Saturday, July 9, 2016

நாம் எழுதுவது அந்த ஒரு சதவீத இஸ்லாமிய மக்களின் பாதுகாப்புக்கும்

உண்மை. இப்படி ஒரு சதவீத மக்கள் நம் இடையே வாழ்கிறார்கள். இவர்களுக்கு நன்றி. என் பள்ளி கூட நண்பர் ஒருவரும் இருந்தார் குடும்ப சூழல் காரணமாக பத்தாவது படிப்புடன் நின்று போனார். முஸ்லிமாக இருந்தாலும், எல்லா கோவிலுக்கும் வருவார். சிறிது கூட தயக்கம் இன்றி சேலம் கோட்டை மாரியம்மன் அம்மனின் பிரசாத்தை ஏற்றுக் கொள்வார். நாம் அல்லாவை ஏற்று கொண்டது போல. தவறுதலாக குங்குமும் அவர் முன் நீட்டபட்டாலும் சிறிது தயக்கம் இன்றி வைத்து கொள்வார். அவர் வீடு கண்டித்தாலும் கண்டு கொள்ள மாட்டார். தீவிர இறை நம்பிக்கை உடையவர். 

அந்த சிறு வயதிலே அவருக்கு இறை என்பது எங்கும் உள்ளது என்பதில் நம்பிக்கை கொண்டவர். ஏசுவையும் அவர் மறுத்தது இல்லை. ஆனால் துரதிஸ்டவசமாக இவர்கள் ஒரு சதவீதம் தான். நாகரிக சமுதாயத்தில் இவரை போன்றவர்களே அமைதியை கொண்டு வருபவர்கள். அவர் வீடு அருகில் வந்த பிறகு தான் நெற்றியில் உள்ள விபூதியை அழிப்பார்.

மற்றவர்கள் நம்மை சுற்றி ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள் என்ற காரணத்திற்காக , மத சகிப்புத்தன்மை உள்ளவர்களாக தங்களை காட்டுகின்றனர் என்பதாக தோன்றுகிறது. நாம் கொடுத்தால் மறுக்காமல் இந்த கையில் பிரசாதம் வாங்கி அந்த கையில் நம் கண் முன்னே கொட்டுவார்கள். எனக்கு புனிதமான ஒன்று அவர்களுக்கு தீட்டு. 99% சதவீத மக்கள் இப்படித்தான் எண்ணம்.

நாம் எழுதுவது அந்த ஒரு சதவீத மக்களின் பாதுகாப்புக்கும் சேர்த்து தான்.




feeling happy.Jayabharatham
என்ன இருந்தாலும் இஸ்லாமிய பெண்கள் ஆண்கள் அளவிற்கு வெறிபிடித்தவர்களாக இல்லாமல் நமது இந்துசகோதரிகளுடன் வாஞ்சையாக பழகும் "பாயம்மா" என்ற பட்டப்பெயரோடு ஆயிரக்கணக்கான பென்மனிகள் இருக்கவே செய்கின்றனர்!
...இதோ இந்த சகோதரியும் பிள்ளைகள் இருந்தும் கைவிடப்பட்ட ஒரு இந்து முதியவரை முதியோர் காப்பகத்தில் வைத்து பராமரித்தது
மட்டுமன்றி அவரின் இறப்பை ஒரு இந்து சடங்காக செய்து, அந்த சிதைக்கு தானே மகளாக முன்னின்று நடத்திய அந்த போற்றுதலுக்குரிய மனதை என்ன சொல்லி பாராட்டுவது?
இப்படிப்பட்ட நல்ல மனிதப்பண்பு
இந்த மண்ணில் மதங்களை கடந்து பரினிமக்க செய்வது நமதுனைவருக்குமான பெருமை!
 

