Friday, September 18, 2015

லஜ்ஜா (Lajja)- அவமானம்- தஸ்லிமா நஸ்ரின்

லஜ்ஜா (Lajja)- அவமானம்- தஸ்லிமா நஸ்ரின்
Lajjā- Novel by Taslima Nasrin

கிழக்கு பதிப்பகம் விலை-200

பங்களாதேஷ் எழுத்தாளர் எழுதிய நாவல். பங்களாதேஷில் சிறுபான்மையிரான ஹிந்து மக்கள் எப்படி அழிக்கப்பட்டனர் என்பதை இஸ்லாமிய பெண் எழுத்தாளர் பதிவு செய்து இருக்கிறார்.

எதற்காக இந்த பெண் எழுத்தாளரை கொல்ல அந்த நாட்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முயன்றனர் என்பது முதலில் புரிபடாமல் இருந்தது. புத்தகம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின்  அகோர முகத்தை பதிவு செய்கிறது. ஆனால் எந்த இடத்திலும் இஸ்லாத்தை விமர்சிக்க வில்லை.

பிறகு ஏன் தீவிரமாக வேகமாக எதிர்த்தார்கள் , இந்தியாவில் உள்ள இஸ்லாம் அமைப்புகளும் ஏன் தீவிரமாக எதிர்த்தார்கள். போதா குறைக்கு காங்கிரஸ் , கம்யூனிஸ்ட்ம் எதிர்த்தார்கள்.

விடை புத்தகத்தில் உள்ளது.

கதை இந்தியாவின் பாபர் மசூதி இடிப்பில் இருந்து தொடங்குகிறது. இடிப்பால் ஏற்பட்ட இன்னல்கள் பங்களாதேஷ் ஹிந்துக்களின் வாழ்க்கையை இருட்டில் தள்ளுகிறது என்ற வரிகளுடன் புத்தகம் நம்மை வரவேற்கிறது .

பாபர் மசூதியால் தான் ஹிந்துக்கள் வாழ்க்கை பாழாகிப் போனதோ என்ற கவலையுடன் தொடர்ந்து படித்தால், இல்லை பாபர் மசூதி நிகழ்வுக்கு முற்பட்டே அங்கே ஹிந்துக்கள் ஒழித்து கட்டப்பட்டு வந்து இருக்கிறார்கள் என்பதும், பாபர் மசூதி நிகழ்வை மிக சரியாக அங்கே இருந்த இஸ்லாமிய அடிப்படை வாதிகள் உபயோகி படுத்திக் கொண்டனர் என்பதை புள்ளி விவரங்களுடன் புத்தகம் நம்மிடையே பகிர்கிறது.

இது எதிர் வினைக்கான, எழும் வினை அல்ல என்பதும், ஹிந்துக்களின் எதிர்காலத்தை திட்டமிட்டு தங்களது எதேச்சதிகார ஆளுமையின் அழித்து கொண்டு இருக்கும் அரசாங்கத்தையும் , அதற்கு ஆதரவு அளிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும் இந்த புத்தகம் அம்பலபடுத்துகிறது

சுதந்திரக் காற்றை சுவாசம் செய்ய முடியாமல் தடுமாறி கீழான நிலையில் இருந்த கிழக்கு பாகிஸ்தானை  , பங்களாதேஷ் என்ற புதிய பரிமாணத்தில் பாரில் அறிமுகம் செய்தது எங்கள் பாரத தேசம் அல்லவா?

நட்பாக இருந்து இருக்க வேண்டிய அந்த தேசம் நம்பிக்கை துரோகம் செய்தது எப்படி. நன்றியுள்ள மனத்தினை மதம் மறித்து கொன்று, மதமே அங்கே மகுடம் சூடி இருக்கிறது. மாட்சிமை அற்ற அதன் ஆட்சியாளர்கள் , ஹிந்துக்களை அகதிகளாக அடித்து விரட்டி , இந்திய தேசத்தின் முதுகில் அல்ல, நேரடியாக நெஞ்சிலே வாளை சொருகி இருக்கிறார்கள்.

