமக்கு கிட்ட நிற்கிறது. வாழ்வின் அர்த்தம் ஈசன் முன் நிற்கும்போது விளங்குகிறது. வாழ்வின் வழித்தடம் எங்கும், என் வழித்துணையாய் வா என் அப்பனே என்று வேண்டி கொண்டு கோவில் விடுத்து வெளி வந்தேன்.
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம். திண்டிவனம்-பாண்டிச்சேரி சாலையில் உள்ளது. கடுமையான மழை, இருசக்கர வாகனத்துடன் சேர்த்து என்னை அள்ளியது. ஈசன் முகம் பார்க்க வேண்டும் என்று எண்ணமே இருந்ததால் , நிற்காமல் பயணத்தை தொடர்ந்தேன். ஆனால் ஈசன் இங்கு முகம் காட்ட மறுத்தான். கோவில் அர்ச்சகர் வெளி ஊர் சென்று விட்டார்.
வீட்டில் விசாரித்ததில், சரியான தகவல் இல்லை. வெளி ஊரில் இருந்து கோவில் பார்க்க வந்துள்ளோம் என்று சொன்ன பிறகும், அர்ச்சகர் வீடு அலட்சியமாக இருந்ததாக பட்டது எனக்கு. எப்போது அவர் திரும்பி வருவார் என்று உறுதியாக அவர்களால் சொல்ல முடியவில்லை. பின்பு தினமலரில் குறிக்கப்பட்ட நம்பரை தொடர்பு கொண்டேன். கோவில் சம்பந்தப்பட்டவர் போலும், மிகவும் பொறுமையாக கோவிலை பற்றி தகவல் சொன்னார். அர்ச்சகர் நம்பர் தந்தார்.
அர்ச்சகர் நம்பரை தொடர்பு கொண்ட போது, வெளியூரில் இருப்பதாகவும் , நாளை தான் வருவேன் என்றும் பதமாக பேசினார். வேறு அர்ச்சகர், நாளை வந்து பூஜை செய்வதாக சொன்னார். அந்த அர்ச்சகரின் நம்பர் கேட்டதற்கு , பல வித காரணத்தை சொல்லி மறுத்துவிட்டார். யாரும் வந்து பூஜை செய்ய போவதில்லை என்பதை அவர் நம்பர் தர மறுத்ததில் இருந்து புரிந்து கொண்டேன்.
ஒரு கால பூஜை மட்டும் நடைபெறும் கோவிலில் வெளி நின்று ஈசனை வணங்கி விட்டு, நாளை உனக்கு அந்த ஒரு கால பூஜையும் நடக்காதா என்ற வேதனையுடன் அடுத்த கோவில் நோக்கி சென்றேன்.
அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம். சாளுக்கிய மன்னனுக்கு ஈசன் மானாக வெளிப்பட்டு அருள் செய்த தலம். நான் சென்ற மதிய பொழுது, கோவில் நடை திறந்து இருந்தது. ஈசன் அமைந்த பகுதி பூட்டப்பட்டு இருந்தது. அருகில் தான் அர்ச்சகர் வீடு என்பதால், அர்ச்சகரை ஈசன் முகம் காட்டும் படி வேண்டினேன். இளவயது ஒத்த அர்ச்சகர் வந்து ஈசனை காட்டினார்.
மானாக வந்தவன், ஒயிலாக நிற்கின்றான். வேதங்களின் அதிபதி, முன் நிற்கும்போது வெளித்தொடர்புகள் மெல்ல அறுகின்றன. கற்பனைக்கு எட்டாதவன் காலடி பற்றி, மனம் கண்ணீரில் கரைகிறது. இன்னும் எத்தனை நாட்கள் என் ஈசனே, உன் திருவடி நிழலில் நிரந்தரமாய் இளைப்பாற என்ற கேள்வியுடன் விடைபெற்றேன்.
அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம். இந்த கோவில் செல்லும்போது நடை சாத்தி இருந்தது. அங்கிருந்த குளத்தின் அருகே அமர்ந்து இருந்தேன். கடுவெளி சித்தரக்காக , ஈசன் சினந்து அரசனையும் , மக்களையும் தண்டித்த தலம், பார்வதி தாயார் அசுரர்களை கொன்ற பழி நீங்க தன் மன்னவனை வழிபட்ட தலம்.
கோபம் கொண்டு மூன்றாய் வெடித்து சிதறிய லிங்கத்தை , செப்பு பட்டயத்தில் ஒன்றாக சேர்த்து வைத்து இருக்கிறார்கள். போருக்கு கிளம்பும் போர் படை கவசம் கொண்டு ஈசன் நிற்பதாக தோன்றியது எனக்கு. முதல் கள பலியாக என்னை ஏற்றுக் கொண்டு, என் பிறவிக்கு ஒரு முற்று புள்ளி வை என் ஈசனே என்று மனம் வேண்டுகிறது.
மங்கி போன மனம், மாசற்ற சோதி முன் , உடல் பிடித்து நிற்க கூட முடியாமல் முடங்குகிறது. சுற்றி சுற்றி வந்து நின்றாலும் , சிறுகதையாக முடியாமல் , நெடும்கதையாக ஈசனை தொடரும் பயணம், நெடும் தூரமாக நீள்கிறது. பயணம் இன்னும் தொடரும்......