இயேசு தமிழ் கடவுள் என்ற சொன்ன கிறிஸ்தவருக்கு மறுமொழி-3

 


மற்றும் ஒரு மறு மொழி, "இயேசு தமிழ் கடவுள், ஆதாரம் பைபிள். தமிழ் எப்ப வந்தது இயேசு பிறக்கும் முன்னரே, பைபிள் எப்ப வநதது இயேசு வந்த பின்னர்"

ஏன்பா நான் சரியா தானே பேசுறேன்:)
"
நண்பரே. 2000 முன் வந்த கிறிஸ்தவத்தை வைத்து கொண்டு, அதற்கு முன்னே இருந்து வந்த பெருமை வாய்ந்த தமிழ் மக்களை அவமான படுத்தாதீர்கள். பைபிள் உங்களுக்கு புனித நூல், எனக்கு அல்ல. அதை நினைவில் வையுங்கள். உங்கள் நம்பிக்கை அதில் இருந்தால் உங்களோடு வைத்து கொள்ளுங்கள். அது வரலாற்று ஆதாரம் என்ற யார் நம்புகிறார்களோ அவர்களிடம் போய் உங்கள் கதைகளை கூறுங்கள். பைபிளை வைத்து கொண்டு பேசும் உங்களிடம் நான் ஏன் விவாதம் செய்ய வேண்டும். பைபிளை நீங்கள் நம்புங்கள் , நாங்கள் நம்ப தேவை இல்லை. பைபிளில் உள்ள முரண்பாடுகளை சுட்டி காட்டி ஆயிரம் புத்தகம் வந்து உள்ளது. அதை என்னாலும் காட்ட முடியும். ஆனால் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை காயபடுத்தும் என்ற நாகரீகம் கருதி அமைதியாக உள்ளோம்.

அதில் எழுதி இருப்பது உங்களுக்கு தான் ஆதாரம். அதை வரலாற்று ஆதாரம் என்று நாங்கள் ஏன் ஏற்க வேண்டும். எங்கோ ஒரு ஐரோப்பிய தேசத்தில் எழுதப்பட்ட புத்தகத்தை நீங்கள் வரலாறு ஆதாரம் என்று நம்பினால் நம்பி கொள்ளுங்கள். அதே ஐரோப்பிய மண்ணில் யூத இனத்தில் “பைபிள் ஒரு போலி, ஏசுவே ஒரு கற்பனை’ என்று சொல்லி புத்தகம் வந்து இருக்கிறது . அதை நான் சான்று என்று நான் சொன்னால் ஏற்று கொள்வீரா. என் வேலை பைபிளை மறுப்பது ஏற்பது அல்ல. கிறிஸ்து தமிழர் என்று நம்பினால் நம்பி கொள்ளுங்கள். என்னை பொறுத்த வரை அவர் தமிழரல்ல. அவர் தமிழராக இருந்தாலும் எனக்கு அதை பற்றி ஒரு அக்கறையும் இல்லை. அவர் வேறு தேசத்தில் வாழ்ந்த சித்தர்.

என் தமிழ் மண்ணில் கிறிஸ்துவிற்கு முற்ப்பட்ட எழுதிய புத்தகத்தை பற்றி தான் நான் நம்புவேன். கி.மு என்று நான் சொல்ல வந்தது , கிறிஸ்தவிற்கு முற்பட்ட காலங்களை. கிறிஸ்துவிற்கு முன் , கிறிஸ்துவிற்கு பின் என்ற காலத்தின் வேறுபாட்டை நான் அறியாமல் இல்லை. உங்களை மாதிரி ஆயிரம் பேரை பார்த்து இருக்கின்றேன். "சார் நான் கிறிஸ்தவன் அல்ல, ஆனால் ஒரு புத்தகம் படித்தேன் சார் , அதை பற்றி பகிர்ந்து கொள்ள வந்தேன் , சரி என்ன புத்தகம் என்று கேட்டால் , பைபிள் சார்" என்று ஆரம்பித்த மத வியாபாரிகளை பார்த்து இருக்கின்றேன். சங்க தமிழ் பாடல்கள் எதுவும் இயேசுவின் பெயரை குறிப்பிட்டது இல்லை.