மதசார்ப்பற்ற அரசாங்கம் என்ற அறிவிக்க முயன்று தோற்று போய், முற்றும் இஸ்லாமிய தேசமாகி போன பங்களாதேஷ்ல் எப்படி ஹிந்து மக்கள் வேட்டையாடப் பட்டனர் அவர்கள் வீட்டு பெண்கள் எப்படி கற்பழித்து கொல்லப்பட்டார்கள், எப்படி வேலை வாய்ப்பில் மறுக்க பட்டனர் , எப்படி ஆயிரக்கணக்கான கோவில்கள் அழிக்க பட்டது என்பதை புத்தகம் அட்டவணை படுத்துகிறது.

இஸ்லாத்தை ஆட்சி அதிகாரமாக கொண்ட எந்த தேசத்திலும் , பிற மதங்கள் வாழ முடியாது என்ற கருத்திற்கு இது வலு சேர்க்கிறது. நிகழ் காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை நினைவில் நிறுத்தினால், இஸ்லாமிய தேசத்தில் இஸ்லாமியர்கள் கூட வாழ முடியாது என்பதை முகத்தில் அடித்தார் போல் வரலாறு நம் கண் முன்னே எழுதிக் கொண்டு இருக்கிறது. அதற்கான முன்னுரை தான்  இந்த புத்தகம்

இஸ்லாம் மக்கள் பெரும்பான்மை கொண்ட தேசங்களான பாகிஸ்தானும் , பங்களாதேசம் வேறுபட்டு நின்றாலும் கொள்கை அளவில் ஒருமித்து நிற்கின்றன. காபீர்கள் அற்ற தேசம் என்ற கொள்கை அது.

நல்ல முஸ்லிம்கள் அங்கே இருந்தாலும், ஹிந்துக்கள் மீது நடக்கும் கொடுமைகளை தட்டி கேக்க முடியாமல் தளர்ந்து  போய் கிடப்பதையும், ஒவ்வார் முறையும் ஹிந்துக்களை காக்க முயன்று, கடைசியில் காக்க  முடியாத இயலாமையையும் புத்தகம் ஒப்புக் கொள்கிறது.

இன்றும் விழித்துக் கொள்ள மறுக்கும் இந்திய ஹிந்துக்களுக்கு இஸ்லாமிய தேசத்தில் இருந்து அனுப்பட்ட ஒரு எச்சரிக்கை கடிதம்,  புத்தகமாக கடந்து நம் கைகளுக்கு வந்து இருக்கிறது என்பதாக நான் கருதுகின்றேன்.

பிரித்து படிப்பதும், படிக்காமல் விடுவதும் அவரவரின் விருப்பம்.
ஆனால் நல் வாழ்விற்கான விருப்பம் , வாழ்வதற்கான வாழ்விடத்தை வகுத்து கொள்வதில் இருந்து தொடங்குகிறது.

இருக்கும் இடம் போனால் , இன்னோர் இடம் தேடி கொள்ளலாம். ஆனால் வாழ்விடம் எது என்று கூட அறிய முடியாமல் , ஒரு தேசமே களவு போவதையும், அந்த களவின் பின் நிற்பது ஒரு மதம் என்ற அறிய நேரிட்டால் என்ன செய்வது?

நட்பாய் நாம் இருக்க வேண்டும், ஆனால் நாம் தான் இந்த தேசத்தின் நாயகர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் இந்த தேசத்தின் இடங்கள் எல்லா மதத்தினரக்கும் பாத்தியபடும், பாதுகாக்க படும்.

இல்லை என்றால் ஒரு மதத்தினரக்கு  மட்டும் பதிவு செய்ய படும்.

http://sugashiva.blogspot.in/

Saturday, September 12, 2015

சிலுவை போர்கள் என்றும் சீக்கிரம் முடிவதில்லை.