Friday, November 21, 2014

274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 1-பகுதி

274 பாடல் பெற்ற சிவத்தலங்களின் 3வது சுற்றின் 1-பகுதி
மீண்டும் ஓர் பாடல் பெற்ற சிவத்தலங்களுக்கு ஒரு இரண்டு நாட்களுக்கான இரு சக்கர வாகன பயணத்திட்டம். இந்த முறை திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேவார பாடல் பெற்ற தலங்களை தரிசிக்கலாம் என்று முடிவு எடுத்து கொண்டு, சனிக்கிழமை காலை 5 மணி அளவில் பயணத்தை தொடங்கினேன்.
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை. காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லையில் உள்ளது. நான் மழை சாலைகளை தின்று போய் விட்டு இருக்கும் என்று நினைத்து செங்கல்பட்டு, திருச்சி சாலை வழியாக சென்று விட்டேன். நெடுஞ்சாலை எல்லாம் நன்றாக தான் இருந்தது. அங்கிருந்து இக்கோவிலை அடைவதற்குள் நான் பட்ட இன்னல்களை ஈசன் மட்டுமே அறிவான்.
குரங்கணில்முட்டம், அழகிய கிராமம். நான் சென்று போது கோவில் நடை திறக்க வில்லை. சில ஐயப்பன் பகதர்கள் வெளி நின்று மாலை போட்டு கொண்டு இருந்தனர். பிரசாதம் தந்தார்கள். அணிலாக மாறிய இந்திரன், காகம் உருவம் கொண்ட எமதர்மன், குரங்காய் வந்த வாலி, மூவரும் ஒன்றாய் நின்று வழிபட்ட தலம். கோவிலை சுற்றி அரைவட்டதில் எமதர்மன் உருவாக்கிய தீர்த்தம் உள்ளது.
ஐயர் வீடு அருகாமையில் உள்ளதால், அவரை நாடினேன். அவர் , “இன்று எனது தம்பியின் முறை அவரிடம் சாவி வாங்கி கொள்ளுங்கள்” என்று தம்பியின் நம்பர் கொடுத்தார். அவரை தொடர்பு கொண்டு சொன்ன பிறகு , ஒரு நாப்பது நிம்டம் கழித்து வந்தார்.
கோவில் திறந்தார். கூத்தனை (ஈசன்) கண்டதும் மனம் குரங்காய் கூத்தாடுகிறது. காத்திருந்த நேரங்கள், இந்த கணத்திற்கு தான் என்று மனம் திரும்ப திரும்ப சொல்கிறது. இடப்பக்கம் அம்மை நிற்கின்றாள், அப்பனின் நேரடி பார்வையில் நாம் நிற்க, தாயோ இடப்பக்கம் ஆதரவாய் நம் அருகே நிற்கின்றாள். என் தாயும், என் தந்தை முன் நான் நேராக நிற்கும்போது , அப்படிதானே இடப்பக்கம் எனக்கு ஆதரவாய் நிற்பார்கள் என்று மனம் எண்ணுகிறது.