உலகில் உயரந்தது எல்லாவற்றையும் கிறிஸ்தவர்கள் களவாடி அது கிறிஸ்துவிற்கு சொந்தமானது என்று கதை விடும் வீடியோ நிறைய உண்டு. களவாடி தான் கிறித்துவிற்கு பெருமை சேர்க்க வேண்டுமா. கிறிஸ்தவம் வந்த பிறகு தான் கிறிஸ்து என்ற பெயர் வந்ததது. அதற்கு முன்னரே தமிழ் வந்து விட்டது என்று சொன்னால், தமிழரின் கடவுள் இயேசு என்று அடித்து விடுகீர்கள். உங்கள் போப் ஆண்டவரே மயக்கம் போட்டு விடுவார் நீங்கள் சொல்லும் கதைகளை கேட்டு. இயேசு தான் தமிழ் கடவுள் என்று கதை கட்டுவதன் மூலம், “மக்களே பார்த்தீரா, இயேசு தான் தமிழ் கடவுள் , இவரை மட்டும் வணங்குங்கள்"  என்று, தனதே உயர்ந்தது என்ற நீச சிந்தனையை எம் மக்களிடம் வளர்க்க தானே.

நான் என் தமிழ் மண்ணின் பெருமைக்காக பேசுகின்றேன், நீங்கள் கிறிஸ்துவின் பெருமைக்காக பேசி கொண்டு உள்ளீர்கள். ஆதாரம் என்று சொல்லி காட்டி பேசுவது பைபிள், ஆனால் நான் எங்கே மத மாற்ற முயன்றேன் என்று நாடகமாடி கொண்டு உள்ளீர்கள்
பேரை கூட தமிழ் பெயரில் வைத்து கொள்ள முடியாத நீங்கள் எனக்கு கிறிஸ்து ஒரு தமிழர் என்று கதை சொல்ல வந்தீரோ. கொடுமை. உங்களுடன் பேசுவதே வீண் வேலை.

எந்த தமிழ் ஆன்மிக பாடல்கள் இயேசுவின் பெயரை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறது. மறைமுகமாக இயேசுவை சொல்கிறது அல்லது வேறு பெயரில் சொல்கிறது அல்லது இது எல்லாம் இயேசுவை தான் குறிப்பிடுகிறது, என்று கதை சொல்லாதீர். அப்புறம் நாங்களும் சொல்வோம், இயேசு அடிக்கடி சொல்வாரே “என் தந்தையை நம்பு” , அந்த தந்தை வேறு யாரும் அல்ல எங்கள் சிவபெருமான் தான்.

இந்த பதிவுக்கு நீங்கள் என்ன மறுமொழி போட்டாலும் எனக்கு கவலை இல்லை. எங்கள் தமிழ் மண்ணை பற்றி பேசி கொண்டு இருக்கும் போது, எப்போது பைபிளை உள்ளே கொண்டு வந்தீரோ அப்போதே நிறைய பேருக்கு நீங்கள் யார் என்று விளங்கி இருக்கும்.

நலமாக வாழுங்கள். நன்றி

இயேசு தமிழ் கடவுள் என்ற சொன்ன கிறிஸ்தவருக்கு மறுமொழி-2

 


"இது தான் காலம் காலமாக நீங்கள் செய்வது. கிறிஸ்தவம் வந்த பிறகு தான் தமிழ் பெருமை வளர்ந்தது அல்லவா? நல்லது அந்த நினைப்போடு நீங்கள் இருங்கள், மதம் மாற்றுங்கள். யார் வந்தும் தூக்கி விடும் நிலையில் தமிழன் இருந்தது இல்லை. தமிழையும் அதன் பெருமையும் உணர , நம் மண்ணோடு கலந்து அந்த நம்பிக்கை இருக்க வேண்டும். உங்கள் நம்பிக்கை அயல்நாட்டில் இருக்கும் பொது, மண்ணோடு உறவானது எப்படி வரும்.