மிக்க மகிழ்ச்சி. மனித நேயம் மிக்க செயல். ஆனால் ஜெர்மனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அகதிகள் என்ற அளவில் மட்டும் இவர்களை ஏற்று பாதுகாக்க வேண்டும். மிக முக்கியமாக இவர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க வேண்டும். சிரியாவில் நிலைமை சீரான பிறகு திருப்பி அனுப்பி விடுங்கள். ஆனால் ஜெர்மானிய குடியுரிமையை மட்டும் வழங்கி விடாதீர்கள். வழங்கி விட்டால் இன்று மத சார்பற்ற ஜெர்மனி நாளை இஸ்லாமியக்க படும்.

சிலுவை போர்களால் பெற்று தர முடியாத இஸ்லாமிய ஐரோப்பாவை , இது சுலபத்தில் பெற்று விடும். கொஞ்சம் யோசித்து பார்த்தால், இது எங்கோ யாரோ மிக திட்டமிட்டு செய்கிறார்கள். ஒரு இஸ்லாமிய நாட்டில் உள் நாட்டு கலவரத்தை ஏற்படுத்துதல். மக்களை துரத்தி விடுதல். மற்ற இஸ்லாமிய தேசங்கள் இவர்களை ஏற்க மறுத்தல், சொல்லி வைத்தார் போல், இந்த மக்கள் எல்லாம் ஐரோப்பிய தேசங்களில் தஞ்சம் புகுதல். 

ஒரு ஐரோப்பிய தேசம் இந்த மக்களை ஏற்ற உடன், மற்ற இஸ்லாமிய தேசங்கள் அந்த அகதிகளுக்கான மறு வாழ்வு பணத்தை கொடுத்தல். இது மிக கோர்வையான நிகழ்வு. நூல் பிடித்து கொண்டு போகிறது.

இது மிக சரியாக திட்டமிட்டு, கிறிஸ்தவர்களின் ஐரோப்பாவில் , இஸ்லாமிய குடியிருப்பை ஏற்படுத்தி விடுகிறது. மக்கள் தொகை பெருக்கம் என்ற ஒரே விஷயம், மிக சுலபமாக இஸ்லாத்தை அங்கே பெரும்பான்மை பெற செய்து விடும்.

அப்புறம் என்ன தஞ்சம் கேட்டு வந்த கூட்டம், அந்த தேசத்தில் பல தலைமுறை தொட்டு வாழ்ந்த கூட்டத்தை அடித்து விரட்டி, அவர்கள் கலாசாரத்தை அழித்து, அதை இஸ்லாமிய தேசமாக மாற்றும். இது கதை அல்ல. வரலாறு. மீண்டும் அந்த வரலாறு நிகழ்த்த பட கூடிய அபாயத்தை ஐரோப்பா எதிர் நோக்கி இருக்கிறது,.

உலக வல்லரசுகளான  அமெரிக்கா, ரஷ்யா , சீனா என்ற தேசம் இல்லாது போய் இருந்தால் , என்றோ ஐரோப்பா ஆக்கிரமிக்க பட்டு இருக்கும். முதல் இரண்டும் மத வெளிப்படை தன்மை கடைபிடிக்க பட்டாலும் , இரண்டும் கிறிஸ்தவ ஆளுகைக்கு உட்பட்டவை. இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதல் பற்றிய அச்சம் ரோம் வரை படர்ந்து  இருக்கிறது என்பது சர்வ நிச்சயம்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீதான தாக்குதலை வல்லரசுகள் செய்ய வேண்டும் என்ற அழுத்தம் ரோமில் இருந்து கூட வந்து இருக்கலாம். யார் கண்டது.

ஐரோப்பாவில் இஸ்லாமிய அகதிகள் தஞ்சம் புகுவது,கண்டிப்பாக ரோமிற்கு நல்ல செய்தி அல்ல.

சிலுவை போர்கள் என்றும் சீக்கிரம் முடிவதில்லை.