மந்தியாய் மேய்ந்த மனம், ஈசன் முன் மடங்கி ஒடுங்கி நிற்கிறது. தீபம் காட்டி அர்ச்சகர் ஆண்டவனின் அருளை சொல்கிறார். சுற்றி வந்தால் மிக சுமாரான நிலையில் தான் கோவில் உள்ளது. வருமானம் அற்ற கோவில்கள் வேறு என்ன செய்ய முடியம் என்ற சிந்தனையோடு அங்கிருந்து விடை பெற்றேன்
அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை. ஒரு ஏரிக்கரை வழியாக கடந்து சென்று , கோவிலை அடைந்தேன். கோவில் செல்லும் வழியில் ,சுந்தரர்க்கு வந்து உணவளித்த ஈசன், அவருக்கு என்று நீர் கொடுக்க ஒரு தீர்த்தத்தை உண்டாக்கிய இடம் உள்ளது. பக்தனை காண படைத்தவன் வருவது பக்தியின் உச்சம்.
என்னை காண ஈசன் வருவனோ, அல்லது செய்த பாவங்கள் என்னை பழி தீர்த்து பிறகு, ஈசன் வருவானோ என்ற கேள்விகள் தீர்த்தத்தின் முன் நிற்கும்போது அலையாய் மோதுகிறது. அவன் என்னை நாடி வரா விட்டால் என்ன, நான் அவனை நாடி போய் , அவன் திருவடியை அடையாமலா போய் விடுவேன் என்ற பதில் உள்ளே வருகிறது. மனம் சமாதனம் அடைந்து கோவில் சென்றேன்.
நல்ல நிலையில் உள்ள கோவில். இரண்டு மூலவர்கள். அகத்தியர் பூசித்த ஈசன் தாளபுரீஸ்வரர், புலத்தியர் பூசித்த ஈசன் கிருபாநாதஈஸ்வரர்.
கோவில் வெளியே அகத்தியர் காலம் முன்னே, ஈசனை பாதுகாத்து , வணங்கி கொண்டு இருந்த முனிஸ்வரர் ஆலயம் உள்ளது. இவருக்கு நன்றி சொல்லிவிட்டு, கோவில் உள்ளே புகுந்தேன். மயான அமைதியில் கோவில், அழகாய் ,மிக தூய்மையாக நிற்கிறது.
ஈசன் தியானத்தில் உள்ளான் போலும். ஒரு ஈசனின் ரூபமே நம்மை அழகில் அடித்து போட்டு விடும். இங்கே இரண்டு ஈசனின் ரூபம், சொல்ல வா வேண்டும். ஆனந்தம், பேரனானந்தம். பளிங்கின்மேனியன் (ஈசன்) பார்வையில் நம்மை கொல்கின்றான். தீபம் ஏற்றி ஐயர் காட்டினாலும், தீபம் மீறி ஈசனே தீபமாய் ஒளிர்கின்றான். வலபக்கம் இரண்டு தாயார்கள் நிற்கிறார்கள்.
அப்பனின் அழகை கண்டு, அம்மை கூட நாணி நிற்பதாய் பட்டது எனக்கு. கோவில் சுற்றி வந்தேன். மிக சிரத்தையுடன் கோவிலை நன்றாக வைத்து இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டு அடுத்த கோவில் கிளம்பினேன்.







Monday, November 17, 2014

பதினைந்து ஏக்கர் கோவில் நிலத்திற்கு , வருட குத்தகையாக 1000 ரூபாயை வாடகையாக தருகின்ற , அவலம்