என் ஆன்ம நம்பிக்கை நான் பிறந்த மண்ணில் இருக்கிறது. எப்படியாவது இந்த மண்ணை தாழ்த்தி அயல் நாட்டில் இருந்து வந்த மதம் பெரிது என்று நிருபிக்க எத்தனை முயற்சி செய்கிறீர்கள். அதாவது தமிழ் தோன்றும் முன்னாடி கிறிஸ்தவம் வந்து விட்டது. உங்களை போன்ற மதமாற்றும் நபரை பலரை பார்த்து இருக்கின்றேன். பேசி இருக்கின்றேன். நீங்கள் பைபிளில் இருந்து தமிழை பார்த்தால் அப்படித்தான் தோன்றும். பைபிளுக்கே வேறுபட்ட பிரதிகள் உள்ளன. 

ஆமாம் ஆமாம் இயேசு தமிழ் கடவுள் தான், எங்கள் போகர் எழுப்பி அனுப்பிய சித்தர் , ஏசுவிற்கு உயிர்ப்பித்து கொடுத்த கதை எங்களுக்கும் தெரியும். அதனால் தான் தமிழ் நாட்டில் ஆங்கிலத்தில் பெயரை கிறிஸ்தவர்கள் வைத்து கொள்கிறார்கள் போலும். ஜீசஸ் என்ற பெயரே தமிழ் பெயர் இல்லை போங்க நண்பரே. ஏதாவது குழந்தகளை மதம் மாற்றுங்கள். இயேசு ஒரு சித்தர். அவருக்கு முன்பே பல சித்தர்களை கண்ட பூமி எங்கள் தமிழகம். அற்புதங்கள் எங்களுக்கு புதிது அல்ல.

இயேசுவை வேறு எங்காவது விற்க முயற்சி செய்யுங்கள் , என்னிடம் வேண்டாம். இங்கே பதிவு எழுதிய யாராவது, எங்கள் தெய்வம் உயரந்தது என்று எழுதினார்களா? அது தான் எங்கள் தமிழ் பண்பாடு. இயேசுவை விற்றல் என்பது ஆபிரகாம மதங்களின் பண்பாடு. அதை நன்றாக செய்கீர்கள். நன்றாக செய்யுங்கள். கி.மு விற்கு முற்பட்டது தமிழர் வரலாறு என்பது உலக வரலாறு. நாங்கள் சொல்வது உலகில் சிறந்ததில் நாங்களும் ஒன்று. உலகில் சிறந்தது எல்லாம் எங்களுது என்று சொல்லி களவாடுதல் ஆபிரகாம் மதங்களின் கொள்கை.

மத மாற்றத்தில் இது ஒரு வகை. எது உயர்வானது என்று மக்கள் நம்புகிறார்களோ, அதை தங்கள் உடையது என்று சொல்லுதல் , அந்த மக்களை தம் பக்கம் திருப்பும் வழி. ஏசுவிற்கு முற்பட்டது எங்கள் மொழி, அதன் கலாச்சாரம் என்று நாங்கள் சொன்னால். தமிழ் கடவுள் இயேசு என்று நீங்கள் மறு மொழி சொன்னால் சிரிப்பாக வரும்.

கடவுளுக்கு எல்லா மொழியும் ஒன்று தான். மொழிக்கு என்று கடவுளை வைத்தவர்கள் தமிழர்கள். அந்த இறைவனின் பெயர் முருகன். இயேசு இல்லை. பஞ்ச பூதங்களை வழிபட்டான் தமிழன். இயேசு என் தந்தையை நம்பு என்றார். இயேசுவை நம்பியவர்கள் பஞ்ச பூதங்களையும் நம்பாமல் , அவரின் தந்தையையும் நம்பாமல் விடுத்து ஏசுவை நம்பினார்கள். இயேசுவை தெய்வம் என்று ஏற்றார்கள்.  தமிழர்கள் இன்றும் பஞ்ச பூதங்களை வழிபடுகிறார்கள், தெய்வம் என்று ஏற்றார்கள்

