Wednesday, June 15, 2016

தலித் உரிமை பெற விரும்பும் கிறிஸ்தவ திருசபைகள்

கிறிஸ்தவ மதம் மாறிய தாழ்த்தபட்டவர்களுக்கு , தலித் உரிமம் வேண்டும் என்ற சில கிருஸ்வத சபைகள் கோரிக்கை விடுப்பது , ஒன்றை தெளிவாக உறுதி செய்து உள்ளது. பரிசுத்த ஆவியின் அன்பை பெற்ற பின்னரும் , இவர்களால் சாதி என்ற சாத்தனை வெல்ல முடிய வில்லை.

கிட்டத்தட்ட இவர்கள் சொல்வது" நீ கிறித்தவ மதத்திற்கு மாறினாலும் இயேசு உன்னை சாதியில் இருந்து ரட்சிக்க மாட்டார். அதற்கு பதிலாக ஹிந்து மதத்தில் இருந்து தலித் உரிமை நீ பெற்று வந்தால் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உன்னை ரட்சிக்கும்."

வருத்தமாக இருக்கிறது, இறைவனின் மகனுக்கு எவ்வளவு இழுக்கை இந்திய திருசபைகள் பெற்று தருகின்றன. இவர்கள் உண்மையில் இயேசுவின் அன்பை இயம்புவார்கள் என்றால் என்ன சொல்லி இருக்க வேண்டும் ," கிறிஸ்தவத்திற்கு மாறிய பின்னரும் , இங்கே யாராவது சாதி பார்த்தால், அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல , அவர்கள் எந்த திரு சபையிலும் சேர்த்து கொள்ள பட மாட்டார்கள்"

இதை சொல்ல இவர்கள் தயாராக இல்லை. மாறாக இவர்கள் என்ன சொல்கிறார்கள், ஒரு கிறிஸ்தவ பெண் ஹிந்து ஆண்மகனை மணம் முடித்தால் , அந்த பெண் இறந்த பிறகு அவளை எங்கள் இடங்களில் அடக்கம் செய்ய மாட்டோம்.

ஒரு பெண் இறந்த பிறகும் ஹிந்து ஆண் மகனை திருமணம் செய்த தீட்டு தொடரும். அதனால் அனுமதிக்க மாட்டோம். (நடிகை பிரியங்கா சோப்ரா அவர்களின் பாட்டிக்கு இதுதான் நிகழ்ந்தது)

ஆனால் ஹிந்து மதத்தின் சாதி உரிமையை மட்டும் நாங்கள் பெற்று கொள்ள தயாராக இருக்கிறோம்.  என்ன கதை இது, ஏன் இந்த போலித்தனம்.

நீதிமன்றம் நிராகரித்து விடும் என்பது மட்டும் அல்ல,  கிறிஸ்தவத்தில் சாதி இருக்கிறது என்பதை உலகம் அறிய ஒத்து கொள்ள வேண்டும் என்ற பயத்தினால் , அரசியல்வாதிகள் பின்னர் அலைகின்றனர்.

ஹிந்து மதத்தின் தாழ்த்தப்பட மக்களை ரட்சிக்க வந்ததாக சொன்ன கிறிஸ்தவம் , அங்கே இங்கே சுற்றி மீண்டும் ஹிந்து மதத்திடமே கேட்கிறது "எம் மக்களை காக்க தலித் உரிமையை எங்களுக்கு கொடுங்கள் என்று"


அந்த பரிசுத்த ஆவி உண்மையில் பதறி போய் இருக்கும்!!!!

No comments:

Post a Comment

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...