0:04/1:02

21,830,646 Views
BBC News uploaded a new video: #MigrantCrisis.
"Welcome to Germany" - People applaud and greet migrants with gifts as they arrive in Munich
‪#‎DesperateJourneys‬
Live updates: http://bbc.in/1LQprLQ

Wednesday, September 9, 2015

பா ராகவனின் “ஆர்.எஸ்.எஸ்” புத்தகம்.

பா ராகவனின் “ஆர்.எஸ்.எஸ்” புத்தகம். இஸ்லாத்தின் உன்னத அரசனான சலாவுதீன் என்ற மனித நேயம் மிக்க மாமன்னரை பற்றி அறிமுகம் செய்தது பா ராகவனின் “நிலமெல்லாம் ரத்தம்” புத்தகம். அவரின் மற்றும் ஒரு படைப்பு இது.

ஆர்.எஸ்.எஸ் பற்றிய எல்லா கருத்துக்களையும் களம் காண்கிறது. ஆர்.எஸ்.எஸ்-இன் தேச பக்தி பற்றி சந்தேகம் இல்லை என்று சொல்லும் அதே வேளையில், ஆர்.எஸ்.எஸ் இன் மீதான மாற்று மதத்தவரின் குற்றச் சாட்டை மறுக்காமல் பொது தளத்தில் வைக்கிறது.

தீண்டாமை அற்ற இயக்கம் ஆர் ஸ் ஸ் என்ற உண்மையை அழுத்தமாக ஆதாரத்துடன் சொல்கிறது. பாகிஸ்தானுடனான யுத்தத்திலும், சீனாவுடனான யுத்தத்திலும் ஆர்.எஸ்.எஸ் ஆற்றிய பங்களிப்பை புத்தகம் உறுதி செய்கிறது. இந்திய தேசம் இயற்கை பேரிடரில் சிக்கி தவிக்கும் போது, எப்போதும் இந்திய பேரரசின் பாதுகாப்பு படைகளுடன் இணைந்து பங்கேற்கும் செயலை மறைக்காமல் சொல்கிறது.

கோவாவை இந்திய தேசத்துடன் இணைத்து வைக்க அடித்தளம் அமைத்தது ஆர்.எஸ்.எஸ் என்ற வரலாற்றை அறிமுகபடுத்துகிறது.

காஷ்மிர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை உறுதி செய்ய ஆர்.எஸ்.எஸ் போராடிய கதையை சொல்கிறது. வட கிழக்கு மாநிலங்களில் , கிறிஸ்தவ மிசனரிகள் உடனான ஆர் ஸ் ஸ் இன் யுத்தத்தை பற்றி பேசுகிறது
பாபர் மசூதி இடிப்பு பற்றியும், மீனாட்சிபுரம் மதம் மாற்றம் பற்றியும், ஒரிசாவின் பாதிரியார் கொலை பற்றியும் சொல்லும்போது ஆர்.எஸ்.எஸ் இன் குழந்தைகள் என்று மற்ற ஹிந்து இயக்கங்களை குறிப்பிட்டு சொல்கிறது.

ஆர் ஸ் ஸ் பற்றி விருப்பு வெறுப்பு இல்லாமல் எழுதி இருக்கிறார். முடிந்தால் வாங்கி படியுங்கள். என்னை பொறுத்தவரை விமர்சனங்கள் ஆர்.எஸ்.எஸ் பற்றி இருந்தாலும், ஆர் ஸ் ஸ் என்ற ஒரு இயக்கம், இந்திய தேசத்தில் எழாமல் போய் இருந்தால் , இந்திய என்ற தேசத்தை மேலும் மதத்தின் பெயரால் வெட்டி பிளந்து இருப்பார்கள்.