உங்களை கேலி செய்ய இதை சொல்ல வில்லை. இயேசுவை நாங்களும் கொண்டாடுகின்றோம் ஒரு சித்தர் என்று. அவர்தான் தமிழ் கடவுள் என்று சொன்னால் உங்கள் கிறிஸ்தவர்களே சிரிப்பார்கள். தமிழர்கள் மதிக்கும் கடவுள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

நான் படித்த கிறிஸ்தவ பள்ளி எப்படி அழகாக மதம் மாற்றுவார்கள் என்பதை அறிவேன். நீங்கள் ஒன்றும் புதிதாக சொல்ல வில்லை, உங்களுடன் பேசுவதற்கு புதிதாக ஒன்றும் இல்லை.

நீங்கள் என்ன சொன்னாலும் நான் ஏற்க போவதில்லை. நான் சொல்வதை நீங்களும் ஏற்க போவதில்லை. இறை அருள் புரியட்டும் நம் இருவருக்கும்"

இயேசு தமிழ் கடவுள் என்ற சொன்ன கிறிஸ்தவருக்கு மறுமொழி-1




ஒரு அன்பருக்கு எழுதிய மறுமொழி"
David David நண்பரே, இன்னும் எத்தனை நாட்கள் ஆரியன் திராவிட கதை சொல்லி நம் மக்களை ஏமாற்றுதல் நடைபெறும். ஆரியன் அந்நியன் என்று வைத்து கொண்டால் , கிறிஸ்தவமும் , இஸ்லாமும் அந்நியம் அல்லவா ?. என் பெயர் சுகந்தன், என் பெயர் சொன்னாலே நான் தமிழன் என்று அறியப்படும் . உங்கள் பெயர் டேவிட், இது தமிழ் பெயரா? நீங்கள் தமிழரல்ல என்று சொல்ல வருவது என் நோக்கம் அல்ல.
ஆனால் ஐரோப்பவிலும் , அரபு நாட்டிலும் வைத்து கொண்டு இருக்கும் பெயரை இங்கே நாம் ஏன் வைக்க வேண்டும். தமிழ் நாட்டில் ஆதி ஆதியாக வந்து தமிழ் ஊர்களின் பெயர்களை இங்கே வெஸ்டன் பெயரில் மாற்றி கொண்டு இருப்பது கிறிஸ்தவமும் , இஸ்லாமும் தானே.
நீங்கள் சொல்லும் ஆரியன் , என் குல தெய்வத்தை மதித்தான். என் முன்னோர்கள் வழிபட்ட மரபை மதிக்கின்றான். ஆனால் கிறிஸ்தவமும் இஸ்லாமும் என் பாட்டன் முப்பட்டான் வழிபட்ட எங்கள் குல தெய்வங்களை சாத்தான் என்று இழிவுபடுத்துகிறது.
உங்களால் ஆரியன் என்று சொல்லப்படும் கூட்டம் என் ஆன்ம நம்பிக்கையை அழிக்க வில்லை,அரவணைத்தது. ஆனால் கிறிஸ்தவமும் இஸ்லாமும், எங்கள் கோவில்களை அழிக்க துடிக்கின்றன.
என் குல தெய்வ கோவிலில் நாங்கள் தான் முதன்மையானவர்கள் , எந்த உயர் குடியும் உரிமை கொண்டாட முடியாது. அழைத்தால் எல்லா உயர் குடியும் வந்து , எங்கள் குல தெய்வத்திற்கு படைக்கப்பட்ட உணவை அருந்தி போகும். ஆனால் கிறிஸ்தவமும் இஸ்லாமும் , அது சாத்தானுக்கு படைக்கப்பட உணவு என்று மறுக்கும்.
இன்னொன்றும் நினைவில் வையுங்கள், ஆரியன் வந்து பல நூறு ஆண்டுகள் கழித்து தான் கிறிஸ்தவமும், இஸ்லாமும் உள்ளே நுழைந்தது. எப்படி பார்த்தாலும் அவர்கள் சீனியர்கள்.