பல நண்பர்கள் வேண்டுகோளின் படி, நான் இரண்டு நாட்களுக்கு முன் சென்று வந்த திருவண்ணாமலை, விழுப்புரம் கோவில்களின் தகவல்களை பட்டியல் இட்டு (இரண்டு புகைப்படம்) உள்ளேன். கோவிலின் தொடர்பு எண்களையும் பெற்று வந்தேன். என்னால் முடிந்த அளவு தகவல்களை தொகுத்து உள்ளேன். ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும். உதவி செய்ய விருப்பம் உள்ள நண்பர்கள் , நீங்களே கோவில் அர்ச்சகரை தொடர்பு கொண்டு, உங்களால் முடிந்த நிதியுதிவி செய்யலாம்.
கோவிலின் கால பூஜைகள் மற்றும் கோவிலை கட்டுபடுத்தும் அதிகாரம் பற்றிய தகவல்கள், சரியாக சொல்ல முடியவில்லை. சில இடங்களில் அர்ச்சகர் நான்கு கால பூஜை என்றால், உள்ளூர் மக்கள் 2 கால பூஜை என்கிறார்கள். சில இடங்களில் அரசாங்க மேற்பார்வை என்கிறார்கள், இன்னோர் சாரார் அரசாங்கத்தின் ஆளுமையில் உள்ள கோவில் உள்ளது என்று தகவல் சொல்கிறார்கள்.
ஆனால் வரலாற்றில் உச்சத்தில் இருந்த பல கோவில்கள், இன்று காலத்தின் எச்சமாய் நிற்கிறது. பதினைந்து ஏக்கர் நிலத்திற்கு , வருட குத்தகையாக 1000 ரூபாயை வாடகையாக தருகின்ற , அவலம் இன்னமும் தொடர்கிறது. 1000 ரூபாய் வைத்து கொண்டு ஒரு கோவில் என்ன செய்ய முடியும், 500 ரூபாய் மாத சம்பளம் பெற்று கொண்டு ஒரு அர்ச்சகர் எப்படி குடும்பம் நடத்துவார்.
இயற்கை சீற்றத்திற்கு தாங்கி நின்ற கோவில்களை, எப்படியாவது அழித்து விட வேண்டும் என்று மனிதன் நினைத்து விட்டான் போலும்.
கோவில்களில் குடி கொண்டு இருக்கும் இறைவனை விட்டு விடுங்கள்.
கோவில்கள் அழிந்து போனால், நம் வராலறு அழிந்து போகும். எல்லா கோவில்களும், தமிழக மன்னர்களை பற்றிய ஏதாவது செய்திகளை தாங்கி நிற்கிறது.
கோவில் ஒன்று இல்லாமல் போய் இருந்தால், நான் அரசாண்ட தமிழ் இனத்தை சேர்ந்தவன் என்று யாராலும் இன்று பெருமை பேசி திரிந்து கொண்டு இருக்க முடியாது. கோவில் ஒன்று இல்லாமல் போனால், எங்கே போய் பரதம் ஆடுவீர்கள், கல்யாணம் செய்வீர்கள், உங்கள் குறை சொல்லி அழுவீர்கள்.
தமிழ்நாட்டில் ஏழு கோடி தமிழ் மக்கள், அதில் 6 கோடி பேர் ஹிந்துக்கள். அதில் பத்து லட்சம் பேர் மாதம் பத்து ரூபாய் போட்டால் கூட , தமிழகத்தின் எல்லா கோவில்களையும், நம்மால் காப்பாற்ற முடியும்.
முப்பது பேர் சேர்ந்து ஒரு கோவிலை தத்து எடுக்கலாம். ஒரு கால பூஜை என்பதை இரு காலம் ஆக்கலாம், மாதத்திற்கு ஒருமுறையாவது கோவிலை சுத்தபடுத்தும் பணிக்கான பண செலவை செய்யலாம்.
நான் என் நண்பர்களை சேர்த்து செய்யலாம் என்று முடிவு செய்து உள்ளேன்.
கோவில்களை காப்பது என்பது, நமது கடந்த கால பெருமை மிக்க வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு மீட்டு எடுத்து செல்லும் முயற்சியின், மீள் தொடர்ச்சி என்பதை நம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த தொடர்ச்சி நின்று போனால், அது வீழ்ச்சி ஆகி விடும்!!
கோவில்கள் செல்லும் வழி

சுந்தரர் அவதரித்த ஊரின் கோவில்,விளையாட்டு மைதானமா?