ஹிந்து மதம் பெரும்பான்மை பெற்ற எந்த மாநிலமும் இந்த தேசத்தில் தனி நாடு கோருவதில்லை. ஹிந்து மதம் அழிந்து கிறிஸ்தவம் , இஸ்லாம் பெரும்பான்மை பெற்ற மாநிலங்கள் , நாகலாந்து , மிசோரம் , காஸ்மீர்.... மாநிலங்களில் தான் தனி நாடு கேட்டு போராட்டங்கள் அதிக அளவில் நடை பெறுகின்றன என்பதை நாம் கவனத்தில் கொண்டால், ஆர் ஸ் ஸ்-இன் இருப்பு இந்த தேசத்தில் இருத்தல் மிக அவசியம் மட்டும் அல்ல, ஹிந்துக்களின் வலிமையான வாழ்க்கைக்கு ஆதாரம் என்பதை நாம் புரிந்து கொள்வோம்.

"பாகிஸ்தான் போகும் ரயில்" - குஷ்வந்த் சிங் (Train to Pakistan).

" பாகிஸ்தான் போகும் ரயில்" - குஷ்வந்த் சிங் (Train to Pakistan).
கிழக்கு பதிப்பகம் -விலை 175
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் இடையே நடைபெற்ற சம்பவங்களை பின்னணியாக கொண்டு எழுதப்பட்ட நாவல். மிகுந்த சர்ச்சையில் சிக்கியது இது வெளி வந்த போது. தென் இந்திய மக்களை விட, வட இந்திய மக்கள் ஏன் பாகிஸ்தான் மீது வெறுப்பில் உள்ளனர் என்பதை சொல்லும் நாவல்.

தேசத்தை வெட்டி பிளந்தவர்களால் , இரு வேற்று மத சார்ந்த காதலை வெட்டி பிரிக்க முடியாமல் போன கதை பற்றி பேசுகிறது. தேசமே சகிப்புத்தன்மையை தூக்கி சாக்கடையில் எறிந்த போது, ஹிந்து, முஸ்லிம், சீக்கிய மத மக்கள் வாழ்ந்த கிராமம் மட்டும் சகோதரர்களாக வாழ முற்பட்ட கதை.

இந்தியாவில் இருந்து செல்லும் முஸ்லிம் அகதிகளை ஏற்றி கொண்டு பாகிஸ்தான் போகும் ரயிலை தொடர்ந்து கதையும் பயணிக்கிறது. நம்மால் தான் அதற்கு மேல் தொடர முடியவில்லை.

ஜின்னாவின் முஸ்லிம் லீக் ஆரம்பித்த "நேரடி நடவடிக்கை " என்ற செயல் பல ஹிந்து மக்களை கொன்றொழிக்க, பதில் நடவடிக்கை இந்தியாவில் ஆரம்பித்தது என்பது தான் வரலாறு.

இந்த புத்தகம் கற்பனை கலந்த கதை என்று வாதிடுபவர்கள் இன்று பாகிஸ்தான் என்ற தேசத்தில் ஹிந்துக்களின் சதவிகிதததை எடுத்து பார்த்தால், கதையின் பெயர்கள் கற்பனையாக இருந்தாலும் , அதன் கதையின் கரு, பிரிவினையின் போது தான் பிரசவித்து இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய தேசம் என்று வக்காலத்து வாங்கும் நடுநிலை வாதிகளின் கவனத்திற்கு. இஸ்லாமியர்கள் பெரும்பான்மை பெற்றதால் அங்கு இஸ்லாமியர் அல்லாதவர் வாழ வழி அற்று போனது என்ற உண்மையை மற்றும் உணருவதில்லை.

ஹிந்துக்கள் பெரும்பான்மை பெற்ற தேசம் தான் தன்னை மதசார்பற்ற நாடக பறை சாற்றியது. அதற்கான பலனை என் தேசம் இப்போது அனுபவிக்கிறது.
இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது, பாகிஸ்தானில் இருந்து வந்த முதல் ரயில் தான் ஹிந்துக்கள் சீக்கியர்களின் உயிரற்ற பிணத்தை எடுத்து வந்தது என்பது வரலாறு.