நான் கீழ் சாதி அல்லது மேல் சாதி என்பது பிரச்சினை அல்ல, அப்படி வந்தால் அதை எதிர் கொள்ள நான் தயார். அதற்கு என்று என் தமிழ் கலாச்சாரத்தை விட்டு கொடுக்க தயாராக இல்லை. நெற்றி நிறைய எங்கள் தமிழ் பெண்கள் அணியும் குங்குமதை தவறு என்று சொல்லியது ஆரியன் அல்ல. அந்நிய மதங்களான கிறிஸ்தவமும், இஸ்லாம தான் தவறு என்று சொல்கிறது. மாட்டை தெய்வம் என்று எம் தமிழ் இனம் கொண்டாடுகிறது. அதை வெட்டி திங்க ஒரு கூட்டம் துடிக்கிறது , அவர்களை எப்படி தமிழர் என்று ஏற்பது.
உலகின் மூத்த இனம் எம் தமிழ் இனம் , என் அடையாளம் தமிழ். கிறிஸ்தவமும், இஸ்லாதிற்கும் முற்பட்ட நாகரிகம் எங்கள் தமிழரக்கு சொந்தமானது. அதற்கு வரலாற்று சான்றுகள் எங்கள் தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில்கள்.
கிறிஸ்தவமும், இஸ்லாமும் உள்ளே நுழைந்த எந்த தேசத்தின் ஆதி கலாச்சாரம் நிலைத்து நின்றது இல்லை. ஏன் எனில் இந்த இரு மதங்களின் குணம் அப்படி பட்டது. இதை நான் சொல்ல வில்லை. உலகத்தின் வரலாறு சொல்கிறது.
நானும் தி க வை நம்பினேன். சாதி மறுத்தல் என்பது  எல்லா சாதியையும் மறுத்தல் ,கடவுள் மறுப்பு என்பது எல்லா கடவுளையும் மறுத்தல். அப்படி இவர்கள் இல்லை. ஹிந்து மதத்தை மட்டும் குறி வைத்து அடிக்கிறார்கள், அதன் ஊடே தமிழர்கள் நம்பிக்கையும் சேர்த்து அடிக்கிறார்கள். அதனால் தான் தி க வை விமர்சித்தால் பல சிறுபான்மை அன்பர்கள் ஓடி வந்து தி க விற்காக வாதம் செய்கிறார்கள்.

எந்த ஹிந்துவும் மனு தர்மம் படித்து வைத்து கொண்டு சாதி பார்க்க வில்லை.
நான் ஹிந்து இல்லை என்று சொன்னால் வருத்தம் இல்லை. ஆனால் நான் எந்த சாதியாக இருந்தாலும் , நான் தமிழன். அதை அழிக்க ஆரியன் முயல வில்லை. கிறிஸ்தவமும் இஸ்லாம்மும் விரும்புகின்றன. அது தான் பிரச்சினை

Saturday, July 2, 2016

!!சுவாதி கொலை வழக்கு-பிராமண பெண் என்பதால்?

உண்மை. குறிப்பாக பல பெண்களை பாருங்கள் , இப்படி ஒரு விஷயமே நடக்காத மாதிரி , மற்ற பதிவுகளை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அயல்நாட்டில் இருந்து நமக்கு அன்பை போதித்த அமெரிக்க இந்தியர்கள் அமைதியாக உள்ளனர். இந்நேரம் இந்த பெண் சிறுபான்மை மதத்தை சேர்ந்தவராக இருந்து இருந்தால், பல ஹிந்து மங்கைகள் கண்டன குரல் எழுப்பி இருப்பார்கள் , தேசிய அளவில் மிக பெரிய பூகம்பம் வெடித்து இருக்கும். எல்லா தொலை காட்சிகளும் , சிறுபான்மை மதத்தை சேர்ந்த பெண், ஹிந்துவால் கொல்லபட்டார் என்று ஒப்பாரி வைத்து இருக்கும்.