சுந்தரர் அவதரித்த ஊரின், ஈசனின் கோவில், விளையாட்டு மைதானமாக பயன்படும் அவலம். 274 சிவாலயங்களின் பயணத்தின் ஒரு பகுதியாக, இரண்டு நாட்களுக்கு முன், விழுப்புரம் மாவட்டம் , திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில் சென்றேன், அங்கே தான் இந்த காட்சி.
விளையாட்டு தவறு அல்ல. விளையாடும் இடம் தவறு. மனம் நிம்மதி தேடும் இடத்தில , கூச்சல் போட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். கோவில் வெளியில் செருப்புக்களை பக்தர்கள் விட்டு , உள்ளே நுழைந்தால், இவர்கள் செருப்பு காலுடன் உள்ளே நுழைந்து விளையாடி கொண்டு இருக்கின்றனர்.
அவர்களை தட்டி கேக்க கோவில் நிர்வாகம் அஞ்சுகிறது. அங்குள்ளவர்களை விசாரித்தால், அந்த பயத்தில் நியாயம் உள்ளதாகவே தெரிகிறது. மிக தவறான வார்த்தைகள் வரும் என்று அஞ்சுகிறார்கள். நான் கேக்க முற்பட்ட போது, தடுத்து விட்டார்கள். நீங்கள் வெளியூர், நீங்கள் பேசி எந்த பயனும் இல்லை. நீங்கள் வார்த்தைகள் வாங்க வேண்டி வரும் என்றார்கள்.எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.
ஆனால், இவர்கள் உள்ளே நிரந்தரமாக நெட் கட்டி விளையாடு கின்றனர் என்பது நிதர்சமான உண்மை. அது பக்தர்களுக்கு மிக பெரிய இடைஞ்சல் என்பதும், கோவில் சுற்றும் பெண் பக்தர்களுக்கு உளவியல் ரீதியான அச்சுறுத்தல் என்பதும் நான் கண் கூடாக கண்ட உண்மை.
விளையாடும் அனைவரும் வாலிப பருவும். கடவுள் நம்பிக்கை உள்ள கூட்டமாக தெரியவில்லை. கண்டிப்பாக இந்த கூட்டத்தில் யாரோ இரண்டு பேர் , இந்த செயலை செய்ய அடுத்தவர்களை ஊக்குவித்து கொண்டு உள்ளனர்.
இந்து அறநிலையத்துறை , கோவில் காவலாளி எல்லாம் இருந்தும் எல்லாம் ஊமையாக உள்ளனர். உள்ளூர் ஆட்களை பகைத்து கொண்டால் , ஊரில் இருக்க முடியாது என்று பயபடுகின்றனர்.
இதனாலே பெண்கள் வெளி பிரகாரத்தை சுற்றி வருவதை தவிர்த்து விடுகின்றனர் என்று புரிகிறது.
சிறுவர்களிடம் விசாரித்தால், சில சமயம் மதியம் கோவில் நடை அடைகபட்டாலும், கோவில் மதில் மேல் ஏறி குதித்து உள்ளே சென்று விளையாடுவார்கள் என்று சொன்னார்கள், எப்படி உள்ளே போவர்கள் என்று எனக்கு ஒரு சிறுவன் செய்தே காட்டினான். கோவில் நடை சாத்திய பிறகு, கோவிலுக்குள் போவது, விதி மீறல் ஆகாதா ?
கோவில் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது என்று புரிகிறது. நான் தினமலருக்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கின்றேன். அந்த ஊரை சேர்ந்த நண்பர்கள் யாராவது இருந்தால், அந்த ஊர் பெரியவர்களிடம் அல்லது அதிகாரத்தில் உள்ளவர்களிடம் , நமது கவலையை தெரிவித்து, அந்த இளைஞர்களை, கோவில் வெளியே வேறு இடம் தேடி கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
இன்று இதை அனுமதித்தால், நாளை , கிரிக்கெட் என்று ஒரு கும்பல் உள்ளே புகும். ஏற்கனவே கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்க பட்டு விட்டன. மிச்சம் இருப்பது கோவில்கள் மட்டும் தான், அதையும் விளையாட்டு என்ற போர்வையில் மெல்ல ஆக்கிரமிக்கும் முயற்சியை , முளையிலே நாம் கிள்ளி ஏறிய வேண்டும்.