வரலாற்றை வரிகளில் விட்டு விடாமல், நமது வாழ்வாதாரத்தின் வாழ்வின் ஒரு பகுதியாக வரித்து கொண்டால். அடுத்த தலைமுறையின் வாழ்க்கை இந்த தேசத்தில் வளமாகும்.

மறைக்கப்பட்ட இந்தியா "- எஸ். ராமகிருஷ்ணன்

மறைக்கப்பட்ட இந்தியா "- எஸ். ராமகிருஷ்ணன். விகடன் பிரசுரம். விலை 290.
உலக சரித்திரத்தில் எப்போதும் நம் பழமை வாய்ந்த கலாச்சார பெருமை மிக்க பாரதம் தனக்கான ஆளுமையை எல்லா இடத்திலும் பதிவு செய்து வந்து இருக்கிறது. என் இந்திய தேசம் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் உலகத்திற்கு அளித்து வந்து இருக்கிறது. அது ஆன்மிகமானாலும் சரி, அறிவியல் ஆனாலும் சரி.

புத்தகத்தின் பல பகுதி அதற்கான பக்கங்களை வாசிக்க நமக்கு தருகிறது. உச்சத்தில் இருந்த பருத்தியை எப்படி ஆங்கிலயேன் அழித்தான் என்பதை உதாரணத்துடன் படிக்க நேர்கையில் உள்ளே உக்கிரம் வருகிறது. சீன பயணிகளின் கண்டு அதிசியத்த இந்தியா என்று எழுதப்பட்டதை படித்த நம்மிடம், பழமை வாய்ந்த இந்தியாவில் பயணித்த ரஷ்யா பயணிகளின் பயணத்தோடு நம்மை அழைத்து செல்கிறது. 

சாந்தி நிகதேன் என்ற புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தின் கதையை நம்மிடம் கற்பிக்கிறது. இந்திய சுதந்திர போரில் ஈடுபட்ட தலைவர்களின் சுவாசத்தை சுமந்த சென்ற ஆசாத் இந்தியா வானொலியின் வரலாற்றை பேசுகிறது. இன அழிப்பிற்கு உட்பட்ட ஆர்மினியர்களின் அவல நிலைமையும் , அவர்களை தாயாக அரவணைத்த இந்தியாவையும் அறிய வைக்கிறது.

தீண்டாமை என்ற தடுப்பு சுவர், இந்தியாவின் மக்களில் மனதில் கட்டப்பட்டு இருந்ததை அறிந்த ஜோதிராவ் புலே என்ற மனிதர், அதை இடிக்க புறப்பட்டதையும், அதற்காக காந்திக்கு முன்னரே அவருக்கு மகாத்மா என்ற பட்டம் வழங்கப்பட்டதையும் பட்டியல் இடுகிறது. தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த இவர், மேலே படிக்க வேண்டும் என்ற ஊக்குவித்த இஸ்லாமிய ஆசிரியரையும், இவர் தொடங்கிய பள்ளிக்கு பல பிரமாணர்கள் உதவி செய்ததையும் அறிய நேரும் போது, நற்பண்பு என்பது சாதி மதம் கடந்த மனிதர்களின் நல்ல அன்பு என்பதை ஆணித்தரமாக சொல்கிறது.

புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்ட புரட்ட நம் மனதின் மன நிலையும் புரண்டு போகிறது. நமக்கான வரலாறு நமக்கான இந்த பாரத தேசத்தில் புதைந்து இருக்கிறது. வெறும் எலும்பு கூடுகளை எடுத்து காட்டி நம்மை ஏமாளியாக்கி கொண்டு இருந்தார்கள். மறைக்க பட்ட இந்தியா புத்தகம், புதைக்கபட்டு நம்மிடம் இருந்து, மறைக்க பட்ட மாமனிதர்களை பற்றி பேசுகிறது. அவர்களின் ஊடே நமது மகதோன்மை கொண்ட மாட்சிமை தாங்கிய நமது தாய் தேசத்தை பற்றிய அறிவை நமக்கு ஊட்டி செல்கிறது.
Suganthan Rajamanickam's photo.

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...