ஆனால் கொல்லப்பட்டது ஒரு ஹிந்து பெண் என்றவுடன் ,கொலையாளியின் மதத்தை மறைத்து விட்டன. அதுவும் எதிர்த்து பேச வலுவற்ற பிராமிண சமூகத்தை சேர்ந்த பெண் என்றவுடன் எல்லா குரல்களும் அமுங்கிவிட்டன.

அவள் பிராமிண பெண் என்பதற்காக , இறந்த பெண்ணை இன்னும் இழிவுபடுத்தி , இன்னும் அந்த பெண்ணை வெட்டி கொண்டு இருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு பிராமிண சமூகத்தை இழிவு படுத்தி கொண்டு இருப்பிர்கள்?

மற்ற சமுதாய மக்கள் எல்லாம் நல்லவர்கள் மாதிரியும் , பிராமிண சமூகம் மட்டும் கெட்டவர்கள் போலவும் எழுதியும் எதிர்த்தும் கொண்டு இருக்கிறார்கள் .

ஒரு நண்பர் சொன்னார் பிராமிண பெண்கள் திமிரானவர்கள். நம் வீட்டு பெண்கள் யாரும் திமிரானவர்கள் இல்லையா என்று கேட்டவுடன் கோபித்து கொண்டு போய் விட்டார். என்ன கோமாளி தனம் இது? . எதற்கு எதை இணை வைத்து பேச வேண்டும் என்று அறிவு கூட வேண்டாமா?

எந்த சமூக பெண்கள் திமிராக இல்லை ? எந்த சமூக ஆண்கள் திமிராக இல்லை ?

ஒரு தங்கை சொன்னாள் " அண்ணா நான் எழுதினால் , நான் பிராமண பெண் என்று எண்ணிக் கொண்டு தர குறைவாக என் பதிவில் பின்னோட்டம் இடுகிறார்கள் " என்று வருத்தபட்டாள்

நீ ஏன் உன் முக புத்தகத்தை யார் வேண்டும் என்றாலும் படிக்கலாம் , பின்னூட்டம் இடலாம் என்று வைத்து இருக்கிறாய். மாற்றி அமைத்து கொள். உன் முக புத்தகத்தில் நான் கண்டிகின்றேன் என்று ஒரு வார்த்தை பதிவு செய் போதும் , பக்கம் பக்கமாக பதிவு எழுத தேவை இல்லை என்றேன். ஆனால் அவள் அமைதியாகி விட்டாள்.

ரஜினியை பற்றி விமர்சித்து விட்டேன் என்ற அரை மணி நேரம் சண்டைக்கு வந்த தோழி ஒருவர் ஆளே காண வில்லை இப்போது.

கோவில்களிலும் , கல்லூரிகளிலும் ஆடை கட்டுப்பாடு என்றவுடன் எத்தனை வீர் மகளிரை நாம் முக புத்தகத்தில் பார்த்தோம்.

துரதிஸ்டவசமாக, சுவாதிக்கு , நமது பெண்கள் பெரிய அளவில் எதிர்ப்பை காட்டவில்லை. மௌனமாகி விட்டனர்.

இந்த மௌனம் இன்னும் இவர்களில் பல பேரை பலி கொடுக்கும் என்பதை இவர்கள் அறியாமல் இல்லை.

கொரோனா வைரஸ்

எப்போதும் போல சுகாதாரமாக இருங்கள். முடிந்த வரை பாலில் மஞ்சள் கலந்து தினமும் பருகுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை உங்கள் உடலில் அதிகபடுத்தி க...