Saturday, November 1, 2014

ஜீன்ஸ் பேன்ட் தடைக்கு எதிராக குரல் கொடுத்தால் நீங்கள் அறிவுஜீவிகள் அல்லவா?

ஜீன்ஸ் பேன்ட் அணியாதே என்று சொன்னதற்கு கடுமையான எதிர் குரல் கொடுத்த நமது நவநாகரிக கார்ப்பேர்ட் பெண்மணிகள், தங்கள் பெண் இனத்தை அடிமையாக விற்க சொல்லும , இந்த பேடிகளுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பமால் ஒளிந்து கொள்வது ஏன்.
ஜீன்ஸ் பேன்ட் தடைக்கு எதிராக குரல் கொடுத்தால்  நீங்கள் அறிவுஜீவிகள் , புரட்சி பெண்மணிகள். பெண்ணிய அடிமை முறைக்கு எதிராக ஒரு பதிவு கூட உங்களால் எழுத முடியாது அல்லவா. வாழ்க உங்கள் புரட்சி.
இன்றைய நவின உலகத்திலும் , பெண்களை அடிமைகளாக விற்கும் முறையை கொண்டுள்ளவர்களை என்ன வென்று அழைப்பது. அதற்கு ஒரு மதத்தை துணைக்கு வைத்து கொண்டால் , அந்த மதத்தை பற்றி என்ன நினைப்பது. 
இஸ்ரலின் அக்கிரமம் என்று பக்கம் பக்கமாய் பதிவு எழுதியவர்கள் , இன்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பற்றிய சின்ன கண்டன பதிவை கூட போடுவதில்லை. கேட்டால் மீடியா அதிகமாக உருவகபடுத்தி சொல்கிறது என்று கதை அளக்கிறார்கள் .
எந்த மீடியா இஸ்ரேல் தாக்குதல்களை வெளியிட்டதோ , அதே மீடியாக்கள் தான் இன்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கோர முகத்தை சொல்கிறது. ஐஎஸ்ஐஎஸ் பற்றி மீடியா சொன்னால் அது கதை. நல்ல நியாயம்.
எப்போது ஒரு மதம் , சொந்த தாய் தேசத்தையும் , பெற்ற தாயையும் விட இறைவனும் புனித நூலும், இறைதுதரும் மட்டுமே உலகில் உயரந்தது என்ற கருத்தை பதிவு செய்து விட்டதோ, அந்த மதம், தான் வாழும் தேசத்திற்கும, மனித நேயம் என்ற பண்புக்கும் ஊரு விளைவிக்கும் என்பதே உண்மை.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மீது எந்த உலக அரசாங்கமும் இஸ்லாமிய முத்திரை குத்த வில்லை. ஐஎஸ்ஐஎஸ் தான் , தாங்கள் தான் அகண்ட இஸ்லாமிய அரசு என்று அறிவித்தது. தாங்கள் போர் செய்வதே இசுலாமிய அரசு அமைக்க என்று தெளிவாக சொல்லி விட்டார்கள்.
ஆகையால் , எதோதோ மற்றவர்கள் தான் ஐஎஸ்ஐஎஸ் மீது இஸ்லாமிய முத்திரை குத்தி விட்டார்கள் என்று கதை விட வேண்டாம்.
பெண்ணை அடிமை சந்தையில் விற்பவன் மனிதனா? பணம் கொடுத்து அந்த பெண்ணை வாங்குபவன் மனிதனா? அதை ஒரு மதம் ஒத்து கொள்ளுமா?
இயற்கையின் படைப்பில் ஒரு அங்கமான பெண்களை, அவ மரியாதை செய்து அழிக்க நினைத்த அரசுகளை இந்த மண்ணில் இருந்து இயற்கை வேரோடு பிடுங்கி எறிந்து இருக்கிறது என்பது உலக வரலாறு.
இன்று ஒரு மதத்தின் பெயர் கொண்டு , அதை செய்கிறார்கள்.
இயற்கை சீற்றம் கொள்ளும் என்பது நிச்சயம். யார் அழிய போகிறார்கள் என்பதை வரலாறு சொல்லும்.
http://rt.com/news/196512-isis-yazidi-women-slavery/
Islamic state won’t even let us kill ourselves - A Yezidi Sex Slave

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...